`திமுக கூட்டணி’ தர்பார் களைகட்ட ஆரம்பித்துவிட்டது. கூடவே கலகங்களும் தொடங்கிவிட்டன.

திமுக பொருளாளர் துரைமுருகன், “தோழமைக் கட்சிகள் வேறு; கூட்டணிக்கட்சிகள் வேறு” என்று பேட்டிகொடுக்க, பரபரவென்று கிளம்பியது கூட்டணிக் குழப்பம். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “துரைமுருகனின் கருத்தால் மதிமுக தொண்டர்கள் மன வருத்தத்தில் இருக்கிறார்கள்” என்று குமுறினார். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், ``திமுக தனித்து நிற்பது விஷப்பரீட்சை” என்று வருத்தத்தைப் பகிர, இருவரையும் அறிவாலயத்தில் சந்தித்து சமாதானப்படுத்தினார், திமுக தலைவர் ஸ்டாலின்.

திருச்சியில் நடைபெற்ற ‘மேக்கேதாட்டு’ அணைக்கு எதிரான போராட்டத்தில், ஸ்டாலின் தலைமையில், வைகோவும் திருமாவும் மேடையேறி முழங்கினார்கள். தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சிபிஐ முத்தரசன், சிபிஎம் பாலகிருஷ்ணன் ஆகியோரும் மேடையேறி, ஸ்டாலினைப் புகழ்ந்து தள்ளினார்கள்.

டிசம்பர் 9-ம் தேதி டெல்லி சென்ற ஸ்டாலின், சோனியா காந்தியை நேரில் சந்தித்து, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். ராகுல் காந்தியுடனும் உரையாடினார். இதையடுத்து, “திமுக - காங்கிரஸ் கூட்டணி பலமானது” என்று ராகுல் ட்வீட் போட, ஸ்டாலின், “திமுக - காங்கிரஸ் கூட்டணி இணைந்து இந்த நாட்டின் செழிப்பிற்காகப் பணியாற்றும்” என்று, அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பு குறித்து அரசியல் ஆய்வாளர்கள் சிலர், “கடந்த சில மாதங்கள் வரை, பிஜேபி தரப்பிலிருந்து, திமுகவுடன் கூட்டணிக்குப் பேசப்பட்டது. ஆனால், ஸ்டாலின் ஆர்வம் காட்டவில்லை. `கழகங்கள் இல்லாத தமிழகத்தை கற்பனைகூட செய்து பார்க்காதீர்கள்’ என்று இறங்கி அடித்திருக்கிறார். அதில் அரசியல் பார்வையும் இருக்கிறது.

ஏனெனில், போன தேர்தல்போல இல்லை இந்த முறை. `மத்திய அரசை விமர்சித்து மாநிலத்தில் பெரிதாக ஆதாயம் அடைய முடியாது’ என்ற நிலை மாறியிருக்கிறது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மூலம் மக்களை நேரடியாக பாதிக்கும் விஷயங்களில் மக்கள் வெறுப்பைச் சம்பாதித்திருக்கிறது ஆளும் பாஜக. அதற்கும் மேலாக, ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகர், தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன் போன்ற தமிழக பா.ஜ.க. தலைவர்களின் பொறுப்பற்ற செயல்கள், அந்தக் கட்சியின் மீது மக்கள் மத்தியில் வெறுப்பை உண்டாக்கியிருக்கிறது. ‘பாஜக எதிர்ப்பு’ என்பது தமிழகக் கட்சிகளுக்கு பெரிய அளவில் கைகொடுக்கும். அதனால்தான், காங்கிரஸ் அணியில் இணைவது என்று முடிவெடுத்துவிட்டார்” என்றவர்கள், தொடர்ந்தனர்.

