Published:Updated:

மிஸ்டர் கழுகு - கஜானாவுக்கு லாக், தினகரனுக்கு செக்! - பின்னணியில் இளவரசி குடும்பம்

மிஸ்டர் கழுகு - கஜானாவுக்கு லாக், தினகரனுக்கு செக்! - பின்னணியில் இளவரசி குடும்பம்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு - கஜானாவுக்கு லாக், தினகரனுக்கு செக்! - பின்னணியில் இளவரசி குடும்பம்

மிஸ்டர் கழுகு - கஜானாவுக்கு லாக், தினகரனுக்கு செக்! - பின்னணியில் இளவரசி குடும்பம்

மிஸ்டர் கழுகு - கஜானாவுக்கு லாக், தினகரனுக்கு செக்! - பின்னணியில் இளவரசி குடும்பம்

மிஸ்டர் கழுகு - கஜானாவுக்கு லாக், தினகரனுக்கு செக்! - பின்னணியில் இளவரசி குடும்பம்

Published:Updated:
மிஸ்டர் கழுகு - கஜானாவுக்கு லாக், தினகரனுக்கு செக்! - பின்னணியில் இளவரசி குடும்பம்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு - கஜானாவுக்கு லாக், தினகரனுக்கு செக்! - பின்னணியில் இளவரசி குடும்பம்

ற்சாகமாய் வந்த கழுகாரிடம், ‘‘சில விஷயங்களை உம்மைப் போல யாரும் மோப்பம் பிடிக்க முடியாது; ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்யப்போகிறார்; புதிய கவர்னராக சக்தி காந்த தாஸ் நியமிக்கப்படுவார் என்று சொன்னீர், அப்படியே நடந்துவிட்டது. சபாஷ்’’ என்று கைகொடுத்துவிட்டு, “செந்தில் பாலாஜி விவகாரத்தில் என்னதான் நடக்கிறது?’’ என்றோம்.

மிஸ்டர் கழுகு - கஜானாவுக்கு லாக், தினகரனுக்கு செக்! - பின்னணியில் இளவரசி குடும்பம்

‘‘ஆளும் தரப்புக்கு சவாலாக தினகரன் இருந்ததற்குப் பின்னால் செந்தில்பாலாஜி, பழனியப்பன் போன்றவர்களின் பண பலமும் காரணமாக இருந்தது. கடந்த ஒரு மாதமாகவே பெரும் குழப்பத்தில் இருந்திருக்கிறார் செந்தில்பாலாஜி. கரூர் மாவட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தம்பிதுரை ஆகியோரின் லாபியை எதிர்த்து, அவரும் நன்றாகத்தான் அரசியல் செய்தார். ஆனால், ‘அதிகாரமும் வருமானமும் இல்லாமல் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியாது என்ற நிலைக்கு வந்த பிறகுதான், இந்த முடிவை எடுத்திருக்கிறார்’ என்கிறார்கள் அவரின் ஆதரவாளர்கள்.’’

‘‘தினகரன் சமாதானம் செய்யவில்லையா?”

‘‘செந்தில்பாலாஜி வெளியேறுவது கொங்கு மண்டலத்தில் தினகரனுக்கு சரிவாகவே கருதப்படும் என்பதால், அவரைக் கடைசிவரை தடுத்துப் பார்த்தது தினகரன் தரப்பு. கடந்த ஒரு மாதமாகவே தினகரன் போனை, செந்தில்பாலாஜி எடுக்கவே இல்லையாம். தினகரனுக்கு வேண்டிய நபர்களின் போன் அழைப்புகளையும் அவர் தவிர்த்தே வந்துள்ளார். அப்போதே, செந்தில்பாலாஜி வேறு திட்டத்தில் உள்ளார் என்பதை, தினகரன் தரப்பு புரிந்துகொண்டதாம். இதற்குக் காரணமாக ஒரு சம்பவத்தையும் சொல்கிறார்கள். ஒரு மாதத்துக்கு முன்பு, தினகரன் வீட்டில் நடந்த ஆலோசனையின்போது, செந்தில்பாலாஜியை சிலரின் முன்பாகக் கடிந்துகொண்டாராம் தினகரன். அப்போதே டென்ஷனாகி வெளியே வந்துள்ளார் செந்தில்பாலாஜி. அதற்குப் பிறகுதான் அவரது நடவடிக்கையில் மாற்றம் என்கிறார்கள்.’’

‘‘அதெல்லாம் சரி... சசிகலா குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் இவர் இவ்வளவு பெரிய ஆளாகியிருக்க முடியுமா?’’

