Published:Updated:

`பா.ஜ.க-வுடன் கூட்டணியில்லை என கூற தம்பிதுரைக்கு அதிகாரம் உள்ளதா?' - பொன்னார் கேள்வி!

பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என கூறுவதற்கு தம்பிதுரைக்கு அ.தி.மு.க-வில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா என தெரியவில்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

`பா.ஜ.க-வுடன் கூட்டணியில்லை என கூற தம்பிதுரைக்கு அதிகாரம் உள்ளதா?' - பொன்னார் கேள்வி!
`பா.ஜ.க-வுடன் கூட்டணியில்லை என கூற தம்பிதுரைக்கு அதிகாரம் உள்ளதா?' - பொன்னார் கேள்வி!

பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை எனக் கூறுவதற்கு தம்பிதுரைக்கு அ.தி.மு.க.வில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா எனத் தெரியவில்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நாகர்கோவில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ரூ.20 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகளை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று திறந்துவைத்தார். இதில் குமரி கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, கேந்திரிய வித்யாலயா சங்கத்தின் சென்னை மண்டல இணை ஆணையாளர் மணி, நாகர்கோவில் கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு அதிலிருந்து மீண்டு இயல்புநிலைக்குத் திரும்புவதற்காகவும். சாதாரண ஏழைக் குடும்பங்கள் கொண்டாட்டங்கள் இல்லாமல் போய்விடக் கூடாது என்ற எண்ணத்தில் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்கும் முடிவை எடுத்ததாக முதல்வருக்கு நெருக்கமான ஒருவர் என்னிடம் கூறினார். அதை குறை கூற முடியாது. 10 சதவிகித இட ஒதுக்கீடு குறித்த முழு விவரத்தை தம்பிதுரை அறிந்தால் பிரச்னை இல்லை. நீண்ட நாள்களாக எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பு அது. தேர்தலைக் கருத்தில் கொண்டு தம்பிதுரை இந்த அறிவிப்பை எதிர்க்கிறார், இது தவறான சிந்தனை.

தமிழகம் வரும் பிரதமருக்கு கறுப்புக் கொடி காண்பிப்போம் என வைகோ கூறுகிறார். ஏற்கெனவே சென்னையில் ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் திட்டத்தை தொடங்கிவைக்க வந்தபோது கறுப்புக் கொடி காட்டினார்கள். தமிழக மக்களுக்குப் பயன்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் வருகிறார். தமிழர் நலனுக்காகப் பிரதமர் வருகிறார். எனவே, வைகோ இந்தப் போராட்டத்தை கைவிடுவது தமிழர்களின் கெளரவத்தைக் காப்பாற்றும். எந்தக் கட்சியுடன் கூட்டணி என இன்னும் முடிவு செய்யவில்லை. பா.ஜ.க. வுடன் அ.தி.மு.க. கூட்டணி இல்லை என தம்பிதுரை கூறுகிறார். கூட்டணி இல்லை எனக் கூறுவதற்கு தம்பிதுரைக்கு அ.தி.மு.க-வில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா எனத் தெரியவில்லை" என்றார்.