Published:Updated:

ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் தாமதம் ஏன்? ஸ்டாலின் பரபரப்பு தகவல்

ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் தாமதம் ஏன்? ஸ்டாலின் பரபரப்பு தகவல்
ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் தாமதம் ஏன்? ஸ்டாலின் பரபரப்பு தகவல்

தர்மபுரி: ‘அ.தி.மு.க.வினரின் லஞ்ச ஆசையால்தான் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் இன்று வரை நிறைவேறவில்லை’ என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் தாமதம் ஏன்? ஸ்டாலின் பரபரப்பு தகவல்

தர்மபுரி நாடாளுமன்ற செயல்வீரர்கள் கூட்டம் நேற்றிரவு தர்மபுரியை அடித்த பெரியாம்பட்டியில் நடந்தது. இதில் கலந்து கொண்டு, மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக கொண்டுவரப்பட்டதுதான் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம். கருணாநிதி தலைமையிலான முந்தைய ஆட்சியின்போது தான் இந்த திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

இம்மாவட்ட மக்கள் நிலத்தடி நீரை பருகுவதன் மூலம் ஏற்படும் ஃபுளூரோஸிஸ் எனப்படும் எலும்பு மற்றும் பல் பாதிப்பிலிருந்தும், குடிநீர் பற்றாக்குறையில் இருந்தும் விடுபட கொண்டு வரப்பட்டது தான் இந்த திட்டம். ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் இந்த திட்டம் கடந்த ஆட்சியின்போது விரைந்து செயல்படுத்தப்பட்டது. அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த நான் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அடிக்கடி வந்து இந்த பணிகளை பார்வையிட்டேன். ‘விரைவாக இந்த திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கு வர வேண்டும்’ என்று மட்டும் அதிகாரிகளிடம் கூறுவேன். மேலும், அப்போது யாருடைய குறுக்கீடும் இல்லாமல் அதிகாரிகள் பணிகளை வேகமாக செய்தனர்.

##~~##
தி.மு.க ஆட்சி முடிவுறும்போது 80 சதவிகிதம் பணிகள் நிறைவுற்றிருந்தது. இந்தநிலையில் அடுத்து ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க.வினர் இரண்டு ஆண்டுகளாகியும் நாட்களை தான் நகர்த்துகிறார்கள். திட்டம் நிறைவேறிய பாடில்லை. தவிக்கின்ற வாய்களுக்கும் தண்ணீர் இல்லை. அதற்கு அ.தி.மு.க.வினரின் லஞ்ச ஆசை தான் காரணம். மீதமிருக்கும் பணிகளை செய்வதில் எப்படி கமிஷன் பெறலாம், எப்படி லஞ்சம் வாங்கலாம் என்பதிலேயே அ.தி.மு.க.வினர் குறிக்கோளாக இருப்பதால் தான் எஞ்சியிருந்த 20 சதவிகித பணிகளை முடிக்காமல் இழுத்தடிக்கின்றனர். இதை நன்றாக உணர்ந்துவிட்ட தர்மபுரி, கிருஷ்ணகிரி மக்கள் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வினருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க இருக்கிறார்கள்’’ என்றார் ஸ்டாலின்.
எட்டி நின்று வேடிக்கைப் பார்த்த உள்ளூர் அ.தி.மு.க.வினர் இதைக்கேட்டதும் இறுகிய முகங்களோடு கூட்டம் நடந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்.
எஸ்.ராஜாசெல்லம்