Published:Updated:

``சபரிமலை புனிதத்தைக் கெடுப்பவர்களை ஐயப்பன் தண்டிப்பார்” - சுரேஷ் கோபி காட்டம்!

``சபரிமலை புனிதத்தைக் கெடுப்பவர்களை ஐயப்பன் தண்டிப்பார்” - சுரேஷ் கோபி காட்டம்!
``சபரிமலை புனிதத்தைக் கெடுப்பவர்களை ஐயப்பன் தண்டிப்பார்” - சுரேஷ் கோபி காட்டம்!

``இது நாள் வரை ஆசாரத்துடன் செயல்பட்ட சபரிமலையின் புனிதத்தைக் கெடுப்பவர்களை ஐயப்பன் தண்டிப்பார்’’ என நடிகர் சுரேஷ்கோபி தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் ஹைமாஸ் விளக்கு அமைக்க நாடாளுமன்ற உறுப்பினரும், திரைப்பட நடிகருமான சுரேஷ் கோபி தனது பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.3 லட்சம் ஒதுக்கீடு செய்தார். புதிதாக அமைக்கப்பட்ட உயர் கோபுர மின் விளக்கை சுரேஷ் கோபி திறந்துவைத்தார். பின்னர் நடிகர் சுரேஷ் கோபி செய்தியாளர்களிடம் கூறும்போது, ``ஆன்மிக பூமியில் எனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்தது பெரும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. சபரிமலை விஷயத்தில் நீதிமன்றம் சரியான முடிவை அறிவிக்கவில்லை. வரும் 22-ம் தேதி நீதிமன்றம் கருத்து கூறிய பிறகே அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முடிவு செய்வோம்.

மாறுவேடம் போட்டு சபரிமலை சென்று ஐயப்பனை தரிசனம் செய்வது சரிதானா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இந்த அரசுக்கு ஒட்டு போட்டது தவறாகி விட்டது என கேரள மக்கள் நினைக்கும் நிலை தற்போது உள்ளது.  இது ஜனநாயகத்துக்கு நல்லது இல்லை. சபரிமலையில் கம்யூனிஸ்டுகள் புகுந்து, கடவுளை மதிக்காமல், ஆசாரங்களை மதிக்காமல் செயல்படுகின்றனர். இது நாள் வரை ஆசாரத்துடன் செயல்பட்ட சபரிமலையின் புனிதத்தைக் கெடுப்பவர்களை ஐயப்பன் தண்டிப்பார். கெடுதல் செய்ய நினைப்பவர்களுக்கு அந்தக் கெடுதலை திருப்பிக் கொடுக்க ஐயப்பன் திட்டம் போடுவார் என்ற நம்பிக்கை எனக்கு அதிகமாக உள்ளது" என்றார்.