“காங்கிரஸ் மற்றும் மற்ற மாநிலக் கட்சிகள், தமிழகத்தின் தனிப்பெரும் தலைவராக ஸ்டாலினையே பார்க்கிறார்கள். சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர் ராவ் போன்றோர், ஸ்டாலினை வீடுதேடி வந்து சந்திப்பதை வைத்து, இதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். தங்கள் அணிக்கு நாடாளுமன்றத்திற்கு அதிக உறுப்பினர்களை ஸ்டாலின் கொண்டுவருவார் என்பது அவர்களின் நம்பிக்கை. அதனால், ‘தமிழ்நாட்டில் திமுகதான் நமக்கு பெஸ்ட் சாய்ஸ்’ என்று, ராகுல் காந்தி முடிவெடுத்துவிட்டார். ஏற்கெனவே, மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி நடத்துகிறது, காங்கிரஸ். தெலங்கானா தேர்தலில் சந்திரபாபு நாயுடுவை இணைத்துவிட்டார். இதோ இப்போது, ஸ்டாலினும் இணைந்துவிட்டார். ஆக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, பழைய ஃபார்முக்குத் திரும்புகிறது” என்கின்றனர்.

இந்தச் சூழலில், திமுக அணியில் இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் ‘மதிமுக, விசிக’வின் நிலை, இப்போது வரை புதிராகவே இருக்கிறது. “திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்” என்று, வைகோ அறிவிக்கிறார். “திமுக கூட்டணியில் எந்தப் பின்னடைவும் இல்லை” என்று, திருமாவளவன் பேசுகிறார். “ஸ்டாலின்தான் எங்கள் முதல்வர் வேட்பாளர்” என்று, முத்தரசன் அறிவிக்கிறார். ஆனால், திமுக தரப்பிலோ, இந்தக் கட்சிகளை ‘தோழமைக் கட்சிகள்’ என்றே அழைத்துவருகிறார்கள். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள்நலக் கூட்டணி ஏற்படுத்திய மனவருத்தம் தி.மு.க.வின் முன்னணித் தலைவர்கள் சிலருக்கு இருக்கிறது என்கிறார்கள். அதேநேரத்தில் ‘நிரந்தர நண்பர்களும் இல்லை; நிரந்தர எதிரிகளை இல்லை என்பதுதான் அரசியல் கோட்பாடு. இன்றைய சூழலில் மதவாத பா.ஜ.க.வை முறியடிக்க வேண்டுமானால் ம.தி.மு.க, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகளையும் இணைத்த கூட்டணியை உருவாக்குவதே சிறந்தது. நிச்சயம் ஸ்டாலினும் அதைத்தான் விரும்புகிறார்” என்கிறார்கள் அறிவாலயம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

“திமுக மாபெரும் இயக்கம் மற்றும் கட்சி. மாநிலத்தின் எல்லா ஊர்களிலும் அமைப்பு ரீதியாக வலுவாக இருக்கும் கட்சி. வார்டு, ஊராட்சி, ஒன்றியம், வட்டம், மாவட்டம் எனக் களமாடும் நிர்வாகிகள், தொண்டர்களைக் கொண்ட கட்சி. இத்தனையோடு, ஜெயலலிதா இல்லாத சூழலும் ஆளுங்கட்சிமீதான வெறுப்பும் இப்போது சேர்ந்திருக்கின்றன. ஆனால், இத்தனையிருந்தும் ஆர்.கே நகரைக் கோட்டை விட்டார்கள். ‘ஜெயலலிதா இல்லாத தேர்தலிலேயே தி.மு.க. டெபாசிட் இழந்தது’ என்ற பழிச்சொல்லை மாற்ற தி.மு.க. மும்மரமாக இருக்கிறது’ என்கிறார்கள் அவர்கள்.

இன்னொரு பக்கம், `வைகோவும் திருமாவும் திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்து கிறார்கள்’ என்று, அடுத்த கட்சிக்கும் சேர்த்து அக்கறைப்பட்டிருக்கிறார், தமிழக பிஜேபி தலைவர் தமிழிசை. ஆனால், “இதெல்லாம் திமுக கூட்டணியை உடைப்பதற்கான பிஜேபியின் ராஜதந்திரம்” என்கிறார், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ். அவர், ``நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல், முந்தைய தேர்தல்களைவிட முற்றிலும் வேறானது. இந்திய அரசியல் சாசனத்தை, கூட்டாட்சித் தத்துவத்தை, அதன் அடிப்படையான நிறுவனங்களை, நாடாளுமன்ற ஜனநாயகத்தை, மத நல்லிணக்க அரசியலைக் காப்பாற்றுவதற்காக அமைக்கப்படுகிற அரசியல் ஒருங்கிணைப்பு. இதில் திமுக போன்ற மாநில சக்திகளுக்குப் பெரிய பங்கிருப்பதாகக் கருதுகிறோம்.

