‘`இந்தக் கனி மடியில் விழாதா என, பலர் எதிர்பார்த்தனர். அது என் மடியில் வந்து விழுந்தது. அதை என் இதயத்தில் எடுத்து வைத்துக் கொண்டேன்” - ‘நாடோடி மன்னன்’ விழாவில் இப்படிச் சொன்னார் அண்ணா. அந்த அண்ணாவின் பாசத்துக்குரிய எம்.ஜி.ஆர், ‘இதயக்கனி’யும் தந்தார் ‘அண்ணா தி.மு.க’-வையும் படைத்தார். அந்த அண்ணா தி.மு.க-வும் அதன் ஆட்சியும் இப்போது பி.ஜே.பி-யின் கைப்பிள்ளையாக மாறிவிட்டது.

அ.தி.மு.க-வுக்கு எம்.ஜி.ஆர், 15 ஆண்டுகள்தான் தலைமை தாங்கினார். ஜெயலலிதாவோ 27 ஆண்டுகள் ‘ஒன்மேன் ஆர்மி’யாகக் கட்சியை வழி நடத்தினார். ஜெயலலிதா இல்லாத இரண்டாண்டுக் கால அ.தி.மு.க-வும் அதன் ஆட்சியும் எப்படியிருக்கிறது?

ஜெயலலிதா மறைந்தபிறகு கட்சியை வழி நடத்தக்கூடிய ஆளுமைத் திறன் யாருக்குமில்லை. பன்னீர்செல்வமும் எடப்பாடியும் ஒருங்கிணைப்பாளராகவும் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து கட்சியை வழி நடத்திக்கொண்டிருக்கிறார்கள். 46 ஆண்டுக் கால வரலாற்றைக் கொண்ட... மாநிலத்தை ஆண்டுகொண்டிருக்கிற... நாடாளுமன்றத்தில் மூன்றாவது இடத்தில் இருக்கிற ஒரு கட்சிக்கு, தலைவனைக்கூடத் தேடிக் கண்டெடுக்க முடியவில்லை. பன்னீரையும் எடப்பாடியையும் அ.தி.மு.க உறுப்பினர் அட்டையே இல்லாத மோடி வழி நடத்திக்கொண்டிருக்கிறார்.

ஜெயலலிதாவின் அப்போலோ அட்மிட் முதல் அணிகள் இணைப்புப் பேச்சுகள் வரை நடக்கும் அத்தனை சம்பவங்களுக்கும் ‘மாஸ்டர் பிரைன்’ டெல்லிதான். ‘எடப்பாடியும் பன்னீரும் இணைய வேண்டும்’ என்பதில் மற்றவர்களைவிட பி.ஜே.பி-க்குத்தான் அதிக அக்கறை. ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் அணிகள் இணைப்பு நடந்த அன்றே, பன்னீருக்குப் பட்டாபிஷேகம். துணை முதல்வர் பதவிப் பிரமாணத்தைத் தாண்டி, எடப்பாடியையும் பன்னீரையும் கரம் பற்றிக் கைகுலுக்க வைத்தார் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ். ஜெயலலிதா இல்லாத அரசிலும் இதே டெல்லியின் தலையீடுகள்தான்... இதே குழப்பங்கள்தான்.

மோடி அரசு கொண்டு வந்த உதய் மின் திட்டத்தை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்தவர் ஜெயலலிதா. அவர் இறந்தபிறகு உதய் திட்டம் நிறைவேறியது. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை அவசரச் சட்டமாகக் கொண்டுவந்த காலத்திலிருந்தே எதிர்த்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதா வீட்டுக்குப் போய் மோடி பார்த்தும் நிறைவேற்ற முடியாத அந்தத் திட்டத்தை அவர் அப்போலோவில் இருந்தபோது நிறைவேற்றிவிட்டார்கள். ஜெயலலிதா துணிச்சலோடு எதிர்த்தார். எடப்பாடியும் பன்னீரும் பயத்தோடு ஆதரிக்கிறார்கள். தலைவியின் கொள்கைகளைத் தீயிட்டு, டெல்லிக்குத் தீபம் ஏற்றுகிறார்கள். ஆனால், இவர்கள் அடிக்கடி உச்சரிக்கும் மந்திரம் மட்டும் ‘அம்மா வழியில் நடக்கும் அரசு.’

பொதுப்பணித் துறை கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியும் அந்தத் துறையை வைத்திருந்த பன்னீரும் ஒன்றாக மொட்டை போட்டு, திருப்பதியில் போஸ் கொடுத்தார்கள். பன்னீர் முதல்வராக இருந்தபோதுதான் சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு. சேகர் ரெட்டி கைதானார்். அவரைக் கொழுத்த கிடாவாக மாற்றிய பன்னீர்செல்வத்தை மட்டும் வருமானவரித் துறை வஞ்சிக்கவே இல்லை. ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த ரெய்டுகள் சாத்தியமா? துணை ராணுவத்தைத் துணைக்கு வைத்துக்கொண்டு, தலைமைச் செயலகத்திலேயே சோதனை போட முடியுமா?

