Published:Updated:

`வாஜ்பாய் எங்கே, நீங்கள் எங்கே!' - கூட்டணிக் குறித்த மோடியின் பேச்சுக்கு ஸ்டாலின் பதில் 

`வாஜ்பாய் எங்கே, நீங்கள் எங்கே!' - கூட்டணிக் குறித்த மோடியின் பேச்சுக்கு ஸ்டாலின் பதில் 
`வாஜ்பாய் எங்கே, நீங்கள் எங்கே!' - கூட்டணிக் குறித்த மோடியின் பேச்சுக்கு ஸ்டாலின் பதில் 

 தி.மு.க ஒருபோதும் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்காது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

`வாஜ்பாய் எங்கே, நீங்கள் எங்கே!' - கூட்டணிக் குறித்த மோடியின் பேச்சுக்கு ஸ்டாலின் பதில் 


 

நேற்று அரக்கோணம், தர்மபுரி, கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்ஃபரன்ஸிங் வாயிலாகக் கலந்துரையாடினார். அப்போது நிர்வாகிகள் கூட்டணி தொடர்பான கேள்விகளை மோடியிடம் கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த மோடி,``நம் பழைய நண்பர்களை வரவேற்க எப்போதுமே தயாராக இருக்கிறோம். தமிழகத்தில் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன. தொலைநோக்குப் பார்வைகொண்ட மறைந்த பிரதமர் வாஜ்பாய் 20 ஆண்டுகளுக்கு முன் இந்திய அரசியலில் கூட்டணி அரசை ஏற்படுத்தி புதிய கலாசாரத்தை உருவாக்கினார். அவருடைய அந்தக் கலாசாரத்தைத் தற்போதும் பா.ஜ.க பின்பற்றி வருகிறது. கூட்டணியைப் பொறுத்தவரை வாஜ்பாய் காட்டிய வழியை பா.ஜ.க பின்பற்றும்” என்று பேசினார். மோடி அவ்வாறு பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. 

`வாஜ்பாய் எங்கே, நீங்கள் எங்கே!' - கூட்டணிக் குறித்த மோடியின் பேச்சுக்கு ஸ்டாலின் பதில் 


 

இந்நிலையில் பா.ஜ.க-வுடன் ஒருபோதும் தி.மு.க கூட்டணி வைக்காது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், 

``வாஜ்பாய் கலாசாரத்தைப் பின்பற்றி நம்முடைய பழைய நண்பர்களை வரவேற்க நாம் எப்போதுமே தயாரக இருக்கிறோம். கூட்டணிக்காகக் கதவுகள் திறந்தே இருக்கின்றன்’’ என்று பிரதமர் மோடி தமிழகத்தில் உள்ள தனது கட்சி நிர்வாகிகளுடன் காணொலிக் காட்சியில் பேசும்போது குறிப்பிட்டுள்ளது வியப்பாகவும் விசித்திரமாகவும் இருக்கிறது. இந்த நான்கரை ஆண்டுக்காலத்தில், இந்திய ஒருமைப்பாட்டை பலப்படுத்தவோ வலுப்படுத்தவோ எந்த வகையிலும் உதவாத வெறுப்புப் பேச்சுகளை விதைத்து, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்கள் என்று கூறிக்கொண்டே சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு, தமிழகத்தின் நலன்களை அடியோடு புறக்கணித்து - கூட்டாட்சித் தத்துவத்துக்கு உலை வைத்து - அரசியல் சட்டத்தின் கீழ் இயங்கும் அமைப்புகள் அனைத்தையும் தலைசாய வைத்துள்ள மோடி, தன்னை ``சரியான மனிதர் தவறான ஆட்சியில் கட்சியில் இருக்கிறார்’’ என்று தலைவர் கலைஞர் அவர்களால் வர்ணிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுடன் ஒப்பிட்டுக்கொள்வது வேடிக்கையாகவும் விநோதமாகவும் மட்டுமல்ல - வழக்கம்போல அவரது பிரசார யுக்தியாகவே இருக்கிறது.

`வாஜ்பாய் எங்கே, நீங்கள் எங்கே!' - கூட்டணிக் குறித்த மோடியின் பேச்சுக்கு ஸ்டாலின் பதில் 

நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு நிலையான ஆட்சி தேவை என்ற ஒரே உன்னத நோக்கத்துக்காக - பா.ஜ.க.வும் இடம்பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியில் குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்கிய பிரதமர் வாஜ்பாய் அவர்களுடன் திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி வைத்தது. நாட்டை பிளவுபடுத்தும் எந்த வேலைத்திட்டத்தையும் முன் வைக்காமல் ஓர் அஜெண்டாவை உருவாக்கி தேசிய ஜனநாயகக் கூட்டணியை பிரதமராக இருந்த வாஜ்பாய் அவர்கள் ஏற்படுத்தியதையும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலையான ஆதரவுடன் அவர் ஆட்சி செய்ததையும் நாடறியும்.

பிறகு, மதவாதக்குரல்கள் எழுந்தவுடன் அக்கூட்டணியில் இருந்து துணிச்சலுடன் வெளியேறியதும் திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்பதையும் நாடறியும். ஆனால், தற்போது பிரதமர் நரேந்திரமோடி வாஜ்பாயும் அல்ல - அவர் தலைமையில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி வாஜ்பாய் உருவாக்கியது போன்றதொரு ஆரோக்கியமான கூட்டணியும் அல்ல. பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவைப் போற்றிப் பாதுகாப்பதற்காகப் பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பில் இருப்பவரும் அல்ல முன்பு எந்தப் பிரதமரும் ஆட்சி செய்தபோது இல்லாத அளவுக்கு தமிழக உரிமைகள் பறிக்கப்பட்டது பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில்தான் என்பதை தமிழக மக்கள் என்றைக்கும் மறக்கமாட்டார்கள். மதசார்பின்மை, சமூக நீதி, சமத்துவம் கூட்டாட்சித் தத்துவம், மாநில உரிமைகள் எல்லாம் தனக்கு வேண்டாத வார்த்தைகள் என்ற விபரீத மனப்பான்மையில் கடந்த நான்கரை ஆண்டுக்காலமாகப் பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க-வுடன் திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் கூட்டணி வைக்காது என்பதை மீண்டும் ஆணித்தரமாக விளக்கிட விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.