Published:Updated:

ஒகேனகலுக்கு ஒரு வாரமாக பஸ் இல்லை: சுற்றுலா பயணிகள் அவதி

 ஒகேனகலுக்கு ஒரு வாரமாக பஸ் இல்லை: சுற்றுலா பயணிகள் அவதி
ஒகேனகலுக்கு ஒரு வாரமாக பஸ் இல்லை: சுற்றுலா பயணிகள் அவதி

தர்மபுரி: ராமதாஸ் உள்ளிட்ட பா.ம.க.வினரின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சித் தொண்டர்கள் நடத்தி வரும் வன்முறை சம்பவங்களால் ஒரு வாரமாக வடமாவட்டங்களில் சரிவர பஸ் ஓடவில்லை. குறிப்பாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு கடந்த எட்டு நாட்களாக பஸ் இல்லாததால் இங்கே சுற்றுலா வரும் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

 ஒகேனகலுக்கு ஒரு வாரமாக பஸ் இல்லை: சுற்றுலா பயணிகள் அவதி

தர்மபுரியில் இருந்து 50 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது ஒகேனக்கல் அருவி. இதில் குளித்து மகிழவும், காவிரியாற்றை சுற்றிப்பார்க்கவும் ஆண்டுமுழுக்க மக்கள் இங்கே சுற்றுலா வருவார்கள். அதிலும் குறிப்பாக கோடை விடுமுறை நேரத்தில் குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக அதிகம் பேர் இங்கே வருவது வழக்கம்.

ஆனால், கடந்த ஏப்ரல் 30-ம் தேதி முதல் ஒகேனகலுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. அன்று ராமதாஸ் கைது செய்யப்பட்ட தகவல் பரவியதுமே, இந்த ஏரியாக்களில் பா.ம.க.வினரின் வன்முறை சம்பவங்களும் ஆரம்பமானது. பொதுவாக ஒகேனக்கல் அமைந்திருக்கும் பென்னாகரம் தாலுகா முழுக்க பா.ம.க கட்சிக்கு சற்று செல்வாக்கு அதிகம். அதனால் இப்பகுதியில் உடனடியாக இயல்பு வாழ்க்கை பாதிக்கும் நிலை ஏற்பட்டது.

##~~##
ஒகேனக்கல் அருவியில் தற்போது மிகக் குறைவான அளவே தண்ணீர் விழுகிறது என்றாலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை நேரம் என்பதால் இந்த சீசனில் கூட்டம் களைகட்டும். ஆனால் மேற்சொன்ன காரணங்களால் கடந்த எட்டு நாட்களாக பயணிகள் வரத்து கணிசமாக குறைந்து  அருவி வெறிச்சோடிக் கிடக்கிறது.
 ஒகேனகலுக்கு ஒரு வாரமாக பஸ் இல்லை: சுற்றுலா பயணிகள் அவதி

தர்மபுரியில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பென்னாகரம் வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகிறது. அங்கிருந்து 20வது கிலோ மீட்டரில் இருக்கும் ஒகேனகலுக்கு செல்ல வாகன வசதிகள் எதுவும் இல்லை.

சொந்த வாகனங்களில் வருவோரும் கூட அந்த ஏரியாவின் வன்முறை நிகழ்வுகளை கேட்டதும் வந்த வழியிலேயே ஊர் திரும்பி விடுகின்றனர். ஒகேனகலுக்கு சுற்றுலா செல்ல பஸ்ஸில் குழுவாக வருவோர், தர்மபுரி அல்லது பென்னாகரம் வரை சென்றபின் உள்ளூர் வாகனங்களை வாடகைக்கு அழைத்தால் கூட அவர்களும் பயத்தில் வர மறுத்து விடுகின்றனர். மொத்தத்தில் இந்த சம்மருக்கு ஒகேனகலை பார்க்க திட்டமிட்டிருந்த சுற்றுலாவாசிகள் பலரின் ஆசைக்கும் பா.ம.க&வினரின் வன்முறை சம்பவங்கள் வேட்டு வைத்து விட்டது.
 
-எஸ்.ராஜாசெல்லம்