மத்திய அரசுக்குத் தாளம் போடுகிறவர்கள்தான், அம்மா மறைவுக்குப் பிறகு கட்சிக்கு சின்னம்மாதான் தலைமை தாங்க வேண்டும் எனத் தாளம் போட்டார்கள். எங்கே பதவி கிடைக்கும்... எங்கே பதவி நிலைக்கும்... என நிறம் மாறும் பச்சோந்திகள் ஆனார்கள்.

‘அம்மா வைத்திருந்த அதே ராணுவ அமைப்புபோல கட்சியைத் தொடர்ந்து கொண்டு செல்ல ஒரே வழி சசிகலா கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்க வேண்டும்’ என அன்றைக்கு ‘சின்னம்மாதாசனாக’ மாறி அறிக்கை விட்ட பன்னீர்செல்வத்தை, தடம் மாற்றினார்கள். ‘குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்ற ஆசை நிச்சயம் நிறைவேறாது’ என அந்த அறிக்கையில் சொன்ன பன்னீரைக் குழம்ப வைத்துப் பிடித்துச் சென்றார்கள்.

சசிகலா பொதுச் செயலாளராக ஆதரவு தந்தவர்... அதற்கான தீர்மானத்தை அவர் கரங்களில் ஒப்படைத்தவர்... சசிகலா முதல்வராக ராஜினாமா செய்தவர்... இத்தனைக்கும் காரணமான ‘மிஸ்டர் பணிவு’ திடீர் ‘துணிவு’ பெற்று, ஜெயலலிதா சமாதியில் புரட்சித் தீ மூட்டினார். இந்த புத்தர் ஞானோதயம் பெறுவதற்கு போதிமரமாக இருந்தது டெல்லி. மோடியின் மந்திரிகளே பிரதமரைப் பார்க்க முடிவதில்லை. ஆனால், எம்.எல்.ஏ-வாக இருந்த பன்னீர், நினைத்த நேரத்தில் மோடியைச் சந்தித்தார். ‘சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனம் செல்லாது’, ‘இரட்டை இலைக்கு உரிமை’ எனத் தேர்தல் கமிஷனில் நடந்த முறையீடுகள் பன்னீரை வைத்தே பதம் பார்க்கப்பட்டது.

ஆர்.கே.நகர் பணப் பட்டுவாடா புகாரில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுக்குள் நுழைந்தது வருமான வரித்துறை. அந்த ரெய்டுக்குப் பிறகுதான் சசிகலா ஆதரவு எடப்பாடி அரசு, பி.ஜே.பி ஆதரவு அரசாக மாறியது. பன்னீரை வளைத்தது போல எடப்பாடியையும் மடக்கினார்கள். ‘பண மதிப்பிழப்பு’ விவகாரத்தில் நடந்த வருமானவரித் துறை சோதனையில் எடப்பாடி உறவுகளும் சிக்கினார்கள். நெடுஞ்சாலைத் துறை கான்ட்ராக்டர் செய்யாதுரை, சத்துணவுத் திட்டத்தில் முட்டை வழங்கும் நிறுவனம், டி.ஜி.பி. அலுவலகம், என அடுத்தடுத்து ரெய்டு பயத்தைக் காட்டி, பன்னீரைப் போலவே எடப்பாடிக்கும் தலைநகர் கம்பளம் விரித்து, சுருட்டிக்கொண்டது. தன்னை முதல்வராக்கிய சசிகலாவை விட தன்னைச் சிறையில் அடைக்காத மோடியே பெட்டர் என நினைத்தார் எடப்பாடி. அது தினகரனையே எதிர்ப்பதற்கான துணிச்சலை எடப்பாடிக்குக் கொடுத்தது. எடப்பாடி - பன்னீர் தரப்பில் யாரும் கைதாகவில்லை. ஆனால், இரட்டை இலைச் சின்னத்தைப் பெற பேரம் பேசிய தினகரன் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

