Published:Updated:

ஆகஸ்ட் 9 ல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்?

ஆகஸ்ட் 9 ல்  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்?
ஆகஸ்ட் 9 ல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்?
ஆகஸ்ட் 9 ல்  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்?

புதுடெல்லி: திட்டமிட்டதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்ததாலும், நிறைய மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டி உள்ளதாலும் முன்னதாகவே பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டமிட்ட தேதிக்கு 2 நாட்கள் முன்னதாக நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்ததால் மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் மாதத்திற்கு முன்னதாக ஆகஸ்ட் 9 ல் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மழைக்கால கூட்டத்‌தொடர் தேதியை முடிவு செய்வது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சக  குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

நிலக்கரி ஊழல் மற்றும் ரயில்வே ஊழல் காரணமாக எதிர்கட்சிகளின் அமளியால் பட்ஜெட்

##~~##
கூட்டத்தொடரின் போது உணவு பாதுகாப்பு மசோதா, நிலம் கையகப்படுத்தும் மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படவில்லை. இதை கருத்தில் கொண்டு மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே துவங்கலாம் என இக்கூட்டத்தில் யோசனை தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.