Published:Updated:

மோதல்களும் முனகல்களும்: 4 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 மேட்டர்கள்!

மோதல்களும் முனகல்களும்: 4 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 மேட்டர்கள்!
மோதல்களும் முனகல்களும்: 4 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 மேட்டர்கள்!

இந்த இதழ் ஜூனியர் விகடன்:  https://bit.ly/2RwNsmL

மோதல்களும் முனகல்களும்: 4 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 மேட்டர்கள்!

சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், ஆறுமுகசாமி ஆணையத்தில் சில விஷயங்களை ஆளும் தரப்பின் விருப்பப்படி சொல்ல வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டார். அதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதேநேரத்தில், அமைச்சர் விஜயபாஸ்கரை ராஜினாமா செய்யச்சொல்லி, டெல்லியிலிருந்து நெருக்கடி தரப்பட்டுள்ளது. அதற்கு அவர் தயாராக இல்லை. அதனால், அவரது துறையின் செயலருக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இவை எல்லாவற்றையும்விட, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன், சோமநாதன், கவர்னரின் செயலர் ராஜகோபால், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை, பி.ஜே.பி ஆதரவாளர்கள் என்று ஆளும் தரப்பில் கருதுகிறார்கள். இவர்கள் மூலமாக, தமிழக அரசை பி.ஜே.பி கண்காணிப்பதாகவும் அமைச்சர்கள் சிலர் வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள். இந்தப் பின்னணியில்தான், ராதாகிருஷ்ணனை அமைச்சர்கள் இருவரும் கடுமையாக விமர்சித்துள்ளார்கள். இந்த விவகாரம் அரசுக்கும், நிர்வாகத்துக்கும் இடையில் நடந்துவரும் பனிப்போரை வெளிக்கொண்டு வந்துள்ளது...

மோதல்களும் முனகல்களும்: 4 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 மேட்டர்கள்!

- அமைச்சர்களின் கடுமையான பேச்சுகளும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பதிலடிகளும் தமிழகம் இதுவரை பார்த்திராத நிகழ்வுகள்... இதன் தொடர்ச்சியாக, தமிழக அரசியலில் பல்வேறு பூகம்பங்கள் வெடிக்கலாம் என்கிறார்கள் அதிகாரிகள். இது தொடர்பான முழுமையான பின்னணியை அளிக்கிறது 'ஐ.ஏ.எஸ் போர்க்கொடி... அரசுக்கு நெருக்கடி! - பின்னணியில் பி.ஜே.பி' எனும் கவர் ஸ்டோரி. 

மோதல்களும் முனகல்களும்: 4 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 மேட்டர்கள்!

'இடைத்தேர்தல் தள்ளிவைப்பு குறித்த தகவல் அ.தி.மு.க தரப்புக்கு முன்பே வந்துவிட்டது' என்கிறார்கள். இறுதியில், அனைத்துக் கட்சியினரும் ஆட்சியரிடம் கோரிக்கை வைத்ததைக் காரணம் காட்டி, தேர்தலைத் தள்ளி வைத்துவிட்டது தேர்தல் ஆணையம்....

பூண்டி கலைவாணனை வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பு, அவரிடம் தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவர் தொடர்புகொண்டு, 'தலைவர் குடும்பத்திலிருந்து இங்கு யாராவது நிற்கும் சூழ்நிலை இருப்பதால், நீங்கள் பணம் கட்ட வேண்டாம்' என்று சொல்லியுள்ளார். அதற்கு அவர், `தலைவர் நின்றால் மட்டும் தொகுதியை விட்டுத்தருவேன். இல்லையென்றால் நான் போட்டியில் குதிப்பேன்' என்றாராம் தடாலடியாக. விஷயம், ஸ்டாலின் கவனத்துக்குச் சென்று அதிர்ச்சியடைந்து விசாரித்தாராம்... 

தினகரன் தரப்பு ரொம்பவே அப்செட் ஆகியிருக்கிறார்கள். ஒரு லட்சம் வாக்காளர்களைக் கவர்வதற்குத் திட்டம் எல்லாம் தீட்டியிருந்தார்கள். அதுவுமில்லாமல் இப்போதே கணிசமாகச் செலவும் செய்துவிட்டார்கள். வேட்பாளர் காமராஜும் பெரிய தொகையைக் களத்தில் இறைத்துவிட்டாராம்...

- திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து பின்னணியையும், அதன் தொடர்ச்சியாக அரசியலில் அரங்கேறிய விஷயங்களையும் நம் கண்முன்னே 'திருவாரூர் தேர்தல் ரத்து... தி.மு.க-வில் நடந்த உள்குத்து!' என வைக்கிறார் மிஸ்டர் கழுகு. 

