Published:Updated:

அவதிப்பட்ட மாணவர்கள்..அசிங்கப்பட்ட மின்துறை அமைச்சர்...

அவதிப்பட்ட மாணவர்கள்..அசிங்கப்பட்ட மின்துறை அமைச்சர்...
அவதிப்பட்ட மாணவர்கள்..அசிங்கப்பட்ட மின்துறை அமைச்சர்...
அவதிப்பட்ட மாணவர்கள்..அசிங்கப்பட்ட மின்துறை அமைச்சர்...

தர்மபுரி: தமிழகத்தில் இன்று தடையில்லா மின்சாரம் என்று அறிவித்து விட்டு ரிசல்ட் வெளியாகும் நேரத்தில் தர்மபுரியில் மி்ன்தடை ஏற்பட்டதால் இப்பகுதி மாணவர்கள் மின்சாரத்துறை அமைச்சரை திட்டித் தீர்த்தனர்.

"நாளை (9-5-2013) பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீட்டுக்காக காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரம் கிடைக்கும்’ என்று நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.

ஆனால் தர்மபுரி நகரின் பெரும்பாலான பகுதிகளில் காலை 9 மணி வரை மட்டும் மின் விநியோகம் செய்துவிட்டு 9 மணியிலிருந்து 10.20 வரை மின்தடையை ஏற்படுத்தி விட்டனர். தேர்வு முடிவுகள் சரியாக 10 மணிக்கு வெளியான நிலையில் தர்மபுரி நகரின் பெரும்பாலான பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் உடனடியாக ரிசல்ட் பார்க்க முடியாமல் தவித்தனர்.

##~~##
இதனால், விரக்தியடைந்த மாணவர்கள், ‘ரிசல்ட் வெளியாகும் நேரத்தில் பவர்கட் செய்யுறதுக்கா நேற்றிலிருந்து டிவி, பேப்பர்னு எல்லாத்துலயும் அமைச்சர் அறிக்கை வெளியாச்சு’ என்று புலம்பித் தீர்த்தனர். இதில் சில மாணவர்கள் உச்சபட்ச கோபத்துக்கு ஆளாகி அமைச்சரை ஏகவசனத்தில் திட்டியும் தீர்த்தனர். பிறகு 10.20 மணிக்கு மின்சாரம் வந்ததும் தான் நிலைமை சகஜமானது.
-எஸ்.ராஜாசெல்லம்