Published:Updated:

சீக்ரெட் ஸ்பெஷல்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 9 தெறிப்புகள்!

சீக்ரெட் ஸ்பெஷல்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 9 தெறிப்புகள்!
சீக்ரெட் ஸ்பெஷல்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 9 தெறிப்புகள்!

இந்த இதழ் ஜூனியர் விகடன் : https://bit.ly/2SSc5HV

சீக்ரெட் ஸ்பெஷல்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 9 தெறிப்புகள்!

``ஆவணங்களைக் குறிவைத்து மட்டும் இந்தக் கொள்ளைச் சம்பவம் நடக்க என்ன காரணம்?’’

``ஜெயலலிதா, மருத்துவமனையில் இருந்தபோதே திட்டம் தீட்டப்பட்டுள்ளது. முக்கியமான ஆவணங்கள் அனைத்தையும் கொடநாடு வீட்டில்தான் ஜெயலலிதா வைத்திருந்திருந்தாராம். குறிப்பாக, 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, அவரால் கட்டம் கட்டப்பட்ட ஐவர் அணியில் இருந்தவர்கள் மீது ஏகத்துக்கும் குற்றச்சாட்டுகள் வந்தன. அவர்களைத் தனித்தனியாக அழைத்துக் கடுமையாக விசாரித்தார் ஜெயலலிதா. வாங்கிக் குவித்த சொத்துகள், உளவுத்துறை கொடுத்த புகார் பட்டியல் எனப் பல ஆவணங்களை ஜெயலலிதா அப்போது கைவசம் வைத்திருந்தார். இவையெல்லாம் எப்போது வெளியானாலும் சிக்கலாகும் என்பதால், அங்கேயே பத்திரப்படுத்தினார். அமைச்சர்கள் சிலர் தொடர்புடைய சிக்கலான ஆவணங்களும் கொடநாட்டில்தான் வைக்கப்பட்டிருந்தனவாம்..."

சீக்ரெட் ஸ்பெஷல்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 9 தெறிப்புகள்!

-  தெஹல்கா இணையதளத்தின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் பற்றவைத்திருக்கும் திரி, எடப்பாடியின் தூக்கத்தைத் தொலைக்க வைத்துள்ளது. ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவின் மர்மங்களையும் பின்னணியையும் `கொ(ட)லைநாடு! - ஸ்கெட்ச் போட்டாரா எடப்பாடி?' எனும் தலைப்பில் புட்டுப் புட்டு வைக்கிறார் மிஸ்டர் கழுகு. 

சீக்ரெட் ஸ்பெஷல்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 9 தெறிப்புகள்!

``தமிழகத்தில், படு `வீக்’காக இருந்துவரும் பி.ஜே.பி-க்கு வருகிற நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வசதியான குதிரை தேவை. உடைந்துபோன அ.தி.மு.க அணிகளை நம்பிக் களமிறங்குவதில், அவர்களுக்கே நம்பிக்கை இல்லை. ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற அரசியல் புதுமுகங்களை மட்டுமே நம்பித் தேர்தலில் குதிப்பதும் அவர்களுக்கு விஷப் பரீட்சையாகவே முடியும். அதேசமயம், பலம் மிக்க மாநிலக் கட்சியான தி.மு.க-வுடன் பி.ஜே.பி கைகோப்பதும் முடியாத காரியம். ஏனெனில், கொள்கை ரீதியாக எதிர் வரிசையில் நிற்கும் தி.மு.க, பி.ஜே.பி-யை வீழ்த்துவதையே நோக்கமாகக்கொண்டு, மதச்சார்பற்றக் கூட்டணியை உருவாக்கி வருகிறது. எனவே, பி.ஜே.பி கூட்டணியில் தி.மு.க-வைக் கொண்டுவருவது சாத்தியமற்ற ஒன்று. இதையெல்லாம் மோடி தரப்பு நன்றாக உணர்ந்திருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகளைக் குழப்பி, கூட்டணிக்குள் சலசலப்பை உண்டு பண்ணும் தந்திரமாகவே, மோடி இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். தவிர, அரசியலில் சூழல்கள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்..."