மோதல்களும் முனகல்களும்: 4 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 மேட்டர்கள்!

``ஆனால், திருவாடானை தொகுதிக்கே நீங்கள் செல்வதில்லை என்கிறார்களே?''

``உண்மைதான்... ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு, இரண்டு அல்லது மூன்று முறைதான் தொகுதிப் பக்கம் போனேன். காரணம், எனக்குப் பாதுகாப்பு இல்லை. சமுதாய அமைப்பில் பொறுப்பில் இருக்கிற எனக்கு, பல்வேறு இடங்களிலிருந்தும் மிரட்டல்கள் வருகின்றன. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் சமீபத்தில் நடைபெற்ற கொலைச் சம்பவங்களில், என் சமூகத்தைச் சேர்ந்த நபர்கள்தான் அதிகளவில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

- 'அரசியலில், நிரந்தர எதிரியும் இல்லை; நிரந்தர நண்பனும் இல்லை' என்கிற உண்மையை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது முதல்வர் எடப்பாடி பழனிசாமி - கருணாஸ் எம்.எல்.ஏ சந்திப்பு. டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட கருணாஸின் இந்த திடீர் 'யு டர்ன்' பற்றி அறிய அவரை நேரில் சந்தித்தபோது அளித்த பேட்டியே 'நான் அடிபட்ட பாம்பு... ஜாக்கிரதை!'.

மோதல்களும் முனகல்களும்: 4 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 மேட்டர்கள்!

அது 2010-ம் ஆண்டு. போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா வீடு. இரவு நேரம். முதல் மாடியில் இருக்கும் தனது படுக்கை அறை நோக்கி நடந்தார் ஜெயலலிதா. அங்கு இருந்த டேபிளில் கண்ணாடி டம்ளரில் பால் இருந்தது. அந்த டம்ளரைக் கையில் எடுத்து முகத்தருகே கொண்டுபோனார். ஏதோ ஒரு நெடி வீசவே... அதிர்ந்து போனவர், அப்படியே டம்ளரை டேபிளில் வைத்துவிட்டார். வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட மூட்டுவலி தைலத்தின் நெடி அது. அவசரமாகத் தைலப் பாட்டிலைச் சோதித்தார். அந்தக் கண்ணாடி பாட்டிலை யாரோ திறந்திருப்பதை உணர்ந்தார் ஜெயலலிதா. அந்த அறையின் பணியாளர்கள் நான்கு பேர் மட்டுமே. அவர்களிடம் விசாரணை நடந்தது. எதுவும் புலப்படவில்லை. அப்போதுதான், விரல் ரேகை கண்டுபிடிப்பதில் நிபுணரான வரதராஜனை உடனே கிளம்பிவரும்படி அழைத்திருக்கிறார் ஜெயலலிதா... 'அந்த நான்கு பணியாளர்களின் விரல் ரேகைகளுடன் ஒத்துப்போகவில்லை' என்றிருக்கிறார் வரதராஜன்...

இந்த இதழ் ஜூனியர் விகடன்:  https://bit.ly/2RwNsmL

- ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகச் சர்ச்சைகள் கிளம்புகின்றன. அதையொட்டிதான் தன் மனதில் புதைத்துவைத்திருந்த ரகசியத்தைச் சொல்வதாக வரதராஜன் பகிர்ந்த தகவலே 'பாலில் பாய்சன்? - விசாரணை நடத்திய ஜெயலலிதா!' எனும் சிறப்புச் செய்தி. 

மோதல்களும் முனகல்களும்: 4 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 மேட்டர்கள்!

நாகப்பட்டினத்திலிருந்து புதுச்சேரி நோக்கி வந்த புதுச்சேரி அரசுப் பேருந்தை நிறுத்தி, மூன்று போலீஸாரும் சோதனையிட்டனர். அப்போது, தங்கக் கட்டிகள் கொண்ட பை சிக்கியிருக்கிறது. அதில் என்ன இருக்கிறது என்று சொல்லாமல், அது யாருடைய பை என்று பயணிகளிடம் அவர்கள் கேட்டுள்ளனர். அதற்கு, யாரும் அதற்கு உரிமை கொண்டாடவில்லை. இதனால், தங்கக்கட்டிகள் கொண்ட பையை எடுத்துக்கொண்டு, மூவரும் இறங்கிவிட்டனர். பைக்குள் தங்கக் கட்டிகள் இருந்ததை உயர் அதிகாரிகளுக்கும் அவர்கள் தெரிவிக்கவில்லை. புத்தாண்டு அன்று கிடைத்த பம்பர் பரிசாக அதை மூவரும் பங்கிட்டுக் கொண்டனர்.

