Published:Updated:

காங்கிரஸ் கட்சியின் முதல் திருநங்கை நிர்வாகி! - மகிளா காங்கிரஸ் தேசியப் பொதுச் செயலாளராக அப்சரா ரெட்டி நியமனம்

காங்கிரஸ் கட்சியின் முதல் திருநங்கை நிர்வாகி! - மகிளா காங்கிரஸ் தேசியப் பொதுச் செயலாளராக அப்சரா ரெட்டி நியமனம்
காங்கிரஸ் கட்சியின் முதல் திருநங்கை நிர்வாகி! - மகிளா காங்கிரஸ் தேசியப் பொதுச் செயலாளராக அப்சரா ரெட்டி நியமனம்

மகிளா காங்கிரஸ் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளராகப் அப்ரசா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் கட்சி வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை ராகுல் காந்தி தலைமையில் சந்திக்க தீவிரமாகத் தயாராகி வருகிறது. அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற ராகுல் காந்தி, கூட்டணி அமைப்பதிலும் கட்சியில் சில மாற்றங்கள் செய்வதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் மகளிர் அணியான மகிளா காங்கிரஸின் தேசியப் பொதுச் செயலாளராக அப்சரா ரெட்டி நியமிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாகக் காங்கிரஸ் கட்சி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. 

திருநங்கையான அப்சரா ரெட்டி, ஆங்கிலப் பத்திரிகைகளின் சென்னைப் பதிப்பின் இணைப்பு இதழ்களுக்கு ஆசிரியராக இருந்தவர். தமிழ்த் திரை நட்சத்திரங்களுக்கு நெருக்கமான தோழி. பிரபல ஊடகவியலாளராக அறியப்பட்ட இவர், தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார். இவர் மகிளா காங்கிரஸின் முதல் திருநங்கை தேசிய பொதுச் செயலாளர் என்ற பெருமையைப் பெறுகிறார்.

ஊடகங்களில் பணியாற்றி வந்த அப்சரா, 2016-ம் ஆண்டு அ.தி.மு.க கட்சியில் சேர்ந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க கட்சி இரண்டாகப் பிரிந்தபோது அவர், தினகரன் அணியில் இருந்தார், இந்நிலையில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அப்சராவுக்கு மகிளா காங்கிரஸின் தேசிய பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டிருப்பதைப் பலரும் வரவேற்றுள்ளனர். திருநங்கை ஒருவரைத் தேசிய பொதுச் செயலாளராக நியமித்த முதல் கட்சி என்ற பெருமையையும் பெறுகிறது காங்கிரஸ்.