- "வாஜ்பாய் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கூட்டணி தர்மத்தைப் பின்பற்றுவோம். தமிழகத்தில், பழைய நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நமது கதவுகள் திறந்தே இருக்கும்" என்று பிரதமர் நரேந்திர மோடி 'வலைவிரித்து'ப் பேசிய வார்த்தைகள்தான், தற்போது தமிழக அரசியல் களத்தில் ஹாட் டாபிக். இதைச் சற்றே விரிவாக அலசுகிறது 'ஸ்டாலினுக்கு வலை! - இது மோடிக்கு கைவந்த கலை...' எனும் அரசியல் பார்வை.

சீக்ரெட் ஸ்பெஷல்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 9 தெறிப்புகள்!

``நான் கொலை காண்டுல இருக்கேன்...’’ - பொங்கலையொட்டி வெளியாகியிருக்கும் 'பேட்ட' படத்தில் ரஜினியின் பன்ச் வசனம் இது. உண்மையில், ரஜினி இப்போது அப்படிதான் இருக்கிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். காரணம், ரசிகர் மன்ற விவகாரங்கள்தான். இதற்காக, `சீக்ரெட் சிக்ஸ் ஆபரேஷன்' என்கிற ஒன்றை ஆரம்பித்துள்ளார் ரஜினி...

ரஜினி இங்கு இல்லாத நேரத்தில் சில சம்பவங்கள் நிர்வாகத்தில் அரங்கேறிவிட்டன. ஸ்டாலின், ராஜசேகர் ஆகிய இருவரின் நடவடிக்கைகளை விமர்சித்து, வாட்ஸ்அப் குரூப்களில் மன்றத்தினர் பகிர, ரஜினிக்குத் தகவல் எட்டியது. டென்ஷன் ஆனவர் கடந்த ஜனவரி 12-ம் தேதி ராகவேந்திரா திருமண மண்டபத்துக்குத் திடீர் விசிட் அடித்தார். மதியம் 12 மணியிலிருந்து 2 மணி வரை, தான் ஊரில் இல்லாத நேரத்தில் நடந்த சம்பவங்கள் குறித்துத் தீவிர விசாரணை செய்துள்ளார். இதில் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டாலும், ஆறு விஷயங்களை மட்டும் சீரியஸாக விசாரிக்கத் தொடங்கிவிட்டாராம் ரஜினி...

- ரஜினியின் ரசிகர் மன்ற விவகாரங்களின் அப்டேட்டுகளை அலசுகிறது 'ரஜினியின் சீக்ரெட் சிக்ஸ் ஆபரேஷன்!' எனும் செய்திக் கட்டுரை. 

சீக்ரெட் ஸ்பெஷல்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 9 தெறிப்புகள்!

``அ.தி.மு.க-வில் இருந்தபோது, சசிகலாவின் விசுவாசி நீங்கள். அதனாலேயே கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தீர்களா?''

``நட்புரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் சசிகலா மீது எனக்குத் தனிப்பட்ட அன்பு உண்டு. அரசியலுக்கு அப்பாற்பட்ட இந்த மரியாதையும் விசுவாசமும் எப்போதும் தொடரும். ஆனால், டி.டி.வி.தினகரனுக்கு நான் ஒருபோதும் ஆதரவாளர் கிடையாது. மக்களுக்கு சேவை செய்வதற்கு, சரியான களம் காங்கிரஸ் கட்சிதான். மற்றபடி, அ.தி.மு.க-விலிருந்து யாரும் என்னை நீக்கவில்லை. காங்கிரஸ் கட்சியில் சேருகிற நாள்வரை, நான் அ.தி.மு.க-வின் உறுப்பினராகத்தான் இருந்தேன்.’’

