@கார்த்திகேயன் கவிதா.
குட்காவைப் போன்று பிளாஸ்டிக் பைகள் தடையும், ‘பிற மாநிலங்களிலிருந்து பிளாஸ்டிக் பைகளைக் கடத்தி விற்பவர்களுக்கு லாபம் தர வழிவகுக்கும்’ என்கிறார்கள். அப்படியெனில் இதுவும் ஊழலைத்தானே உண்டுபண்ணும்?

ம்... நல்ல விஷயங்களை அரசாங்கம் முன்னெடுத்தாலும்கூட, அதில் இருக்கும் ஓட்டைகளைத்தான் நாம் முதலில் விவாதிக்கிறோமா... இல்லை, ஓட்டைகளுக்காகவேதான் நல்ல விஷயங்கள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்று யோசிக்க வைத்துக்கொண்டே இருக்கிறார்களே!

@ஜான்செல்வராஜ், பாலவாக்கம்.
கழுகாரே, உண்மை சொல்ல வேண்டும். உம்முடைய சொந்த வேலைக்காக யாருக்காவது லஞ்சம் கொடுத்ததுண்டா (அரசாங்கம் சம்பந்தமாக)?

உண்மையைச் சொல்லுங்கள், நீங்கள் எந்த அரசு அலுவலகத்திலும் பணியாற்றவில்லைதானே!

@நரேந்திரன்.நி, வீரபாண்டி, திருப்பூர்-5.
உள்ளாட்சித் தேர்தல் எப்போது வரும்?

உளசாட்சி இல்லாதவர்கள் எல்லாம் வீட்டுக்கு விரட்டப்பட்டால்தான்!

@மு.கமால், கொல்லாபுரம்.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மூன்றாவது அணி முயற்சியைக் கையில் எடுத்திருப்பது, பி.ஜே.பி-க்கு உதவும் வகையில் காங்கிரஸின் வெற்றிக்குத் தடைபோடும் அரசியல் சதிதானே?

நோ கமென்ட்ஸ்!

‘எம்.ஜி.ஆர்’ மனோகரன், சின்னதாராபுரம்.
ம.தி.மு.க-வின் பலம்... பலவீனம்?

வைகோ!

@அஜித், மாடம்பாக்கம், சென்னை-12.
ஆண்கள் ஓட்டும் டூவீலர்களில் Dad’s gift, Mom’s gift என்றும், கார்களில் மனைவி மற்றும் பிள்ளைகளின் பெயர்களையும் எழுதுகிறார்கள். பெண்களின் வாகனங்களில் இப்படிப் பார்க்க முடிவதில்லையே?

பெண்களுக்கு ஞாபகசக்தி அதிகம் என்பதால், அதையெல்லாம் எழுதி வைப்பதில்லை.

சீர்காழி சாமா, ஸ்ரீரங்கம்.
‘சப்பைக்கட்டு’ என்பதன் பொருள் என்ன, உதாரணத்துடன் சொல்லுங்கள்?

பந்தல்கால் அல்லது மரம் போன்றவை பலமாக இல்லாத சூழலில், பலம் கூட்டுவதற்காக மரத்துண்டு (சப்பை) போன்றவற்றை வைத்துக் கட்டுவார்கள். இதுதான் சப்பைக்கட்டு. இதற்கு ஆயிரமாயிரம் உதாரணங்கள் உண்டு. சமீபத்திய உதாரணம்... வெற்றிகரமான தோல்வி!

கே.கே.ரவி, சென்னை-45.
ஒரு தொகுதியின் இடைத்தேர்தலுக்கே ஒட்டுமொத்த அமைச்சரவையும் முகாமிடுகிறது. ஆனால், கஜா புயல் பாதிப்புகளிலிருந்து இன்னமும் மீளமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் மக்களுக்காக அப்படி முகாமிட வில்லையே?

தேர்தல் என்றால் கட்டுக்கட்டாக அடுக்கலாம். கஜா என்றால் கட்டுக்கட்டாகக் கரைந்துவிடுமே!

இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி, தேனி.
அரசியல் சித்து விளையாட்டுகளில் தற்போது முதலிடம் யாருக்கு?

சமீபத்தில்தான் முதலிடத்தைக் கோட்டை விட்டுள்ளார் பி.ஜே.பி தலைவர் அமித் ஷா. அந்த இடத்துக்கு அடுத்த நபர் இன்னமும் தயாராகவில்லை.

சம்பத் குமாரி, பொன்மலை.
‘அரசியல் கட்சிகள் விதிகளை மீறி, சாலைகளில் வைக்கும் ஃப்ளெக்ஸ் பேனர்களைத் தடுக்க முடியாவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு விருப்பப்பட்ட கட்சியில் சேருங்கள்’ என்று உயர் நீதிமன்றம் சீறியிருக்கிறதே?

ஏற்கெனவே அவர்கள் எல்லாம் விருப்பப்பட்ட கட்சியில்தான் இருக்கிறார்கள், அதுவும் அரசாங்கச் சம்பளத்துடன்!

வி.சண்முகம், திருவாரூர்.
ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் பதிவுசெய்ய, வீடு தேடி அதிகாரிகள் வரும் வகையில் திட்டம் தீட்டப்பட்டுள்ளதே?

உண்மையிலேயே பாராட்டப் பட வேண்டிய திட்டம். இதை ஆரம்பத்திலேயே செய்திருந்தால்... கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகக் கைக்குழந்தைகளு டன் கால் கடுக்க அலைந்த பெற்றோர்களும் நன்றி சொல்லி யிருப்பார்கள். போகட்டும்... இனியாவது முழுமையாக நிறைவேற்றினால் நல்லது. இந்தப் பட்டியலில் வயது முதிர்ந்த பெரியோர்களையும் சேர்த்து விட்டால்... ஒட்டுமொத்தப் பாராட்டுகளையும் அள்ளலாம்!