ஆனால், தங்கக் கட்டிகளைக் கடத்திவந்த கடத்தல்காரர்கள், தாங்கள் சிக்காமல் இருக்க பையை பஸ்ஸில் வைத்துவிட்டு, காரில் தொடர்ந்துவருவது ஒரு டெக்னிக். அப்படி வந்தவர்கள், தங்களின் கடத்தல் தங்கம் பிடிபட்டதை அறிந்து, மூன்று போலீஸாரிடமும் '30 லட்சம் ரூபாய் கொடுத்துவிடுகிறோம். தங்கக் கட்டிகளைக் கொடுத்துவிடுங்கள்' என்று பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். ஆனால், போலீஸார் மூவருமே, 'நாங்கள் தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்யவில்லை' என்று சொல்லிவிட்டார்கள்...

- நாகை மாவட்டத்தில், வாகனச் சோதனையில் கிடைத்த கடத்தல் தங்கக்கட்டிகள், பின்னர் மரத்தடியில் மீட்கப்பட்டுள்ளன. இதன் பின்னணியில், தங்கத்தைப் பங்கிட்டுக்கொள்ள முயற்சி செய்த மூன்று போலீஸார் சஸ்பெண்டு செய்யப்பட்டதுடன், போலீஸார் மற்றும் கடத்தல்காரர்களின் கூட்டணியும் வெளிச்சத்துக்கு வந்துள்ள பின்னணியை விவரிக்கிறது '3 கிலோ கடத்தல் தங்கமும்... முழிபிதுங்கிய மூணு போலீஸும்!' எனும் செய்திக் கட்டுரை. 

மோதல்களும் முனகல்களும்: 4 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 மேட்டர்கள்!

தீவிர அ.தி.மு.க விசுவாசியான நாகராஜன் ஒரு வழக்கறிஞர். தளவாய் சுந்தரம் மூலம் போயஸ் கார்டனுக்குள் நுழைந்தார். சசிகலா தரப்புடன் நெருக்கமானார். சொத்துக் குவிப்பு வழக்கின் வழக்கறிஞர் குழுவில் இடம்பிடித்து ஜெயலலிதாவின் அறிமுகத்தையும் பெற்றார். இந்த அறிமுகமே அவரை கோவை எம்.பி-யாக ஆக்கியது. தர்மயுத்தத்தினால் அ.தி.மு.க பிளவுபட்டபோது, டி.டி.வி தினகரன் பக்கம் நின்றார். சசிகலாவின் கணவர் நடராஜன் உயிரிழந்தபோது, சசிகலாவின் பரோலுக்கு அ.தி.மு.க எம்.பி-க்கள் யாரும் ஜாமீன் கடிதம் கொடுக்க முன்வராத நிலையில், தாமாக முன்வந்து கடிதம் கொடுத்து விசுவாசம் காட்டினார் நாகராஜன். எல்லாம் சரி, தனக்கு வாக்களித்த கோவை மக்களுக்கு விசுவாசம் காட்டினாரா நாகராஜன்? 

``எம்.பி நாகராஜனா? அப்படி ஒருத்தர் இருக்கிறாரா? ஓட்டுக் கேட்டு வந்தாரே... அவரா? அப்போ பார்த்ததுதான், அவர் முகமே எங்களுக்கு மறந்துபோச்சு. தொகுதி மக்களுக்காக அவர் குரல் கொடுத்து நாங்க கேட்டதே இல்ல.." என்று தொகுதி முழுக்கக் குமுறல்கள் கேட்கின்றன...

- கோவை எம்.பி. நாகராஜனின் செயல்பாடுகளை போஸ்ட்மார்டம் செய்து உரிய மார்க்கும் வழங்கியிருக்கிறது 'என்ன செய்தார் எம்.பி?' பகுதி. 

மோதல்களும் முனகல்களும்: 4 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 மேட்டர்கள்!

