Published:Updated:

மிஸ்டர் கழுகு: குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச செல்போன்?

மிஸ்டர் கழுகு: குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச செல்போன்?
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச செல்போன்?

அரசின் அடேங்கப்பா யோசனை...

மிஸ்டர் கழுகு: குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச செல்போன்?

அரசின் அடேங்கப்பா யோசனை...

Published:Updated:
மிஸ்டர் கழுகு: குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச செல்போன்?
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச செல்போன்?

“புத்தாண்டு கேக் சாப்பிடும்” என்று கழுகாரிடம் பிளேட்டை நீட்டியபடியே பேச ஆரம்பித்தோம். “அமைச்சர்கள் வேலுமணியும் தங்கமணியும் டெல்லி சென்றார்களே?’’

‘‘முதல்வரின் தூதுவராகச் சென்றவர்கள், ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமனைத்தான் சந்தித்தார்கள். உண்மையில் பிரதமரைத்தான் சந்திக்க வேண்டும். ஆனால், தமிழக விவகாரங்கள் என்றாலே நிர்மலாவிடம் பிரதமர் தள்ளிவிட்டுவிடுவதால் வேறு வழியில்லாமல் போய்விடுகிறது நம்மவர்களுக்கு.’’

மிஸ்டர் கழுகு: குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச செல்போன்?

‘’சரி, அங்கே என்ன நடந்தது என்று சொல்லும்!’’

‘உண்மையில் இருவரும் சென்றது தமிழக உள்ளாட்சித் துறைக்கு மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய நிதியைக் கேட்கத்தான். சந்திப்புக்குப் பிறகு அதைத்தான் நிருபர்களிடமும் சொன்னார்கள். ஆனால், இதைவிட முக்கியமாக அ.தி.மு.க - அ.ம.மு.க இணைப்பு, கூட்டணித் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விஷயங்களில் எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்தே அதிகம் பேசப்பட்டதாம். வேலுமணியும் தங்கமணியும் திட்டவட்டமான பதிலைச்சொல்லாமல் மழுப்பிவிட்டு தான் வந்தார்களாம்.’’

‘‘பிரதமர் மோடி, ஜனவரியில் சென்னை வருகிறாராமே?’’

‘‘வருகை உறுதி. ஆனால், தேதி உறுதியாகவில்லை. சர்வதேச ராணுவத் தளவாடக் கண்காட்சியைத் தொடங்கிவைக்க, கடந்த ஏப்ரலில் மோடி சென்னை வந்தபோது, ‘கோ பேக் மோடி’ கோஷம் ட்ரெண்டிங் ஆனது. அதனாலேயே அதன்பிறகு தமிழகம் வருவதில் அவ்வளவாக அவர் ஆர்வம் காட்டுவதில்லை. கஜா புயலால் டெல்டா சின்னாபின்னமாகிக் கிடக்கும் சூழலிலும் எட்டிப்பார்க்கவில்லை. ஆனால், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தை ஒதுக்க முடியாதல்லவா?’’

‘‘சரி, தேர்தலுக்காக மட்டும் வருகிறார் என்று மறுபடியும் ட்ரெண்டிங் செய்ய ஆரம்பித்து விட்டால்?’’

மிஸ்டர் கழுகு: குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச செல்போன்?

‘’உண்மைதான். அதற்காகவே சிலபல திட்டங்களைத் தீட்டி வைத்துள்ளனர். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் விழா, சென்னை அண்ணா சாலை-வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் தொடக்க விழா என்று இப்போதைக்கு தயார்படுத்தியுள்ளனர். இத்துடன் தமிழக மக்களைக் குளிப்பாட்டும் வகையில் இன்னும் பல திட்டங்களையும் தீட்டுவார்களாம். அநேகமாக, கஜா புயல் நிவாரணம் தொடர்பாக, டெல்டா மக்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும்  அறிவிப்பைக்கூட அந்த விசிட்டின்போது பிரதமர் வெளியிடலாம் என்கிறார்கள்.’’

‘‘ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் திருமணத்துக்கு மோடி வரக்கூடும் என்று பேச்சு அடிபடுகிறதே?’’

‘‘அமெரிக்கா சென்றுள்ள ரஜினி, ஜனவரி 10-ம் தேதி சென்னை திரும்புகிறார். அதன் பிறகு, திருமணத் தேதியை அதிகாரப் பூர்வமாகச் சொல்வாராம். அநேகமாக, பிப்ரவரி 10-ம் தேதி திருமணம் என்கிறார்கள். இது உறுதியானால், அந்த சமயம் பார்த்து தன் தமிழக  விசிட்டையும் பிரதமர் வைத்துக்கொள்ளக்கூடும்.’’