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.
கல்கி, சாண்டில்யன் எழுத்தாளர்கள் வரிசையில் தற்போது யாரைக் காட்டுவீர்கள்?

அவர்களுடைய வரிசை என்பதைவிட, சமீப காலத்தில்... அதிலும் இந்த டிஜிட்டல் யுகத்திலும் வீரயுக நாயகன் பாரியை... வேள்பாரியாக ஆனந்த விகடனில் 108 வாரங்களாக வலம் வரச் செய்து, அந்தக்காலம் போலவே லட்சோப லட்சம் வாசகர்களைக் கட்டிப்போட்டிருக்கிறார் ‘சு.வெ’ என்றழைக்கப்படும் சு.வெங்கடேசன். தமிழகத்தில் மட்டுமல்ல, உலக அளவில் உள்ள தமிழர்களையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு பறம்பு மலையில் நடைபோட்ட சு.வெ., வேள் பாரியை அனைவரின் மனதிலும் விதைத்து, தானும் முளைத்து நிற்கிறார்!

@மனோகா, திருச்சி.
‘சிலைக்கடத்தல் வழக்குகளில் அர்ச்சகர் யாரையும் பொன்மாணிக்கவேல் கைது செய்யாதது ஏன்?’ என்று ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கேட்கிறாரே?

நியாயமான கேள்விதான். ஆலயக் காவலாளிகள், அர்ச்சகர்கள், அறங்காவலர்கள், நிர்வாக அலுவலர்கள் மற்றும் உயரதிகாரிகளின் கூட்டணியுடன்தான் அனைத்து கோல்மால்களும் நடந்துள்ளன. அப்படியிருக்க, அர்ச்சர்களை மட்டும் கணக்கில் கொண்டுவராமல் இருப்பது ஏன் என்கிற சந்தேகம் இயல்பாகவே பலருக்கும் ஏற்படத்தான் செய்கிறது. இதே கேள்வியை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலரும் எழுப்பிக் கொண்டுதான் உள்ளனர். உரிய பதிலைச் சொல்லவேண்டிய கடமை பொன்மாணிக்க வேலுக்கு இருக்கிறது.

@எல்.சேவுகபாண்டியன், ராதாபுரம்.
நாட்டுப் பாதுகாப்புக்கு பட்ஜெட்டில் நாற்பதாயிரம் கோடிக்கும் மேலாக நிதி ஒதுக்கும் மத்திய அரசு, ஒரு சதவிகிதத் தொகையைக்கூட கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க யோசிப்பது ஏன்?

இப்போதே கொடுத்துவிட்டால், மறந்துவிடுவார்கள் என்பதால் தேர்தல் நேரத்தில் கொடுக்கலாம் என்று யோசிப்பார்களோ! கேரளாவுக்கு மட்டும் வேறு நியாயமோ?

@க.சேகர், வடகோவனூர்.
மழுப்பாமல் பதில் சொல்லவும், ஸ்டெர்லைட் ஆலையால் நன்மையா... தீமையா?

ஸ்டெர்லைட் ஆலை மட்டுமல்ல.. அத்தனை ஆலைகளுமே கொள்ளிக்கட்டைகள்தான். எந்தக் கொள்ளிக்கட்டை கொஞ்சமாகச் சுடும்... எது அதிகமாகச் சுடும் என்பதைப் பார்த்துத் தேர்ந்தெடுக்கவேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். அதிலிருந்து மீளமுடியாமலும் தவிக்கிறோம். அந்த வகையில் ஸ்டெர்லைட் ஆலையின் தீமைகள் அதிகமே. இதேபோல தீமை நிறைந்த ஆலைகள் தூத்துக்குடியில் மட்டுமல்ல, இந்தியா முழுக்கவே, ஏன் உலகம் முழுக்கவே நிறைய இருக்கின்றன. வெளிநாடுகளில் மாசுக்கட்டுப்பாடு விதிமுறைகளை அமல்படுத்துவதில் கறாராக இருப்பார்கள். நம்மூரில் மாசுக்கட்டுப்பாடு வாரியமே விலை போய்விடுகிறதே. வளர்ச்சி, வேலைவாய்ப்பு, நம் தேவைகள் என்று பற்பல காரணங்களால் சூழலையே விலைகொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.

ஆர்.துரைசாமி, கோயம்புத்தூர்-6.
நான் கேட்கும் கேள்விக்கு கழுகார் பதில் கூற மறுப்பது ஏன்... என் மீது என்ன கோபம்?

என்ன... உங்கள் மீது கோபமா? நீங்கள் மட்டுமல்ல, உங்களைப் போல இன்னும் ஏகப்பட்ட பேர் கழுகார் மீது கோபத்தில் இருக்கிறீர்கள் என்பதுதான் உண்மை. அது உரிமையான கோபம். கேள்விகளைப் பொறுத்துதான் வாசகர்கள் இடம்பெறுகிறார்களே தவிர, பெயர்களைப் பொறுத்தல்ல. கட்டுக்கட்டாக தபால் மூலமாகக் கேள்விகள் குவிகின்றன. மின்னஞ்சல் மூலமாகவும் கொட்டுகின்றன. கூடுமானவரை அனைத்து வாசகர்களின் கேள்விகளும் இடம்பெற வேண்டும் என்கிற வகையில்தான் தேடித் தேடிப் பதிலைச் சேர்த்துக்கொண்டிருக்கிறேன். நிச்சயமாக உங்கள் கேள்விகளுக்கான பதில்களும் இடம்பெற்றே தீரும்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!