``1971-ல இருந்து இங்கே இருக்கேன். 1984-ல இரண்டுமுறை தீப்பிடிச்சு வீடுகள் எரிஞ்சு போச்சு. உடனே அப்போ இருந்த குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் நிலத்தை சமன் படுத்தி ஒவ்வொரு குடும்பத்துக்கும் நானூற்றி பத்து சதுர அடின்னு அவங்களே பிரிச்சுக் கொடுத்தாங்க. அப்ப இருந்து நாங்க எல்லா வரியும் கட்டுறோம். ஆனாலும் எங்க குடிசைகளை அப்புறப்படுத்தியே ஆகணும்னு அதிகாரிகள் துடிக்கிறாங்க. இதுக்குக் காரணம், இங்க உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்புதான். அந்த அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியை விரிவுபடுத்த அவங்க தரப்புல தொடர்ந்த வழக்குதான் காலங்காலமாக இங்க இருந்த எங்களை விரட்டி அடிக்குது. இந்தக்குடிசைப் பகுதி இருக்குறதால அவங்க அடுக்கு மாடி குடியிருப்பை விரிவுபடுத்த முடியலை. தவிர, அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு உள்ள போறதுக்கும் வெளியே போறதுக்கும் ஒரே ஒரு வாசல்தான். அங்க குடியிருக்கிறவங்க இந்தக் குடிசைப் பகுதியைக் கடந்துதான் போகணும். அதுவும் அவங்களுக்கு சங்கடமா இருக்கும்போல. ஆனால், இந்தக் காரணத்துக்காக எங்க மொத்த வாழிடத்தையும் அழிக்குறது என்னங்க நியாயம்..." என்று பெருமூச்சு விடுகிறார் ஒரு பெரியவர்.

- சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தின் இளங்கோ தெரு மக்கள் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் கடந்த சில நாள்களாக வீதியிலேயே கிடக்கிறார்கள். தங்களது வீடுகள் எப்போது வேண்டுமானாலும் இடிக்கப்படலாம் என்கிற அச்சத்திலிருந்து மீளவில்லை மக்கள். தற்போது அந்த மக்களின் கடைசி நம்பிக்கை உச்ச நீதிமன்றம் மட்டுமே. என்ன நடக்கிறது? - கள நிலவரம் தருகிறது 'இடிக்கத் தயாராக இயந்திரங்கள்... வீதியில் மக்கள்! - சொன்னதை செய்வாரா துணை முதல்வர்?' எனும் செய்திக் கட்டுரை.

மோதல்களும் முனகல்களும்: 4 நிமிட வாசிப்பில் ஜூ.வி.யின் 8 மேட்டர்கள்!

கண் எதிரே சகோதரரைப் பறிகொடுத்துத் தவிக்கும் சிபியிடம் பேசினோம். ``என் தம்பி பொன் சுந்தரும், நானும் அழகர் கோயிலுக்கு கார்ல போயிட்டு இருந்தோம். வழியில் எல்லாரும் கள்ளந்திரி கால்வாயில குளிக்கிறத பார்த்துட்டு, நாங்களும் ஆசையா கால்வாயில் இறங்கினோம். எனக்கு முன்னாடி என் தம்பி தண்ணியில காலை வெச்சான். அப்படியே சுழட்டிருச்சு. தண்ணிக்குள்ள ஏதோ ஒண்ணு என் தம்பியை ஒரு விசைபோல வேகமா இழுக்குது... உதவிக்கு ஓடியாந்த மக்களும் 'அங்கே எதுக்கு காலை வெச்சிங்க... அய்யயோ அங்கே சுழல் இருக்கு. யாரும் இறங்க முடியாது' பதறிக்கிட்டு சொன்னாங்க. கண்ணு முன்னாடியே தம்பியை பறிகொடுத்துட்டேன். இங்க நீர் மின் நிலையத்துக்காகச் சுமார் 30 அடி ஆழத்தில் குழி போட்டுச் செயற்கை சுழல் ஏற்படுத்தி இருக்கிறதாகவும், அதில் சிக்கினால் காப்பாற்றவே முடியாதுன்னும் மக்கள் சொன்னாங்க. கடைசியில என் தம்பியை சடலமாதான் பார்க்க முடிஞ்சது..." என்று கண்கலங்கி அழுதவர் ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார்.

- முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வைகை அணைக்குக் கால்வாய் வழியாகச் செல்லும் தண்ணீர், திண்டுக்கல் அணைப்பட்டி அருகே வைகையிலிருந்து பிரித்துவிடப்படுகிறது. அங்கிருந்து மதுரை மாவட்டம் மட்டப்பாறை, வாடிப்பட்டி, அலங்காநல்லூர், கள்ளந்திரி ஆகிய ஊர்களைக் கடந்து மேலூர் வரை செல்கிறது. மதுரை அழகர்கோவில் பகுதியை அடுத்த கள்ளந்திரி, துக்களப்பட்டி ஊராட்சி அருகில்தான் இப்படியான விபரீதங்கள் அடிக்கடி நடந்து, ஏராளமான உயிர்கள் பலியாகின்றன. இதுகுறித்த முழுமையான ரிப்போர்ட் 'காவு வாங்கும் கள்ளந்தரி கால்வாய்! - எச்சரிக்கை... இங்கே செயற்கை சுழல் உள்ளது'.

இந்த வார ஜூனியர் விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க:  https://bit.ly/2LX6uNR

பின் செல்ல