Published:Updated:

``பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெற ட்ரெய்னிங்'' - ஸ்டாலினை கலாய்த்த பொன்.ராதாகிருஷ்ணன்!

``பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெற ட்ரெய்னிங்'' - ஸ்டாலினை கலாய்த்த பொன்.ராதாகிருஷ்ணன்!
``பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெற ட்ரெய்னிங்'' - ஸ்டாலினை கலாய்த்த பொன்.ராதாகிருஷ்ணன்!

கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் ஒரு பெரிய வலை பின்னப்பட்டுள்ளது. இதில் அரசியல் உள்நோக்கம் இருபதற்கான வாய்ப்பு உள்ளது. பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெறலாம் என நினைத்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை நடத்தி வருகிறார் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்கினார். பின்னர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  "கொடநாடு விவகாரத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக நினைக்கிறேன். இத்தனை நாட்கள் இல்லாமல் இப்போது இது வெளிவரவேண்டிய அவசியம் என்ன. இதில் மர்மம் உள்ளது. அந்த மர்மம் கண்டுபிடிக்கப்பட்ட வேண்டும். தேர்தல் வரும்போது மர்மம் வெளிவரவேண்டிய காரணம் என்ன. இதன் பின்னணியில் யார் உள்ளார்கள் எனத் தமிழக அரசு கண்டுபிடிக்க வேண்டும். கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் ஒரு பெரிய வலை பின்னப்பட்டுள்ளது. இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

பா.ஜ.க.வின் கூட்டணி 75 சதவீத இடங்களைக் கைப்பற்றும் வலுவான கூட்டணியாக அமையும். தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் வாக்கு வங்கி ஒரு சதவீதம் தான் இருக்கும். அவை மக்களால் புறந்தள்ளப்பட்ட கட்சிகள். பா.ஜ.க. எந்தக் கட்சியுடன் கூட்டணி பேர்ச்சுவார்த்தை வைத்தாலும் அதை வெளிப்படையாகப் பேசும், தயக்கம் காட்டவேண்டிய அவசியம் இல்லை. சட்டசபை கூட்டத்தில் சரியாக நடக்காதவர்கள், நடத்தாதவர்கள் கிராம சபை கூட்டத்தை நடத்தி வருகிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற முடியாது என நினைத்ததால், பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெறலாம் என நினைத்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை நடத்தி வருகிறார். பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெற டிரைனிங் எடுத்து வருபவர்களுக்கு வாழ்த்துகள்" என்றார்.