“அண்ணன் என்னடா... தம்பி என்னடா... அவசரமான உலகத்திலே...” என்று பாடியபடியே வந்தார் கழுகார்.

“புரிகிறது... புரிகிறது. ஓ.பி.எஸ்-ஸின் தம்பி நீக்கம் பற்றித்தானே சொல்லவருகிறீர்...” என்றோம்.

“அடடே, உமக்குக் கற்பூரப்புத்தி... என்ற கழுகார், “ஓ.பி.எஸ்-ன் தம்பி ஓ.ராஜா அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அதிரடியாக நீக்கப் பட்டிருக்கிறார். ‘கழக உடன்பிறப்புகள் அவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது’ என்று தலைமைக் கழகம் 19-ம் தேதி மாலை அறிவித்தது. ஆனால், அன்று காலைதான் அவர் கோலாகலமாக மதுரை ஆவின் தலைவராக பதவியேற்றுக்கொண்டார். ஆவினில் பலரது அதிருப்திகளுடன் அவர் தலைவர் பதவியைப் பிடித்ததாகக் கிளம்பிய புகாரில்தான், ராஜா கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டாலும், ‘தன் தம்பியை நீக்க ஓ.பி.எஸ் எப்படி கையெழுத்திட்டார்?’ என்று ஆச்சரியப் படுகிறார்கள்.”

“சரி, என்னதான் நடந்தது?”

“கைவசம் எந்தப் பதவியும் இல்லாத நிலையில், ஆவின் சேர்மன் பதவியைப் பிடிக்கலாம் என்று ராஜா திட்டமிட்டிருந்தார். இவருக்கு எதிராக தேனி பி.சி.பட்டியைச் சேர்ந்த அம்மாவாசி, ‘கூட்டுறவுத் தேர்தலில் ஓ.ராஜா முறைகேடு செய்து, அதிகாரிகளைத் தன் வசப்படுத்தித் தலைவர் பதவியை அடைய முயற்சி செய்கிறார்’ என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், ‘வீடியோ பதிவுடன் நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 15-ம் தேதி நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றார். அதைத் தொடந்தே 19-ம் தேதி காலை பதவியேற்பும், மாலை கட்சியிலிருந்து நீக்கமும் நடந்திருக்கிறது.”

“இதில் ஓ.பி.எஸ்-ஸின் பங்கு என்ன?”

“ஓ.பி.எஸ்-ஸின் நெருங்கிய நண்பரும் தேனி மாவட்டப் பொருளாளருமான செல்லமுத்து, ஆவின் சேர்மன் பதவி தனக்கு வேண்டும் என பன்னீர்செல்வத்திடம் கேட்டிருக்கிறார். கட்சிக்காக உழைத்த நபர் என்பதால் அவருக்குப் பதவி தர
ஓ.பி.எஸ் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் ராஜா, செல்லமுத்துவிற்கு எதிராகப் பல்வேறு உள்ளடி வேலைகளைச் செய்தாராம். இதனால் டென்ஷனான செல்லமுத்து, ஓ.பி.எஸ்-ஸிடம் முறையிட்டுள்ளார்.

ஏற்கெனவே ராஜா மீதான பூசாரி கொலை வழக்கால் ஏரியாவில் அவப்பெயர் ஏற்பட்டிருக்கிறது என்று புழுக்கத்தில் இருந்தாராம் ஓ.பி.எஸ். தவிர, சமீபமாகக் குடும்பத்துக்குள்ளும் ராஜா தொடர்பாகப் புகைச்சல்கள் ஏற்பட்டனவாம். இந்த நிலையில், கட்சியிலும் பிரச்னை வருவதை அறிந்தவர், முதல்வரிடமே நேரடியாக ‘என் தம்பி என்றெல்லாம் பார்க்க வேண்டாம். என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ எடுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். அதன் பிறகே கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் இணைந்து, நீக்கம் தொடர்பாகக் கையெழுத்துப் போட்டிருக்கிறார்கள்.”

“இது மட்டும்தான் காரணமா?”