மிஸ்டர் கழுகு - கஜானாவுக்கு லாக், தினகரனுக்கு செக்! - பின்னணியில் இளவரசி குடும்பம்

‘‘இத்தனை காலம் பொறுத்ததற்கு அதுதான் காரணம். ஆனால், இப்போது அந்தக் குடும்பத்துக்கு உள்ளேயே பல விரிசல்கள்... அப்படிப் பார்த்தால், செந்தில்பாலாஜி அ.தி.மு.க-வில் ஏற்றம் கண்டதற்கு முக்கியக் காரணமே சசிகலாவின் அண்ணி இளவரசியின் ஆசிதான். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்குச் சென்றபோது, முதல்வர் ரேஸில் செந்தில்பாலாஜியும் இருந்தார். அதன் பின்னணியில் இருந்தது இளவரசியின் குடும்பம். இப்போது தினகரனுக்கு எதிரான நிலைப்பாட்டில்தான், இளவரசி குடும்பமும் திவாகரன் குடும்பமும் இருக்கின்றன. இப்போது புரிகிறதா?’’

‘‘ஒருவேளை தினகரனுக்கு எதிராக செந்தில்பாலாஜியைக் கொம்புசீவப் பார்க்கிறார்களா?’’

‘‘இருக்கலாம்... தி.மு.க-வுக்கு செந்தில்பாலாஜியை அனுப்பினால், அது தினகரனுக்கு வீக். அதுமட்டுமல்ல, தினகரனுக்கு இப்போது பெரும் நிதி நெருக்கடி உள்ளது. அதைச் சரிகட்டத்தான் தன் ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏ-க்களை அழைத்துக்கொண்டு சிறைக்குச் சென்றே சசிகலாவைச் சந்தித்து முறையிட்டார் தினகரன். சசிகலாவும் கஜானாவைத் திறக்க ஒப்புக்கொண்டாலும், அதற்கான வழி இளவரசி குடும்பத்தின் கையில்தான் உள்ளது. சசிகலா நிதி தர ஒப்புக்கொண்டது இளவரசி தரப்புக்கு நெருடலை ஏற்படுத்தியுள்ளது.’’

‘‘ஓ... கதை அப்படிப் போகிறதா!’’

மிஸ்டர் கழுகு - கஜானாவுக்கு லாக், தினகரனுக்கு செக்! - பின்னணியில் இளவரசி குடும்பம்

‘‘அதனால்தான், நிதியைத் தருவதில் இளவரசி தரப்பு இப்போதுவரை இழுத்துக்கொண்டே செல்கிறதாம். குறிப்பாக, இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா, மகன் விவேக் ஆகியோரின் கட்டுப்பாட்டில் பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதிலிருந்து வரும் நிதியை மடைமாற்றத்தான் சசிகலா நினைத்திருந்தாராம். ஆனால், இப்போது அதற்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தினகரனுக்கு நிதி உதவி செய்துவந்த செந்தில்பாலாஜியை, தி.மு.க பக்கம் அனுப்பிவிட்டார்கள் என்று நக்கல் அடிக்கிறது ஒரு தரப்பு.’’

‘‘அதாவது கஜானாவுக்கு ‘லாக்’ போட்டு, தினகரனுக்கு ‘செக்’ வைத்துவிட்டார்கள். செந்தில்பாலாஜியுடன் மேலும் சில முன்னாள் எம்.எல்.ஏ-க்களும் தி.மு.க பக்கம் போக வாய்ப்புள்ளது என்கிறார்களே?’’

‘‘அதற்கு வாய்ப்பு இல்லையாம். சோளிங்கர் பார்த்திபன், அருர் முருகன் உள்ளிட்ட நான்கு முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் கரூரில் செந்தில் பாலாஜியைத் தனியாகச் சந்தித்துப் பேசியதை வைத்தே இதைச் சொல்கிறார்கள். உண்மையில், செந்தில் பாலாஜியைத் தக்க வைக்க அ.ம.மு.க பொருளாளரான தஞ்சாவூர் ரங்கசாமியைத் தினகரன் தரப்பு அனுப்பியது. அவரைச் சந்திக்கவே செந்தில்பாலாஜி தரப்பு தயக்கம் காட்டியதால், செந்தில்பாலாஜிக்கு நெருக்கமான இந்த நால்வரை அனுப்பினார் தினகரன்.’’

‘‘அவர்கள் பேசியதற்கு என்ன சொன்னாராம் செந்தில்பாலாஜி?’’

‘‘நிறையச் சொல்லியிருக்கிறார்... ‘எனது அரசியல் எதிர்காலம் கருதிதான் இந்த முடிவு. இப்போது நான் எம்.எல்.ஏ-வாக இல்லை. இதே நிலை தொடர்ந்தால் உள்ளூர் அ.தி.மு.க-வுடன் மல்லுக்கட்டியே எனது அரசியல் எதிர்காலம் வீணாகிவிடும். தினகரனுக்கு என்னால் முடிந்த அளவுக்குச் செலவு செய்துவிட்டேன். இனி எனது அரசியல் எதிர்காலத்தைப் பார்க்கவேண்டும். தி.மு.க-வில் இந்த மாவட்டத்தில் வலுவான ஆட்கள் இல்லை. நான் இணைந்தால், கொங்கு மண்டலத்தில் ஒரு சக்தியாக உருவாகும் வாய்ப்பு உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலிலும் சீட் தருவார்கள். இத்தனை வாய்ப்புகளை விட்டுவிடச் சொல்கிறீர்களா?’ என்று கேட்டுள்ளார். வந்தவர் களால் பதில் ஏதும் சொல்ல முடியவில்லையாம்.’’
 
