‘‘அமைச்சரின் பெயரைச் சொல்லி ஆளும் கட்சிப் புள்ளி ஒருவர், ‘இனி நான்தான் இந்தப் பள்ளிக்குப் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்’ என நுழைந்தார். அவர் செய்யும் அராஜகங்களையும் அத்துமீறல்களையும் வெளியில் சொல்ல முடியாமல் தவியாய் தவிக்கிறோம். எங்கள் பள்ளியை எப்படியாவது மீட்டுக்கொடுங்கள்...” – இப்படி ஒரு அழைப்பு சென்னை, அனகாபுத்தூர் பகுதியிலிருந்து நமது அலுவலகத்துக்கு வந்தது.

தொடர்பு கொண்ட நபரைச் சந்தித்தோம். அவருடன் சில பெற்றோர்களும் வந்திருந்தார்கள். “அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2,000 மாணவர்கள் படிக்கிறார்கள். ஒன்றரை வருடத்துக்கு முன் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து அ.தி.மு.க-வைச் சேர்ந்த முரளிதரன் என்பவர், பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தனக்கு சிபாரிசு கடிதம் கொடுத்ததாக ஒரு கடிதத்தைக் காட்டி, ‘இனி நான்தான் இந்தப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்’ என்றார். அமைச்சரின் சிபாரிசு இருப்பதால், இவர் இந்தப் பள்ளியைத் தரம் உயர்த்துவார் என உள்ளூர் மக்கள் நம்பினார்கள். ஆனால், அவரது நடவடிக்கைகள் எதுவும் சரியில்லை” என்று கூறிய அவர்கள், முரளிதரனின் செயல்பாடுகளை அடுக்கினார்.

குன்றத்தூர், ராயப்பேட்டை, சைதாப்பேட்டை, பம்மல் போன்ற இடங்களில் இவர் மீது 15-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன. இவர், இந்தப் பள்ளியில் படித்த ஒரு பெண்ணைக் காதல் திருமணம் செய்துகொண்டார். அந்தப் பெண் கர்ப்பமாக இருந்தார் அப்போது, பள்ளிக்கு அருகே முரளிதரனின் கண் எதிரிலேயே கிணற்றில் விழுந்து அப்பெண் தற்கொலை செய்துகொண்டார். அந்த வழக்கில் சிறை சென்று, சரியான சாட்சிகள் இல்லாததால் விடுபட்டார் முரளிதரன். பிறகு, வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இப்படியான பின்புலம் உள்ள ஒரு நபரை அரசுப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக எப்படி நியமித்தார்கள் என்பது தெரிய வில்லை. அவர், சர்வாதிகாரியைப் போல அரசுப் பள்ளியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளார்.

டி.வி நிகழ்ச்சி வழங்கும் ஒரு பெண்ணை அழைத்துவந்து பள்ளியில் நிகழ்ச்சி நடத்தி, அதற்காக ஆசிரியர்களிடம் பணம் வசூலித்தார். குறைந்த விலையில் நிலம் கொடுப்பதாகச் சொல்லி ஆசிரியர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றினார். ஆசிரியர் ஒருவர் எதிர்த்துப் பேசிவிட்டார் என்பதற்காக, மேலிட செல்வாக்கைப் பயன்படுத்தி அவரை டிரான்ஸ்பர் செய்ய வைத்துவிட்டார். ஆசிரியை ஒருவரை லாட்ஜுக்கு அழைத்துள்ளார். அமைச்சருக்கு நெருக்கமானவர் என்பதால், எதுவும் சொல்ல முடியாமல் ஆசிரியர்கள் தவிக்கிறார்கள்.

கடந்த ஆண்டு இந்தப் பள்ளியின் தேர்ச்சி சதவிகிதம் 70-க்கும் குறைவு. ஆனால், அமைச்சரின் செல்வாக்கைப் பயன்படுத்தி இந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர் வீரலட்சுமிக்கு நல்லாசிரியர் விருது கொடுத்துள்ளனர். ஆசிரியர்களோ, பெற்றோர்களோ இவரின் அனுமதியின்றி தலைமை ஆசிரியரைச் சந்திக்க முடியாது.