“ராஜா மதுரை ஆவின் தலைவராக முயற்சி செய்தது கட்சியில் வேறு சிலருக்கும் பிடிக்கவில்லை. செல்லூர் ராஜுவின் நண்பர் தங்கம்தான் ஆவின் தலைவராக இருந்து வந்தார். ராஜா உள்ளே நுழைய, அவரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. மதுரை புறநகர் மாவட்டச் செயலாளரான ராஜன்செல்லப்பா, தனக்கு வேண்டியவரை ஆவின் தலைவராக்க விரும்பினார். அதுவும் முடியவில்லை. பால்வளத் துறை அமைச்சரான ராஜேந்திர பாலாஜியும் தன்னுடைய துறைக்குள் ராஜா நுழைகிறாரே என்று கடுப்பானார். என்றாலும், உள்ளுக்குள் குமுறியபடியே ராஜாவுக்கு சால்வையெல்லாம் போர்த்தி மரியாதை செய்தார்கள். அதேசமயம் ஒருசேர மேலிடத்திலும் முறையிட்டார்கள். காரணங்கள் போதுமா?”

“போதும், போதும் தி.மு.க முகாம் உற்சாகமாக இருக்கிறதே...”

“ஆம், எதிர்தரப்பிலிருந்து பத்து எம்.எல்.ஏ-க்களுக்கு குறி வைத்திருக்கிறார்கள். ‘இந்த ஆட்சி முடியும் வரை எல்லாம் காத்திருக்க வேண்டாம். இப்போதே ஏதேனும் செய்யலாம்’ என்று குடும்பத்தில் ஒரு தரப்பினர் ஸ்டாலினிடம் பேசியிருக்கிறார்கள். அவரும், ‘ஆகட்டும்’ என்று சொல்லியிருக்கிறார். முதல் இலக்கு, குன்னம் எம்.எல்.ஏ ராமச்சந்திரனுக்கு வைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். இதற்காக அவரது சமூகத்தைச் சேர்ந்த தி.மு.க முக்கியப் புள்ளி ஒருவர் ராமச்சந்திரனிடம் பேசிவருகிறாராம்.

‘தி.மு.க-வுக்கு வந்தால் வெயிட்டாக கவனிப்பதுடன், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் பதவியுடன், வெற்றி வாய்ப்புள்ள தொகுதியில் எம்.எல்.ஏ சீட்டும் தருகிறோம். நீங்கள் சொன்னால் இப்போதே தளபதியிடம் பேசுகிறேன்’ என்றாராம்.
“ராமச்சந்திரன் ரியாக்ஷன் என்னவோ?”

“ ‘தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர் என்னிடம் பேசியது உண்மைதான். ‘வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளது. நீங்கள் தி.மு.க-வுக்கு வந்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும்’ என்று என்னிடம் சொன்னார். ஆனால், ‘என் உயிருள்ளவரை அம்மாவுக்கும் கட்சிக்கும் துரோகம் செய்யமாட்டேன்’ என்று அவர் சொல்கிறாராம்.”

“வேறு யாரும் லிஸ்ட்டில் இருக்கிறார்களா?”

“முன்னாள் ‘உயர்’ துறை அமைச்சர் ஒருவரிடமே பேசிவருகிறார்கள். இதுதவிர தென் மண்டலத்தில் ஒருவர், மேற்கு மண்டலத்தில் ஒருவர் என அடுத்தடுத்து அதிரடிகள் அரங்கேறலாம்.” என்ற கழுகாருக்கு லெமன் டீ கொடுத்தோம். குடித்துவிட்டு அடுத்த செய்திகளுக்குத் தாவினார்.

‘‘ பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை ஸ்டாலின் அறிவித்ததை மம்தா, மாயாவதி, அகிலேஷ் விரும்பவில்லை. அதை உணர்த்தவே மூவரும் காங்கிரஸ் முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லையாம். இதுகுறித்து விளக்கம் அளிக்கும் வகையில் ம.பி முதல்வர் கமல்நாத், ‘பிரதமர் பதவி என்பது காங்கிரஸ் கட்சி மட்டுமே முடிவு செய்யமுடியாது. கூட்டணி கட்சிகளையும் ஆலோசித்துத் தான் முடிவு எடுக்கமுடியும்’ என்று சொல்லியிருக்கிறார். அவர்கள் மட்டுமல்ல இடதுசாரிகளும் இதை விரும்பவில்லையாம். அநேகமாகக் கூட்டணிக் கட்சிகளைச் சமாதானப்படும் நடவடிக்கைகளை காங்கிரஸ் செய்யலாம் என்று தெரிகிறது”

‘‘கஜா புயல் நிவாரணத்தைத் தராமல் மத்திய அரசு இழுத்தடிக்கிறதே?’’

