Published:Updated:

`சத்தமில்லாமல் சரித்திர சாதனை படைத்துவருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!’ - அமைச்சர் உதயகுமார்

`சத்தமில்லாமல் சரித்திர சாதனை படைத்துவருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!’ - அமைச்சர் உதயகுமார்
`சத்தமில்லாமல் சரித்திர சாதனை படைத்துவருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!’ - அமைச்சர் உதயகுமார்

``தமிழக முதலமைச்சர் 11, 290 கோப்புகளில் கையெழுத்திட்டு சத்தமில்லாமல் சரித்திர சாதனை படைத்து வருகிறார். 7 ஆண்டு சாதனைகளை 700 நாள்களில் நிறைவேற்றியுள்ளார்'' என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழ்ந்துள்ளார்.

மதுரை திருமங்கலம் தொகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் பேசிய உதயகுமார், ``எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும், இல்லாமையை இல்லாமல் ஆக்க வேண்டும் என்ற கொள்கையுடன் ஆட்சி செய்த அம்மாவின் வழியில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்கிறார். இந்த அரசு போய்விடும் என்று எதிர்க்கட்சிகளின் தொடர் பொய் பிரசாரத்தை முறியடித்து இதுவரை 11, 290 கோப்புகளில் கையெழுத்திட்டு சாதனை படைத்துள்ளார். அவர் பதவியேற்ற 700 நாள்களில் 7 ஆண்டுகளுக்குச் செய்யக்கூடிய மக்கள் நலத்திடங்களைச் செய்து முடித்து சரித்திர சாதனை படைத்து அமைதியாக இருக்கிறார். அவருக்கு துணை முதலமைச்சர் உறுதுணையாக இருக்கிறார். 2 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மகிழ்ச்சியாகப் பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு வழங்கியுள்ளார். ஆனால், மக்கள் நலத்திட்டங்களைப் பாராட்ட மனமில்லாமல் அவதூறு பிரசாரத்தை எதிர்க்கட்சிகள் செய்து வருகின்றன" என்று பேசினார்.