Published:Updated:

கர்நாடகாவில் புதிய முதல்வர் யார்? காங்கிரஸ் இன்று முடிவு

கர்நாடகாவில் புதிய முதல்வர் யார்?  காங்கிரஸ் இன்று முடிவு
கர்நாடகாவில் புதிய முதல்வர் யார்? காங்கிரஸ் இன்று முடிவு
கர்நாடகாவில் புதிய முதல்வர் யார்?  காங்கிரஸ் இன்று முடிவு

பெங்களூரு: புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது.கூட்டத்திற்குப் பிறகே கர்நாடகாவின் புதிய முதல்வர் யார் என்பது தெரியவரும்.

கர்நாடக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 121 இடங்களைப் பிடித்து 7 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது.

இந்த நிலையில், புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பெங்களூருவில் இன்று நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் பங்கேற்கும் மத்திய அமைச்சர்கள் ஏ.கே.அந்தோணி, ஜிதேந்தர் சிங், காங்கிரஸ் பொதுச்செயலாளர் மதுசூதன் மிஸ்திரி, லூசினோ ஃபெரைரோ ஆகியோர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

##~~##
கூட்டத்திற்குப் பிறகே கர்நாடகாவின் புதிய முதல்வர் யார் என்பது தெரியவரும். மத்திய அமைச்சர் மல்லிகர்ஜூன கார்கே, சித்தராமையா, வீரப்ப மொய்லி, சிவக்குமார் ஆகியோர் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.