- அகில இந்திய மகளிர் காங்கிரஸின் பொதுச்செயலாளராகப் பணியாற்றக் கிடைத்துள்ள வாய்ப்பு கிடைத்தது தொடங்கி ரஜினிகாந்த் அரசியல் நடவடிக்கை மீதான கருத்து வரை ``ரஜினியைப் பற்றிப் பேசுவதே டைம் வேஸ்ட்!’’ எனும் பேட்டியில் பொளந்து கட்டியிருக்கிறார், அரசியலில் தீவிர களம் காணும் திருநங்கையான அப்ஸரா.

இந்த இதழ் ஜூனியர் விகடன் : https://bit.ly/2SSc5HV

சீக்ரெட் ஸ்பெஷல்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 9 தெறிப்புகள்!

``...நாங்குநேரியில் தனியாருக்கு அனுமதி வழங்கியதன் மூலம் அதைத் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தவும் அரசு திட்டமிட்டிருக்கிறது. தமிழக மின்சார வாரியம் என்பது சேவை நிறுவனம். அதைத் தனியாரிடம் கொடுப்பதால் லாப நோக்கத்தில் செயல்பட்டுப் பொதுமக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தி விடுவார்கள். விரைவில் பொதுமக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் காட்டமாகக் கூறினார்.

- குடிநீர் விநியோகத்தைத் தொடர்ந்து மின்வாரியத்தையும் தனியார்மயமாக்கும் முயற்சியாக மின் பகிர்மானத்தைத் தனியாரிடம் தமிழக அரசு ஒப்படைத்திருக் கிறது. நெல்லை மாவட்டம் நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இருந்து அதற்கான முயற்சி தொடங்கப் பட்டிருப்பதாக மின்வாரியத் தொழிலாளர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் குதிக்கவும் அவர்கள் தயாராகி வருகின்றனர். 'ஷாக் கொடுக்கும் அரசு! - குடிநீரைத் தொடர்ந்து மின்சாரமும் தனியார்மயம்...' என்ற' விரிவான செய்திக் கட்டுரையைத் தவறவிடாதீர்கள். 

சீக்ரெட் ஸ்பெஷல்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 9 தெறிப்புகள்!

``தீர்ப்பை வரவேற்கிறோம். ஆனால், மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த திட்டக்குடியைச் சேர்ந்த ஆளுங்கட்சிப் பிரமுகர்கள், முக்கியப் புள்ளிகள் பலரை வழக்கின் ஆரம்பத்திலேயே போலீஸார் வழக்கு பதிவு செய்யாமல் விட்டுவிட்டனர். எனவே, இந்த வழக்கில் அரசே மேல்முறையீடு செய்து, சுதந்திரமாகச் சுற்றித் திரிபவர்களுக்கும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டும். 'குற்றவாளிகளிடம் ரூ.5 லட்சம் வசூலித்து, அதை இழப்பீடாக மாணவிகளுக்கு வழங்க வேண்டும்' என்று நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. இது நடைமுறைக்குச் சரியாக வராது. அரசே இழப்பீடு கொடுத்துவிட்டு, அந்தத் தொகையைக் குற்றவாளிகளிடமிருந்து வசூல் செய்துகொள்ள வேண்டும். மாணவிகளுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவர்களின் உயர் படிப்பு வரையிலான செலவுகளை அரசே ஏற்க வேண்டும். அவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.’’

- ``கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் பள்ளி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்து அவர்களின் வாழ்க்கையையே நிர்மூலமாக்கிய 16 பேருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியிருக்கிறது. அதேசமயம், பல பிரமுகர்களை வழக்கில் சேர்க்காமல் போலீஸார் காப்பாற்றியுள்ளனர்’’ என்று குற்றம்சாட்டுகிறது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம். இது தொடர்பான 'பாலியல் வன்கொடுமைத் தீர்ப்பு... முக்கியக் குற்றவாளிகளைத் தப்பவிட்ட போலீஸ்?' எனும் செய்திக் கட்டுரையில் பலதரப்பு பார்வை இடம்பெற்றுள்ளது. 