மாநில அரசின் அதிகாரங்களை மத்திய அரசு பறித்துக்கொண்டுவரும் இந்தச் சூழலில், மாநிலக்கட்சிகளுக்கு நிறைய பொறுப்புகள் இருக்கின்றன. மாநில உரிமைகளைப் பாதுகாக்க எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதே அளவு இந்தியாவின் இறையாண்மையைக் காக்கும் கடமையும், அவற்றுக்கு இருக்கின்றன. ராகுல் காந்தி அதில் உறுதியாக இருக்கிறார். அதனால்தான், திமுக, தெலுங்கு தேசம் போன்ற மாநிலக் கட்சிகள் காங்கிரசுடன் அணிசேர்ந்து வருகின்றன. இது தொடரும்.” என்கிறார்.

மேலும், ``ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு சூழ்ச்சியைச் செயல்படுத்தும் பிஜேபி, தமிழ்நாட்டில், சாணக்கியர் எழுதிய அர்த்த சாஸ்திரத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். அதில் சொல்லப்பட்டிருக்கும் ‘மித்திரபேதம்’ என்பதையே வலையாக விரிக்கிறார்கள். திமுக தலைமையில் ஒன்றிணையும் கட்சிகளிடையே சந்தேக விதைகளை விதைக்கிறார்கள். இல்லாத பிரச்னைகளை பூதாகரமாக்குகிறார்கள். பேனைப் பெருமாள் ஆக்குவது, பிஜேபிக்குக் கைவந்த கலை. அவர்களின் சதிக்கு, திமுக கூட்டணிக் கட்சிகள் பலியாகிவிடக் கூடாது” என்கிறார் பீட்டர் அல்போன்ஸ்.

பொதுவாக, திமுகவின் கூட்டணி அணுகுமுறை குறித்து, “பலகீனமான சூழலில் கூட்டணியை உதாசீனப்படுத்தி, நிறைய தொகுதிகளில் போட்டியிட்டுக் கவிழ்வார்கள். தனித்தே வலுவாக இருக்கும்போது மெகாகூட்டணி அமைத்து, குறைந்த இடங்களில் போட்டியிட்டு சீட்டுகளைத் தாரை வார்ப்பார்கள்” என்று சொல்வார்கள். திமுகவின் கடந்தகாலக் கூட்டணி வரலாறுகள், இதை உறுதிப்படுத்தவே செய்கின்றன. ஆனால், “இம்முறை திமுக கனகச்சிதமாகக் காய்நகர்த்துகிறது” என்கிறார், அரசியல் ஆய்வாளர், ரவீந்திரன் துரைசாமி.

