Published:Updated:

முதலமைச்சர் ஜெயலலிதா மே 21ல் டெல்லி பயணம்

முதலமைச்சர் ஜெயலலிதா மே 21ல் டெல்லி பயணம்
முதலமைச்சர் ஜெயலலிதா மே 21ல் டெல்லி பயணம்
முதலமைச்சர் ஜெயலலிதா மே 21ல் டெல்லி பயணம்

சென்னை: திட்டக் குழு துணைத் தலைவரை சந்திப்பதற்காக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வருகிற 21 ஆம் தேதியன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்.

தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசிடம் ஏற்கனவே நிதியுதவி கோரி வந்தார் ஜெயலலிதா. இந்நிலையில் டெல்டா பாசன பகுதி உள்பட தமிழகத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட தமிழகம் வந்த மத்தியக் குழு, முதலமைச்சர் ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசியது.

##~~##
இதனைத் தொடர்ந்தே ஜெயலலிதாவின் டெல்லி பயணம் தீர்மானிக்கப்பட்டதாக தெரிகிறது. வருகிற 21 ஆம் தேதியன்று டெல்லி செல்ல உள்ள ஜெயலலிதா, அங்கு திட்டக் குழு துணைத் தலைவர் மான் டேக் சிங் அலுவாலியாவை நேரில் சந்தித்து, தமிழகத்தின் பல்வேறு திட்டங்களுக்காக கூடுதல் நிதியுதவியை கோர உள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.