Published:Updated:

`கோயிலுக்குள் வந்ததை போல் உணர்கிறேன்’ - கிராம சபை நடத்திய ஸ்டாலின் நெகிழ்ச்சி #Thiruvarur

`கோயிலுக்குள் வந்ததை போல் உணர்கிறேன்’ - கிராம சபை நடத்திய ஸ்டாலின் நெகிழ்ச்சி #Thiruvarur
`கோயிலுக்குள் வந்ததை போல் உணர்கிறேன்’ - கிராம சபை நடத்திய ஸ்டாலின் நெகிழ்ச்சி #Thiruvarur

தமிழகம் முழுவதும் திமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்படுவதாக திமுக அறிவித்திருந்தது அதனை தொடர்ந்து இன்று திருவாரூர் அருகே புலிவலம் ஊராட்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்றது.

`கோயிலுக்குள் வந்ததை போல் உணர்கிறேன்’ - கிராம சபை நடத்திய ஸ்டாலின் நெகிழ்ச்சி #Thiruvarur

இதில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து கம்பன் ரயில் மூலமாக திருவாரூருக்கு ஸ்டாலின் இன்று விடியற்காலை வருகை தந்தார் திருவாரூர் ரயில் நிலையத்தில் செண்டை மேளங்கள் முழங்க திமுகவினர் ஸ்டாலினை  வரவேற்றனர் அங்கிருந்து திருமஞ்சன வீதியில் அமைந்துள்ள அவரது அத்தை வீட்டிற்க்கு சென்றார் பின்னர் காட்டூரில் உள்ள அவரது பாட்டி நினைவிடத்திற்கு சென்று மாலை போட்டு மரியாதை செய்தார்.

இதனை தொடர்ந்து புலிவலத்தில் தென்னை  தோப்பின் நடுவே  திண்ணை போல அமைக்கப்பட்டுள்ள மேடையில் ஸ்டாலின் அமர்ந்து மக்களோடு பேச துவங்கினார் ஸ்டாலின் 3ம் தேதி ஊராட்சி சபை அறிவித்த உடன் அதிமுகவினர் வேண்டுமென்றே சட்டமன்ற கூட்டத் தொடரை அறிவித்தனர் ஆகையால் 3ம் தேதி இந்த ஊராட்சி சபை கூட்டத்தை துவங்கமுடியவில்லை ஆனால் இன்று
கருணாநிதி பிறந்த மண்ணில் நான் ஊராட்சி சபையை  தொடங்கி வைக்கிறேன். தொடர்ச்சியாக திமுக சார்பில் நிர்வாகிகள் சார்பில் ஊராட்சி சபை பிப்ரவரி 17ம் தேதி வரை நடைபெறும் எங்களுடைய முழக்கம் மக்களிடம் செல்வோம் மக்களின் மனங்களை வெல்வோம் 
நான் ஒரு கோயிலுக்கு வந்ததை போல உணர்கிறேன். மகாத்மா காந்தி கிராமம் தான் கோயில் என்று சொல்லுவார். அரசியலே கிராமங்களில் இருந்துதான் உருவாகிறது. கிராமங்கள் இல்லையென்றால் நகரங்கள் இல்லை எம்பி. எம்எல்ஏக்களை தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது. படித்தவர்கள் அதிகமாக ஓட்டு போட வரமாட்டார்கள். நீங்கள் தான் அதிகமாக ஓட்டு போடுகிறிர்கள். இதற்கு முன்பாக கிராம சபை தான் மக்கள் பிரதிநிதள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

`கோயிலுக்குள் வந்ததை போல் உணர்கிறேன்’ - கிராம சபை நடத்திய ஸ்டாலின் நெகிழ்ச்சி #Thiruvarur

கடந்த காலங்களில் கிராமங்களில் கிராம சபை கூட்டம் போட்டு குடவோலை முறையில் மக்களை பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது வழக்கம் இதற்கு சான்று அண்ணா பிறந்த காஞ்சிபுரத்திலும் திருவாரூர் மாவட்டத்திலும் உள்ளது. அந்த முறையில் தான் இந்த கூட்டத்தை நடத்தி வருகிறேன்.

20 சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்திருக்க வேண்டும்  மத்திய அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது. பாஜக வின் ஆட்சி வந்ததற்கு பிறகு இந்தியாவில் சோதனைகள் அதிகமாகிவிட்டது.மோடி பெரிய முதலாளிகளுக்கு ஆட்சி நடத்துகிறார். அதற்கு எடுபிடியாக அதிமுக ஆட்சி செயல்படுகிறது.

`கோயிலுக்குள் வந்ததை போல் உணர்கிறேன்’ - கிராம சபை நடத்திய ஸ்டாலின் நெகிழ்ச்சி #Thiruvarur


கருணாநிதி மற்றும் உயிரோடு இருந்திருந்தால் புயல் பாதித்த மறுநாளே திருவாரூர் மாவட்டத்திற்கு வந்திருப்பார் கருணாநிதி ஹெலிகாப்டரில் என்றாவது ஹெலிகாப்டரில் போனதுண்டா. மக்களிடம் நேரடியாக சென்று அவர்களின் துயரங்களை கேட்டறிவார்.

அன்று ஹெலிக்காப்டரை பார்த்து கும்பிட்டவர்கள் எல்லாம் இன்று ஹெலிகாப்டரில் போகிறார்கள். 

இதனை தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின் பூண்டி கலைவாணன் மட்டுமல்ல நானும் திருவாரூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் தான்‌.  கஜா புயல் நிவாரணம் அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்பட்டுவிட்டதாக இந்த ஆட்சியாளர்கள் சட்டமன்றத்தில் தவறான தகவல்களை பதிவு செய்து வருகின்றனர். 

ஆனால் திமுகவோ கஜா புயல் பாதித்த உடனேயே நேரடியாக இந்த பகுதிக்கு வேண்டியதை செய்தனர் நேரில் நானே வந்து பார்வையிட்டேன் அதன்பின்னர் ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கினோம் இதுதவிர புயல் பாதித்த மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட லாரிகளில் நிவாரண உதவிப் பொருட்களை சேகரித்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முடிந்த அளவுக்கு வழங்கி இருக்கிறோம். 

மத்திய மோடி அரசு ஆட்சிக்கு வந்ததும் ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் ரூ 15 லட்சம் செலுத்துவோம் என தேர்தலுக்கு முன்னர் வாக்குறுதி அளித்தனர் ஆனால் 15 ரூபாய் கூட இதுவரை வங்கிக் கணக்கில் வரவு வைக்க வில்லை 

மத்திய நிதி அமைச்சர் நிதின்கட்கரி மத்திய மோடி அரசு கொடுத்த இந்த வாக்குறுதியை தேர்தலுக்காக பொய் சொன்னோம் என்று அவரே ஒத்துக் கொண்டிருக்கிறார் இந்த நிலையில் திமுகவைப் பொறுத்தவரை சொன்னதையும் செய்வோம்  செய்வதைச் சொல்வோம்
திமுக ஆட்சிக்கு வந்ததும். உங்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்’’ என கூறினார்.