‘‘ஜனவரி 2-ம் தேதி சட்டமன்றம் கூடுகிறதே?’’

“2019-ம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், கவர்னர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் கூட்டத் தொடர் தொடங்குகிறது. அரசுமீது பல்வேறு அதிருப்திகள் உள்ள நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக கவர்னர் உரையில் சிலபல கவர்ச்சி திட்டங்கள் குறித்த அறிவிப்பு இருக்குமாம். ஏற்கெனவே கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ஜெயலலிதா சொன்னபடி, ‘தொடக்கப்பள்ளி மாணவர் களுக்கு காலைச்சிற்றுண்டி, அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச செல்போன்’ போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து அறிவிக்க இருக்கிறார்களாம்.’’

“தி.மு.க என்ன திட்டம் வைத்துள்ளது?’’

‘‘கவர்னர் உரையின்போதே, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற எழுவர் விடுதலை குறித்து குரல் கொடுக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். கஜா புயல் நிவாரணம், மேக்கேதாட்டூ அணை, ஸ்டெர்லைட், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்துப் பேசவும் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் தயாராகிவருகிறார்கள்.’’

‘‘ஓ... புயல் கிளப்புவார்கள் என்று சொல்லும்!’’

‘‘இன்னும் இருக்கிறது. நடப்பு எம்.எல்.ஏ-க்கள் இறந்துபோனால், இரங்கல் தீர்மானம் நிறைவேற்றுவதுடன், அவையையும் நாள் முழுக்க ஒத்திவைப்பார்கள். அந்த வகையில் முன்னாள் முதல்வரும் திருவாரூர் தொகுதியின் எம்.எல்ஏ-வுமான கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றுவார்கள். ஆனால், அத்துடன் நில்லாமல், தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த வேண்டும் என்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் வலியுறுத்துவார் களாம் தி.மு.க-வினர். மறுக்கும்பட்சத்தில் இதை வைத்தும் கூடுதல் புயல் கிளப்புவார்களாம்.’’

மிஸ்டர் கழுகு: குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச செல்போன்?

‘‘அ.தி.மு.க-வில் கட்சிப் பதவிகளிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், குறிவைத்து நீக்கப்படுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே?’’

‘‘சசிகலா குடும்பத்துக்கு எதிராக பன்னீர் தர்மயுத்தம் தொடங்கியபோது முதல் ஆளாக, அவரது அணிக்கு வந்தவர் விழுப்புரம் டாக்டர் லெட்சுமணன். ராஜ்ய சபா எம்.பி-யாக இருந்த அவர்தான், விழுப்புரம் மாவட்டச் செயலாளராகவும் இருந்தார். அவரை மாற்றிவிட்டு அமைச்சர் சி.வி.சண்முகத்தை மாவட்டச் செயலாளர் ஆக்கியிருக்கிறார்கள். இதனால் பன்னீரை நம்பி வந்த லெட்சுமணனை அநாதையாக ஆக்கிவிட்டார்கள் என்று அவரின் ஆதரவாளர்கள் புலம்புகிறார்கள்.’’

“தலைமைச் செயலாளர் தரப்பின்மீது சில அதிகாரிகள் அதிருப்தியில் இருக்கிறார்களாமே?”

‘‘சீனியர் ஐ.ஏ.எஸ்-களிடம் புலம்பல் அதிகமாகக் கேட்கிறதாம். தமிழக வனத்துறையில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் பதவி உயர்வு பற்றிய கோப்பு முதல்வருக்கு அனுப்பப்பட்டது. அதில் சுகாதா தத், சஞ்சய் ஸ்ரீவத்ஸவா, சையத் முஸாமில் அப்பாஸ், கண்ணன் ஆகிய நான்கு பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மற்ற மூவரையும்விட சுகாதா தத் ஓர்ஆண்டு மூத்தவராக இருந்தாலும், பல ஆண்டுகள் பணியில் தொடராமல் வெளிநாட்டிலேயே இருந்தவராம். ‘இவருக்குப்பதவி உயர்வு வழங்கப்பட்டால், பலரது பதவி உயர்வு வாய்ப்பு பின்னோக்கிச் செல்லும்’ என்று ஐ.எஃப்.எஸ் வட்டாரத்தில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. சிலர் நீதிமன்றம் செல்லவும் தயாராக இருக்கிறார்கள். இதெல்லாம் தெரிந்திருந்தும், சுகாதா தத்துக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்பதில் தலைமைச் செயலாளர் தரப்பிலிருந்து முதல்வருக்கு அழுத்தம் தரப்படுவதாக ஒரு புகார் கோட்டையைச் சுற்றிவருகிறது. ஆனால், இந்த விஷயத்தில் முதல்வர் அலுவலகத்திலிருந்து சாமர்த்தியமாக காய்நகர்த்தியிருக்கிறார்களாம்!’’