சீக்ரெட் ஸ்பெஷல்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 9 தெறிப்புகள்!

தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்: 2014-ல் 'தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்' புத்தகம் வந்தது நினைவிருக்கிறதா? அதை அடியொற்றி எடுக்கப்பட்ட படமே, 'தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்'. நேருவுக்கு அடுத்து இந்தியாவை அதிகக் காலம் ஆண்ட மன்மோகன் சிங்கின் பயோபிக்.

தாக்கரே: 'ஹிந்து ஹிருதய் சாம்ரேட் பாலேசாகிப் தாக்கரே...' என்று உச்சஸ்தாயில் சிவசேனாத் தொண்டன் அடித்தொண்டையில் கத்துவதில் தொடங்குகிறது படம். வசனங்கள் வெறுப்பரசியலைப் பேசுகின்றன. 'லுங்கியை உருவிவிட்டு அடிக்கணும்' வசனம் தமிழர்களை நேரடியாகத் தாக்குகிறது. "ஹிட்லரை ஹீரோவாகக் காட்டுவது எப்படியோ, அதேபோலத்தான் தாக்கரேவை ஹீரோவாகக் காட்டுவதும் ஆபத்து" என்று கொதிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். 

பி.எம் நரேந்திரமோடி: பயோபிக் படங்களின் பட்டியலில், இதுதான் பயங்கரமான படம். கான்களையும் கபூர்களையும் தூக்கியடிக்க பாலிவுட் பவுன்ஸராக வருகிறது 'பி.எம் நரேந்திர மோடி'! இயக்கம் ஓமங் குமார். ஏற்கெனவே 'மேரிகோம்', 'சரப்ஜித்' பயோபிக்குகளை இயக்கிய அனுபவம் கொண்டவர் இவர். 

தி அயர்ன் லேடி: பாலிவுட், டோலிவுட் பயோபிக் எடுக்கும்போது, பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா கோலிவுட்? முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக்கை சுடச்சுடத் தயாரித்துவருகிறார்கள். அதுவும் ஒன்றல்ல... இரண்டு படங்கள். இரண்டு இயக்குநர்கள். தனித்தனியாக எடுக்கிறார்கள்.

என்.டி.ஆர் கதாநாயகடு: ஜனவரி 9-ம் தேதி வெளிவந்த 'என்.டி.ஆர் கதாநாயகடு' படம் தெலுங்கு தேசத்தைத் தெறிக்கவிட்டுக்கொண்டிருக்கிறது. அப்பா என்.டி.ஆர் கேரக்டரில், பட்டையைக் கிளப்பியிருக்கிறார் மகன் பாலய்யா என்றழைக்கப்படும் பாலகிருஷ்ணா. 

- இந்திய சினிமா உலகில் லேட்டஸ்ட் டிரெண்ட் 'பயோபிக்' படங்கள். சமீபத்தில் 'என்.டி.ஆர் கதாநாயகடு' படம் அக்கட தேசத்தில் காரத்தை எகிறவிட்டிருக்கும் நிலையில், வெகுவிரைவில் டாப் மோஸ்ட் அரசியல் பிரபலங்களான நரேந்திர மோடி, மன்மோகன் சிங், ஜெயலலிதா, பால் தாக்கரே, ராஜசேகர் ரெட்டி என்று வரிசையாக 'பாலிடிக்ஸ் பயோபிக்' படங்கள் பட்டாசு வெடிக்கக் காத்திருக்கின்றன. சூடான பொங்கலைச் சாப்பிட்டுக்கொண்டே இதைப் படியுங்கள்... வறுத்த மொறுமொறு மசாலா முந்திரி சாப்பிட்ட எஃபெக்ட் கிடைக்கும்!

சீக்ரெட் ஸ்பெஷல்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 9 தெறிப்புகள்!