அவர், “தந்தை கருணாநிதியின் பாதையையே மகன் ஸ்டாலினும் பின்பற்றுகிறார். 2009 நாடாளுமன்றத் தேர்தலில், எப்படி அணியைப் பெரிதாக்காமலே கருணாநிதி வெற்றி பெற்றாரோ, அதே பாணியையே ஸ்டாலினும் கையாள்கிறார். 2009-ம் ஆண்டு, ஜெயலலிதாவும் விஜயகாந்த்தும் எம்ஜிஆர் வாக்குகளைப் பிரித்ததால் திமுக அதிக இடங்களில் வெற்றிபெற முடிந்தது. அதையே ஸ்டாலினும் பின்பற்ற நினைக்கிறார். 1989-ம் ஆண்டுத் தேர்தலில், ஜெயலலிதா - ஜானகி இரண்டாகப் பிரிந்து தேர்தலைச் சந்தித்ததைப் போலவே, இப்போதும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். இது கருணாநிதி அணுகுமுறை. ஆக, அணியைப் பெரிதாக்க ஸ்டாலின் விரும்பவில்லை. பிளவுபட்ட அதிமுகவைத் தோற்கடிக்க ‘திமுக - காங்கிரஸ்’ கூட்டணியே போதும் என்று நினைக்கிறார். ஜெயலலிதாவின் இறப்பு அதிமுக வாக்குவங்கியில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 80 சதவிகிதக் கட்சியைக் கையில் வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமிதான் ஸ்டாலினுக்கு எதிரி. எடப்பாடியை வீழ்த்த, பெரிய கூட்டணி தேவையில்லை என்று, ஸ்டாலின் நினைக்கிறார். `கடந்த சட்டமன்றத் தேர்தலில், ஜெயலலிதா இருக்கும் போதே பல இடங்களில் அதிமுகவுக்கு இணையாகவும், அதிமுகவைவிட அதிகமாகவும் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. எனவே, திமுகவின் செல்வாக்கைக் கூடுதலான கட்சிகளுக்கு ஏன் கொடுக்க வேண்டும்’ என்று ஸ்டாலின் நினைக்கிறார்.

ஆனாலும், மதிமுக, விசிகவை முழுவதுமாக விலக்கவும் அவர் விரும்பவில்லை. முக்கியமாக, திருமாவளவனைக் கழற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் திமுக செயல்படவில்லை” என்றவர், தொடர்ந்தார்.

“ஸ்டாலின் முதன்முதலில் `எஸ்டாபிளிஷ்’ ஆகும் தேர்தல் இது. இந்த நேரத்தில், மற்ற தலைவர்களை தேவைக்கு அதிகமாக ஊக்குவிக்க யோசிக்கிறார். கொங்கு மண்டலத்திலும் தென்மாவட்டத்தின் வடக்குப் பகுதியிலும் மதிமுகவுக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு இருக்கிறது. அதனால், மதிமுகவுக்கு ஒன்றிரண்டு இடங்களை ஒதுக்கலாம் என்று, ஸ்டாலின் நினைக்கிறார். கூட்டணியில் பாமகவைச் சேர்ப்பது பலவீனம் என்றே ஸ்டாலின் கருதுகிறார். ‘ஸ்டாலினைவிட அன்புமணி திறமையானவர்’ என்று பாமக தொடர்ந்து முன்னிலைப்படுத்துவதால், பாமகவைச் சேர்ப்பது ‘பொருந்தாக் கூட்டணி’யாக முடியும் என நம்புகிறார். தினகரனும் எடப்பாடியும் ஒன்றிணைந்தால், ஸ்டாலினின் அணுகுமுறையில் மாற்றம் வரலாம்” என்கிறார்.

ஆனால் திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவனின் கருத்தோ ரவீந்திரன் துரைசாமியின் கருத்துக்கு நேர்மாறாக இருக்கிறது.

“திமுக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. எங்களுடன் இப்போது, மதிமுக, விசிக, கம்யூனிஸ்டுகள் உட்பட 20 கட்சிகள் இருக்கின்றன. தேர்தலில் போட்டியிடாத கட்சிகள்கூட எங்களை ஆதரித்து, எங்களுடன் வந்து நிற்கிறார்கள். இவ்வளவு கட்சிகளும் தேர்தலில் கூட்டணியாக வருவார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், இந்தக் கட்சிகளில் இருந்தே தேர்தல் கூட்டணியை உருவாக்குவோம். அதில், எந்தெந்தக் கட்சிகள் இடம்பெறும் என்பதைத் தேர்தல் நேரத்திலேயே அறிவிக்க முடியும். அதே நேரம், திமுக கூட்டணியை உடைப்பதற்கான முயற்சிகள் நடக்கிறது என்பதையும் புரிந்தே வைத்திருக்கிறோம். தேர்தல் தேதியே அறிவிக்கப்படாத நிலையில், `திமுக கூட்டணியில் இருந்து இந்தக் கட்சி விலகுகிறது, அந்தக் கட்சி வருகிறது’ என்று பரவும் பொய்ச்செய்திகளை வைத்துப் பார்த்தாலே, இதைப் புரிந்துகொள்ள முடியும். தேர்தல் தேதியே இன்னும் அறிவிக்கப்படவில்லை. அதற்குள், இதுமாதிரியான கேள்விகளை எழுப்புவது, திமுக கூட்டணியை உடைக்கும் முயற்சியே.