‘குண்டு’ லட்சுமி என்பவர் இப்பகுதியில் உள்ள மாணவர்களுக்கு, கஞ்சா விற்பனை செய்துவந்தவர். கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட குண்டு லட்சுமியை முரளிதரன் ஜாமீனில் எடுத்து, பள்ளிக்கு வாயில் காவலராக நியமித்திருக்கிறார். ‘குண்டு’ லட்சுமி பள்ளியில் உள்ள மாணவர்களைத் தரக்குறைவான வார்த்தைகளால் மிரட்டுவார். இவர் மீது பாலியல் புகார்களும் வருவதால் தே.மு.தி.க-வினர் அனகாபுத்தூரில் கடந்த வாரம் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தினர். நிர்மலாதேவி விவகாரத்தைப் போல எங்கள் பள்ளிக்கும் பிரச்னை வருவதற்குள் அமைச்சர் செங்கோட்டையன் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்கள்.

மாணவர்களிடம் பேசினோம். “எங்கள் அம்மாவைப் பற்றித் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டுகிறார். இதைக் கேட்டால் அடிக்கிறார். ஆசிரியர்கள் வராத நேரத்தில் வகுப்பறைகளுக்குச் சென்று மாணவிகளுடன் ‘வழிந்து’ பேசுகிறார். சில மாணவிகளுக்குத் தின்பண்டங்கள் வாங்கிக்கொடுத்தும், செலவுக்குப் பணம் கொடுத்தும் வகுப்பறையில் அரட்டை அடிக்கிறார். மாணவிகளிடம் தவறாகப் பேசுவார். பள்ளியிலேயே குடிக்கிறார். இதையெல்லாம் கேட்காமல் தலைமை ஆசிரியர் அவருக்குப் பயப்படுகிறார். அவரை எதிர்த்துக் கேட்கும் மாணவர்களை சஸ்பெண்டு செய்துவிடுகிறார். வாயில் காவலர் ‘குண்டு’ லட்சுமி எப்போதும் போதைப்பொருளை வாயில் போ மென்றுகொண்டு எங்களை மிரட்டுகிறார்” என்றனர்.

தலைமை ஆசிரியரைச் சந்திக்கச் சென்றோம். “தலைமை ஆசிரியர் ஒரு வாரம் மெடிக்கல் லீவில் இருக்கிறார். அவரிடம் நீங்கள் பேச முடியாது. எதுவாக இருந்தாலும் முரளிதரனிடம் பேசுங்கள்” என்று சொல்லி முரளிதரனின் செல் நம்பரை உதவித் தலைமை ஆசிரியர் கொடுத்தார்.

பள்ளியில் இருந்தே முரளிதரனைத் தொடர்புகொண்டு அவர் மீதான குற்றச்சாட்டுகளைச் சொன்னோம். அவர், “என் மீது இருப்பதெல்லாம் சிவில் வழக்குகள்தான். அரசியல் காரணமாகத் தேவையில்லாமல் என்மீது வீண்பழி சுமத்துகிறார்கள். பள்ளி வேலைக்கு வந்த பிறகுதான், ‘குண்டு’ லட்சுமி மீது கஞ்சா வழக்கு வந்தது. அதை அவர் வழக்கறிஞர் மூலம் பார்த்துக்கொள்வார்” என்றார் கூலாக.

அமைச்சர் செங்கோட்டையன் எண்ணுக்குத் தொடர்புகொண்டபோது, நம்மிடம் பேசிய அமைச்சரின் உதவியாளர், “இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலர் மூலம் விசாரணை நடைபெறும்” என்றார்.

கட்டுரை, படங்கள்: பா.ஜெயவேல்