‘‘ம்ம்க்கும்... கஜா புயலை விடும். ஒகி புயலுக்கு அறிவித்த நிவராணத்தொகையே முழுதாக வரவில்லை. கஜா புயல் நிவாரணம் குறித்து உயர்நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில், ‘தமிழக அரசு ஆவணங்கள் தரவில்லை’ என்று முதலில் மத்திய அரசு தரப்புச் சொன்னது. ஆனால், தந்து விட்டதாக தமிழக அரசு வழக்கறிஞர் பதில் கொடுத்திருக்கிறார். இன்னொரு பக்கம் அந்த நிதியைக் கேட்கத் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வருவாய் துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு, டெல்லிக்குச் சென்றுள்ளது. இவர்கள் கேட்ட 15 ஆயிரம் கோடி ரூபாயில் நான்கில் ஒரு பங்கைத் தருவதே சந்தேகம்தான் என்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தல் நடத்தவில்லை என்று சொல்லி, உள்ளாட்சி அமைப்புகளுக்கான நடப்பு நிதியாண்டின் முதல் தவணை 877 கோடி ரூபாயையும் மத்திய அரசு மறுத்துவிட்டது’’

‘‘இடைத்தேர்தல் தகவல் ஏதேனும் உண்டா?’’

‘‘விரைவில் அறிவிக்க வாய்ப்புகள் அதிகம். முக்கிய அமைச்சர்கள் சிலர் தங்களுக்கு ஒதுக்கப்பட்டத் தொகுதிகளுக்கு விசிட் அடித்து பூத் கமிட்டி அமைப்பது குறித்து சிலநாட்களுக்கு முன்பு ஆலோசனை செய்துள்ளார்கள். ஒட்டப்பிடாரம் தொகுதியில் அமைச்சர் வேலுமணி தேர்தல் வேலையை ஆரம்பித்து விட்டாராம். கட்சிக்காரர்கள் தங்குவதற்கு வீடு பார்க்கவும் சொல்லி விட்டாராம்’’ என்ற கழுகார், அ.தி.மு.க தரப்பில் இன்னொரு செய்தி பரபரக்கிறது என்றவர், “ அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட கோவை கே.சி பழனிசாமி டிசம்பர் 24-ம் தேதி எம்.ஜி.ஆர் நினைவு நாளில் ‘அ.தி.மு.க தொண்டர் அணி’ என்ற அமைப்பை தொடங்கப்போகிறாராம்” என்று சொல்லிவிட்டுப் பறந்தார்.

படம்: வே.நரேஷ்குமார்

பொங்கும் பொன்.மாணிக்கவேல்!

பொன்.மாணிக்கவேலுவுக்கு எதிராக இரண்டாவது முறையாக டி.ஜி.பி-யிடம் புகார் அளித்திருக்கிறார்கள் போலீஸார். இந்த முறை புகார் அளித்திருப்பது டி.எஸ்.பி-க்கள் மற்றும் ஏ.டி.எஸ்.பி-க்கள். ஆனால், “சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவில் காவலர்களே இல்லை என்றாலும் என்னுடைய கடைசி மூச்சு இருக்கும்வரை உழைப்பேன். நான் தப்பு செய்தால் என்னுடைய காலரைப் பிடித்துக் கேள்வி கேட்கலாம். இடமாறுதல் கேட்பவர்கள், தங்களின் கடமைகளை முடித்துவிட்டுக் கேட்டால், நானே மாலைபோட்டு அவர்களை வழியனுப்புகிறேன்...” என்று பொங்கியிருக்கிறார் பொன்.மாணிக்கவேல். அதேசமயம் ‘எப்.ஐ.ஆர் போடாமல் கைது நடவடிக்கை நடப்பதைப் பார்க்கும்போது, டி.ஜி.பி-யை சந்தித்த போலீஸார் சொல்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று ஒரு தரப்பும், ‘உச்சநீதிமன்றத்தில் சிலைக் கடத்தல் வழக்கில் தமிழக அரசு வாங்கிய குட்டுக்கு, பழிதீர்க்கவே பொன்.மாணிக்கவேலுக்கு இடைஞ்சல் தருகின்றனர்’ என்று மறு தரப்பும் சொல்கின்றன.