மக்கள் நலக்கூட்டணி அமைத்த கட்சிகள்மீது, திமுகவினரில் சிலருக்கு வருத்தங்கள் இருக்கலாம். ஆனால், சிலபேரின் தனிநபரின் ஆதங்கங்களை வைத்து, தலைமை முடிவெடுக்க முடியாது. இப்போது, ‘பிஜேபி ஆட்சியை அகற்றவேண்டும்’ என்ற ஒத்த கருத்துடன் நிற்கிறோம்.

பாமக போன்ற கட்சிகளைக் கூட்டணியில் சேர்க்கும் எண்ணமும் எங்களுக்கு இல்லை. எங்களுடன் இணைந்து எந்தப் போராட்டத்திலும் கலந்துகொள்ளாத, எங்களுடன் இணைந்து பயணிக்காத கட்சிகளை விலக்கிவைக்கவே விரும்புகிறோம். எங்களுக்கு எதிரான பிரசாரத்தில் இருப்பவர்களை, எங்களுக்கு எதிரானவர்களாகவே பார்க்கிறோம்” என்கிறார் டி.கே.எஸ்.இளங்கோவன்.

தமிழக அளவில் ஒரு வலுவான கூட்டணியை அமைப்பது, பா.ஜ.க.வுக்கு எதிராகத் தேசியளவில் அமையும் கூட்டணியில் ஒரு முக்கியமான இடத்தைப் பெறுவது என்ற இரண்டு முக்கியமான கடமைகள் ஸ்டாலின் முன் இருக்கின்றன. ஆணவக்கொலைகளுக்கு எதிராகவும் மதவாத அரசியலுக்கு எதிராகவும் தொடர்ந்து குரல் கொடுத்து, திராவிட இயக்க பாரம்பரியத்தைத் தக்க வைத்திருக்கிறார் ஸ்டாலின். எனவே ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் தேர்தலைத் தாண்டி கொள்கைக் கூட்டணியாகவும் இருப்பார்கள் என்பதால் தி.மு.க.வினரிடம் ஆர்வமும் ஆதரவும் இருக்கிறது.

இன்னொருபுறம் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் தன்னை நிரூபிப்பதற்கான வாய்ப்பு வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தல்தான். தமிழுணர்வு, திராவிடம், பகுத்தறிவு, சமூகநீதி என்று தொடர்ந்து தமிழக அரசியலை முன்னெடுத்த கருணாநிதி, ஒருகட்டத்தில் தேசிய அரசியலில் தீர்மானகரமான சக்தியாகவும் மாறினார். பல விமர்சனங்கள் இருந்தபோதும் தேசிய அரசியலில் ஈடுபட்டதால் தன் கொள்கைகள் சிலவற்றை நடைமுறைப்படுத்தும் வாய்ப்பும் தி.மு.க.வுக்கு அமைந்தது.

இப்போது தேசிய அரசியலைத் தீர்மானிக்கும் வாய்ப்பு ஸ்டாலினுக்கு அமைந்திருக்கிறது. இதை எப்படி வெற்றிகரமாக செயல்படுத்தப்போகிறார், தமிழகத்தில் ஒரு மாபெரும் கூட்டணி அமைத்து அதைத் தக்கவைக்கப் போகிறார் என்பதில்தான் ஸ்டாலினின் எதிர்காலமும் தி.மு.க.வின் எதிர்காலமும் இருக்கிறது.

தமிழகத்துக்கு உள்ளே, தமிழகத்துக்கு வெளியே தேசிய அளவில் ஸ்டாலின் என்ன முடிவெடுக்கப்போகிறார என்பதை இந்தியாவே உற்றுப்பார்க்கிறது.