எடப்பாடி - பன்னீர் அணிக்கு இரட்டை இலைச் சின்னத்தைக் கொடுத்த அடுத்த நாளே ஆர்.கே.நகர்த் தேர்தல் தேதி அறிவிப்பு. ஜெயலலிதா நின்ற ஆர்.கே. நகரில் வெற்றி மகுடம் சூட்ட மாண்புமிகுக்கள் உழைத்த உழைப்பு, தினகரன் நின்றபோது எங்கே போனது? தலைவி நின்ற தொகுதியைக்கூடத் தக்க வைக்க முடியவில்லை. திருச்சி மேற்கு, சங்கரன்கோவில், புதுக்கோட்டை, ஏற்காடு, ஆலந்தூர், ஸ்ரீரங்கம், ஆர்.கே.நகர், திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி என ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நடந்த இடைத் தேர்தல்களில் எல்லாம் ஜெயித்தவர்கள், அவர் இல்லாதபோது நடந்த ஆர்.கே.நகர்த் தேர்தலில் தோற்றார்கள். ஆர்.கே.நகரில் நடந்தது இடைத்தேர்தல் அல்ல. அ.தி.மு.க-வின் உட்கட்சித் தேர்தல். அதில் அ.தி.மு.க-வின் செல்வாக்கு யாருக்கு எனத் தெரிந்துவிட்டது. ஜெயலலிதா காலத்தில் சில சுயேச்சைகளுக்கு ஆதரவு அளித்து அவர்களை ஜெயிக்க வைத்த அ.தி.மு.க., ஒரு சுயேச்சையிடமே தோற்றுப்போன வரலாற்றை எழுதினார்கள் எடப்பாடியும் பன்னீரும். ஆர்.கே.நகர் பயம்தான் திருவாரூரிலும் திருப்பரங்குன்றத்திலும் தேர்தலைச் சந்திக்காமல் பதுங்கக் காரணம். உயர்நீதிமன்றத்தில் குட்டுப்பட்டாலும்கூடப் பரவாயில்லை. உள்ளாட்சி மன்றத்தில் அசிங்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்குத்தானே உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருக்கிறார்கள்.

தன் கட்சிக்காரர் தவறு செய்தால் அவரின் கட்சிப் பதவியை, அமைச்சர் பதவியைப் பறிப்பார் ஜெயலலிதா; எம்.எல்.ஏ பதவியைப் பறித்ததில்லை. அந்தப் பாதகத்தையும் செய்தார்கள். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரைத் தகுதிநீக்கம் செய்தார்கள். ஆனால், அந்தத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்திச் சந்திக்க மட்டும் அவர்களுக்குத் திராணி இல்லை.

கருணாநிதி இறந்தபிறகு ‘கலைஞருக்குப் புகழாஞ்சலி’ கூட்டங்களை நடத்தியது தி.மு.க. கருணாநிதியின் சிலையைத் திறக்க அகில இந்தியத் தலைவர்களை அழைக்கிறார்கள். ஜெயலலிதா இறந்தபிறகு இரங்கல் கூட்டம் ஒன்றையாவது அ.தி.மு.க. நடத்தியதா? ஜெயலலிதா சிலை திறப்பு விழாவுக்கு மோடியை அழைத்து வர முடிந்ததா?

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவர் பிறந்தநாளுக்காக நடந்த பச்சைகுத்தும் விழாவில் சிறுமிக்குக் கதறக் கதற பச்சை குத்தப்பட்டது சமூக வலைதளங்களில் வைரலானது. இதைக் கேள்விப்பட்டதும், விழாவை நடத்திய அந்தப் பகுதி செயலாளர் பதவியைப் பறித்தார் ஜெயலலிதா. கட்டாயப் பச்சை குத்துவதை விரும்பாத ஜெயலலிதாவுக்கு இப்போது நடந்திருப்பது ‘பச்சை துரோகம்.’

தேர்தல் கமிஷன், வருமானவரித் துறை, அமலாக்கத் துறை, சி.பி.ஐ. என அனைத்துக்கும் அச்சப்பட்டு, அடிபணிந்து கிடக்கிறது அ.தி.மு.க. அரசாங்கத்தின் ‘அதிகார முட்டை’ அம்மிக் கல்லைச் சுக்குநூறாக்கும். ஆளுமை இல்லாத அ.தி.மு.க-வை மட்டும் அது விட்டு வைக்குமா?

‘‘அ.தி.மு.க-வை வெளியில் இருந்து யாரும் வீழ்த்த முடியாது. மோடியை வைத்துக்கொண்டு, மோடி வித்தை காட்டாதீர்கள்’’ எனப் பொங்கல் விழாவில் கொதித்தார் நடராசன். அ.தி.மு.க-வை வெளியிலிருந்துதான் வீழ்த்தியிருக்கிறார்கள்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் ‘‘இந்தியாவின் சிறந்த நிர்வாகி மோடி இல்லை... இந்த லேடிதான்’’ என்றார் ஜெயலலிதா. அவர் இருக்கும் வரையில் அ.தி.மு.க-வை அசைக்க முடியாதவர்கள் அந்த லேடி இறந்தபிறகு, கட்சியைக் கைப்பற்ற முடிகிறது என்றால் ஜெயலலிதாவின் ஆளுமைக்கு இதைவிட வேறு உதாரணத்தைச் சொல்ல முடியுமா?

- எஸ்.ஏ.எம். பரக்கத் அலி, ஓவியம்: பிரேம் டாவின்ஸி