‘’அடடே, ஆச்சர்ய தகவல்... சொல்லும் சொல்லும்.’’

‘’சுகாதா தத்துக்கு பதவியைத் தர முதல்வருக்கும் விருப்பமில்லையாம். அப்படிக் கொடுத்தால் சட்ட சிக்கல் வரக்கூடும்என்று முதல்வருக்கு எடுத்துச் சொல்லப்பட்டதும் ஒரு காரணம். அதனால், அந்தக் கோப்பு அப்படியே டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது. ஏற்கெனவே சுகாதா தத் மீதான புகார்கள் எல்லாம் டெல்லிக்கு நன்றாகத் தெரியும். எனவே, அங்கிருப்பவர்கள் சரியான முடிவை எடுப்பதைத் தவிர வேறுவழியில்லை. அதாவது, சுகாதா தத்துக்கு பதவியைத்தர மாட்டார்கள் என்று உறுதியாக நம்பியே முதல்வர் அலுவலகத் தரப்பிலிருந்து அப்படியே டெல்லிக்கு அனுப்பிவைக்கப்பட்டுவிட்டதாம்!’’

“அடேங்கப்பா...”

‘‘ஜாக்டோ-ஜியோ பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளதே?’’

‘‘சம வேலைக்கு, சம ஊதியம் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளுடன் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்திவருகிறார்கள். ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை வலியுறுத்தி மீண்டும் போராட்டம் செய்யத் தயாராக இருக்கிறார்கள். போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அரசுத் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. குறிப்பாக, ‘பணிக்காலத்தில் உரிய அனுமதி இல்லாமல் உயர் கல்வி படித்த, பல ஆயிரம் அரசு ஊழியர்களின் கல்வியை அங்கீகரிக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது. இதன் காரணமாக, இந்தப் போராட்டத்தில் இருக்கும் பலரும் பலனடைவதால், போராட்டத்தின் தீவிரம் குறையும் என்று அரசுத் தரப்பில்நினைக்கிறார்கள்.’’

“பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டது குறித்து கடந்த இதழில் சொல்லியிருந்தீர்... ஏதேனும் ஃபாலோ-அப்?”

“கட்சியில் சேர்க்கப்பட்ட பின்பு டிசம்பர் 27 அன்று ஆவின் சேர்மனாக பொறுப்பேற்றுக்கொண்டார் ராஜா. மதுரையின் இருஅமைச்சர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. புறநகர் மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான ராஜன் செல்லப்பா மட்டும் வந்தார். தேனி மாவட்டத்திலிருந்து வந்திருந்த தன் ஆதரவாளர்களுக்கு விருந்துவைத்துஅமர்க்களமாகக் கொண்டாடினார் ராஜா. இதில் சேர்மன் பதவிக்குப் போட்டியிட்ட செல்லமுத்துவும் பரிதாபமாகப் பக்கத்தில் நின்றுகொண்டிருந்ததுதான் அடேங்கப்பா அரசியல்” என்ற கழுகார், புத்தாண்டு வாழ்த்துச் சொல்லிப் பறந்தார்.

மிஸ்டர் கழுகு: குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச செல்போன்?

கனிமொழியிடம் கனிவு!

ஜா புயல் நிவாரண உதவிகள் குறித்த கேள்விகளை மாநிலங்களவை சபாநாயகரிடம் கொடுத்திருந்தாராம் ராஜ்யசபாஎம்.பி-யான கனிமொழி. இதேரீதியிலான கேள்விகளை திருச்சி சிவாவும் கொடுத்திருக்கிறார். ‘யாராவது ஒருவரது கேள்விக்கு மட்டுமே சபையில் அனுமதி அளிக்கப்படும்’ என்று சபாநாயகர் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிவாவும் கனிமொழியும் பரஸ்பரம் வருத்தத்தில் இருப்பதாகக் கேள்வி. இதை வைத்து, ‘கட்சிஎம்.பி-க்களிடையே ஒருங்கிணைப்பு இல்லை’ என்கிற ரீதியில் ஸ்டாலினிடம் சிலர் தூபம் போட்டு வருகிறார்களாம்.