2018 ஸ்பெஷல்
சினிமா
Published:Updated:

2018 டாப் 10 பிரச்னைகள் - வெறுப்பரசியலின் வேர்!

2018 டாப் 10 பிரச்னைகள் - வெறுப்பரசியலின் வேர்!
பிரீமியம் ஸ்டோரி
News
2018 டாப் 10 பிரச்னைகள் - வெறுப்பரசியலின் வேர்!

ச.தமிழ்ச்செல்வன் எழுத்தாளர்

2018-ம் ஆண்டு தமிழகத்தை ஆட்டிப்படைத்த 10 முக்கியப் பிரச்னைகளைப் பற்றி, பல்வேறு துறைசார்ந்த நிபுணர்கள் அலசுகிறார்கள்...

பொ
துவெளியில் அவதூறான மற்றும் ஆட்சேபகரமான பேச்சுகளை விதைப்பது 2018-ல் அதிகமாகியிருப்பதைக் கண்டோம். ஆளும் கட்சிகள், எதிர்க்கட்சிகள் அரசியல் காரணங்களுக்காகப் பரஸ்பரம் குற்றம் சாட்டுவதும் ஆதாரமில்லாமல் அவதூறு செய்யும் எல்லை வரை செல்வதும் அரசியல் களத்தில் எப்போதாவது நடப்பதுதான்.

2018 டாப் 10 பிரச்னைகள் - வெறுப்பரசியலின் வேர்!

ஆனால், இவையெல்லாம் 50-60கள் வரையிலும் நிகழ்ந்ததில்லை என்றே சொல்ல வேண்டும். அப்போதெல்லாம் நேரடியாகக் குற்றச்சாட்டை முன்வைப்பார்கள். சம்பந்தப்பட்டவர் மறுப்பார் அல்லது விளக்கம் சொல்வார். நான் இளைஞனாக இருந்த நாள்களில் எங்கள் ஊரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ஒருவர் தீப்பொறி பறக்கப் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டேன். `சோசலிசம் பேசுகிறாரே இந்த பி.ராமமூர்த்தி, அவர் பையனை அமெரிக்காவில் படிக்க வைக்கிறாரே… இவர் என்ன கம்யூனிஸ்ட்?” என்று தாக்கினார். ரொம்ப நாளைக்கப்புறம்தான் தெரிந்தது பி.ராமமூர்த்திக்குப் பையனே கிடையாது என்பது. இப்படி உள்ளூர்ப் பேச்சாளர்கள்தான் இல்லாததையெல்லாம் அன்றைக்குப் பேசுவார்கள். அதைக் கேட்கவும் கைதட்டி ரசிக்கவும் ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும் என்பது இந்தக் ‘கலைத்துறை’ இன்றுவரை ‘செழித்து வளர’ ஒரு முக்கியக் காரணம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஆனால், இன்று மாநிலப்பேச்சாளர்கள், அகில இந்தியப் தலைவர்களே இத்தகைய பேச்சுகளைப் பேசுகிறார்கள் என்பது வருந்தத்தக்க வீழ்ச்சி.

2018 டாப் 10 பிரச்னைகள் - வெறுப்பரசியலின் வேர்!

கடந்த ஆண்டில் இதில் ’சிக்ஸர்’களாக அடித்து ஆட்ட நாயகனாக உயர்ந்து நிற்பவர் பா.ஜ.க-வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா. பெரியாரைப்பற்றி, அம்பேத்கரைப்பற்றி, கம்யூனிஸ்ட்டுகளைப்பற்றி, திராவிட இயக்கம் பற்றி, காவல்துறையைப் பற்றி, நீதித்துறையைப்பற்றி, பினராயி விஜயன்பற்றி என்று எந்தத் துறையும் விட்டுப்போகாமல் வரிசை வைத்து ‘நீதி’ வழங்கியவர் அவரே. இதை நான் அவருடைய குணத்தின் பகுதியாகப் பார்க்கவில்லை. சங்பரிவாரின் அரசியல் வியூகத்தின் பகுதியாகவே புரிந்துகொள்கிறேன்.எப்படி அமரர் வாஜ்பாய் அவர்களும் திரு எல்.கே. அத்வானி அவர்களும் பா.ஜ.க-வின் முகமும் முகமூடியாகவும் இருக்க வேண்டும் என விதிக்கப்பட்டிருந்தார்களோ, அதேபோல தமிழக அரசியலில் பா.ஜ.க காலூன்ற, ஹெச்.ராஜா இப்படி அவதூறுப்பேச்சுகளில் களமிறங்கி ஆட வேண்டும் என்பது அவர்கள் திட்டத்தின் பகுதி.

2018 டாப் 10 பிரச்னைகள் - வெறுப்பரசியலின் வேர்!

சகிப்பின்மையும் வெறுப்பரசியலுமே அவர்களின் மூலதனம் என்கிறபோது அதை முன்னெடுப்பதற்கான முக்கியமான வடிவமாக அவதூறு பேச்சுகள் அமைவதில் வியப்பில்லை. இவரைப்போலவே சென்ற ஆண்டில் இத்துறையில் தடம் பதித்தவர்களாக பா.ஜ.க-வின் இன்னொரு பிரமுகரான எஸ்.வி.சேகர், சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் போன்றோரும் வருகின்றனர்.

பொதுவாக ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆசியும் ஆதரவும் இருப்பதால் இதுபோன்ற பேச்சுகளுக்காக அவர்கள் தண்டிக்கப்படுவோமே என்கிற அச்சமின்றி சுதந்திரமாக உலா வந்துகொண்டிருக்கிறார்கள்.அதிகாரப்பின்புலம் இல்லாமல் அதிகாரத்தை எதிர்த்துப் பேசியதற்காக திருமுருகன் காந்தி, திவ்யபாரதி, சுந்தரவள்ளி போன்றோர் வேட்டையாடப்பட்டதையும் மனுஷ்யபுத்திரன் போன்றோர் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டதையும் 2018-ல் பார்த்தோம்.

2018 டாப் 10 பிரச்னைகள் - வெறுப்பரசியலின் வேர்!

கருத்துரிமை, பேச்சுரிமை ஆட்சியாளர்களால் கடுமையாக ஒடுக்கப்பட்ட ஆண்டாக 2018 நம் முன் நிற்கிறது. ஆனால் அது மக்களுக்குத்தான். ஹெச்.ராஜா போன்றோருக்கு, என்ன வேண்டு மானாலும் பேசலாம், எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்கிற கட்டற்ற சுதந்திரம் வாரி வழங்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவிலும் நம் தேசத்தின் அடித்தளமாகத் திகழும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே அவமதித்துப் பேசும் அளவுக்கு ‘சுதந்திரம்’ சிலருக்கு அளிக்கப் பட்டுள்ளது. இது எங்கே போய் முடியும் என்கிற ஆழ்ந்த கவலை நமக்கு வருகிறது.