‘‘அவர்களிடம் வேறு ஏதேனும் தினகரன் சொல்லி அனுப்பினாரா?’’

மிஸ்டர் கழுகு - கஜானாவுக்கு லாக், தினகரனுக்கு செக்! - பின்னணியில் இளவரசி குடும்பம்

‘‘ஆம், ‘இதுவரை அ.தி.மு.க., அ.ம.மு.க-வில் பிரச்னை இருந்தாலும், தி.மு.க பக்கம் யாரும் சாயவில்லை. நீங்கள் சென்றால் அது புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்திவிடும். அது அம்மாவுக்குச் செய்யும் துரோகம்’ என்றும் சொல்லி அனுப்பியுள்ளார். அதற்கும் செந்தில் பாலாஜி, ‘நான் மட்டும்தான் போகிறேன். என்னுடன் அ.ம.மு.க-வினரை அழைத்துச் செல்லமாட்டேன்’’ என்ற உறுதியை மட்டும் அளித்தாராம். செந்தில்பாலாஜி ஒருபுறம் தி.மு.க பக்கம் போகும் நேரத்தில், தினகரன் கட்சியின் அமைப்புச் செயலாளர் சுப்பிரமணியன் அ.தி.மு.க-வுக்குத் தாவி அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதையெல்லாம்தான் தினகரன், ‘ஆல விருட்சத்தின் இலைகள் உதிர்வதால் விருட்சமே இல்லாமல் போய்விடுமா?’ என்று அறிக்கை வெளியிட்டிருக் கிறார்.

‘‘சரி, தி.மு.க விஷயத்துக்கு வாரும்.’’

‘‘ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைச் சொல்கிறேன், கேளும். 2004-ம் ஆண்டு காமராஜர் சிலைத் திறப்பு விழாவுக்கு வந்த சோனியா, அறிவாலயத்தில் கருணாநிதியைச் சந்தித்து நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்கு அச்சாரம் போட்டார். அந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணிதான், நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளையும் அள்ளியது.’’

‘‘சரி...’’

‘‘அதேபோல, இப்போது கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு சோனியா வருகிறார். அப்போது கூட்டணி தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை களைப் பேசப்போகிறார்கள். அதனால், அடுத்த ஆண்டு தேர்தலில், நாற்பதுக்கு நாற்பதையும் வெல்வோம் என்று தி.மு.க-வினரும் சென்டிமென்ட் கதை சொல்கிறார்கள்!’’

‘‘அடேங்கப்பா... ஆனால், பங்கீட்டில் கறார் காட்டுகிறதே தி.மு.க?’’

‘‘ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுக்கு முன்பு நிலைமை அப்படி இருந்தது. தேர்தல் முடிவு தங்களுக்குச் சாதகமாகியிருப்பதால், இனி காங்கிரஸ் அழுத்தம் கொடுக்கும். அதனால், கருணாநிதி பாலிஸியைக் கையில் எடுக்க உள்ளார் ஸ்டாலின். காங்கிரஸ் கட்சிக்கு இரட்டை இலக்கத்தில் சீட்டை ஒதுக்கிவிட்டு, அவர்களையே கூட்டணிக் கட்சிகளையும் கவனித்துக்கொள்ளும் திட்டத்தைச் செயல்படுத்த நினைக்கிறாராம்’’ என்ற கழுகார்,

‘‘ டெல்லி சோர்ஸ் தகவல் இது... இருபது சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வரலாம்’’ என்று கூறி, சிறகு விரித்தார்.

ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 11 பேர் குறித்த வழக்கு, மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 12-ம் தேதி நடைபெற்ற இறுதிக் கட்ட விசாரணையில் ஓ.பி.எஸ் தரப்பு வழக்கறிஞர் முகுல்ரோத்கியிடம் “18 எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் ஒரு நிலைப்பாடு, 11 எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் ஒரு நிலைப்பாடு... என இரண்டு வழக்குகளிலும் நீங்களே மாற்றி மாற்றி வாதாட லாமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்கள் நீதிபதிகள். இதில், ஜனவரி இறுதியில் தீர்ப்பு வரலாம் என்கிறார்கள்.

புதிய தலைமைச் செயலகக் கட்டுமான ஊழல் தொடர்பான ரகுபதி விசாரணை கமிஷனின் நீதிபதி ரகுபதி, தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு, இந்த விசாரணையை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றியது தமிழக அரசு. அதை எதிர்த்து தி.மு.க உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், ‘ஆணையத்தின் விசாரணை முழுமையாக முடிவடையாமலும் ஆணையத்தின் அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யாமலும் இருக்கும்போது, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு இந்த வழக்கை மாற்றி அரசாணை பிறப்பித்தது செல்லாது’ என்று தீர்ப்பு வழங்கியுள்ளது உயர் நீதிமன்றம். இது எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஏமாற்றம் என்கிறார்கள்.