தூத்துக்குடியில் பேருந்து ஏறும் இடத்தில் முன்கூட்டியே ஆஜரான சீருடை அணியாத போலீஸார், மறைவாக இருந்து எல்லோரையும் கண்காணித்தனர். ஸ்னோலினின் தந்தைக்குப் போன் செய்த போலீஸார், "எங்கே இருக்கீங்க. வீட்டுல உங்களைக் காணோமே..." என்று கேட்க, "விகடன் நிகழ்ச்சிக்குப் போகிறோம்..." என்று அவர் சொல்லியிருக்கிறார். அதற்கு, "அப்படியா... தகவல் சொல்லவே இல்ல. எப்போ வருவீங்க, எங்கே தங்குவீங்க, ஹோட்டல் பெயர் என்ன..." என்றெல்லாம் கேட்டுள்ளனர்...

பல இடையூறுகள் மற்றும் தீவிர கண்காணிப்புக்கு மத்தியில் விழா நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்த மக்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்குக் கிளம்பினர். அப்போதும் போலீஸார் அவர்களைப் பின்தொடர்ந்தனர். ஹோட்டலை அடைந்தவுடன், அங்கிருந்து வயர்லெஸ்ஸில் தகவல்களைக் கூறினார்கள். அந்த ஹோட்டல் பகுதி தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டது. அது மட்டுமல்லாமல், இந்தக் குடும்பங்களின் பக்கத்து வீட்டினர், உறவினர்கள் எனப் பலரையும் கேள்விகளால் துளைத்துள்ளனர் போலீஸார்...

- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானப் போராட்டத்தின்போது நடந்த போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் உயிர்நீத்த 13 பேரும், விகடன் நம்பிக்கை விருதுகளின் டாப் டென் மனிதர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் 'விகடன் நம்பிக்கை விருதுகள்' வழங்கும் விழாவில் அவர்களின் குடும்பத்தினர் கெளரவிக்கப்பட்டனர். இப்படியொரு தகவலைக் கேள்விப்பட்டதும் தமிழகக் காவல்துறைக்கு வியர்த்துவிட்டது. இது தொடர்பான 'தூத்துக்குடி தியாகிகளுக்கு விகடன் செய்த கௌரவம்! - அச்சத்தில் பதறிய காவல்துறை...' எனும் செய்திக் கட்டுரை மிகவும் முக்கியமானது. 

சீக்ரெட் ஸ்பெஷல்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 9 தெறிப்புகள்!

வேலூரில் வழக்கறிஞராக மட்டுமே அறியப்பட்டவர் செங்குட்டுவன். ஓ.பன்னீர்செல்வத்தின் நண்பரான சேகர் ரெட்டி ஆதரவுடன் அ.தி.மு.க-வில் ஐக்கியமானார். அதன்பிறகு மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர், அரசு வழக்கறிஞர் என அடுத்தடுத்து பதவிகளில் அமர்த்தப்பட்ட செங்குட்டுவன், 2014-ல் வேலூர் நாடாளுமன்ற வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். பி.ஜே.பி கூட்டணியில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்தை வீழ்த்தி எம்.பி ஆனார் செங்குட்டுவன். பின்னர், தினகரன் ஆதரவாளராக மாறினார். அதனாலே இவரது தொகுதியில் எந்த அரசுப் பணிகளும் சரிவர நடக்கவில்லை என்கிறார்கள். தொகுதிக்குள் வலம் வந்தோம்.

- தொகுதி மேம்பாடு நிதி செலவழித்தல், வாக்குறுதிகள் என்ன ஆனது?, தொகுதி மற்றும் நாடாளுமன்ற செயல்பாடுகளை ஆராய்ந்து சரியான மதிப்பெண்களைத் தந்து வேலூர் எம்.பி செங்குட்டுவனை 'என்ன செய்தார் எம்.பி.?' பகுதியில் மதிப்பீடு செய்கிறது ஜூ.வி டீம்.

இந்த வார ஜூனியர் விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2QMnoiM