

புதுடெல்லி: கச்சத் தீவை மீட்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று தாக்கல் செய்த மனுவில், கச்சத்தீவு விவகாரத்தில் கடந்த 1974 மற்றும் 1976ஆம் ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட உடன்படிக்கைகள் அரசியலமைப்புக்கு எதிரானவை என கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,"கச்சத்தீவு விவகாரத்தில் கடந்த 1974 மற்றும் 1976ஆம் ஆண்டுகளில் மத்திய அரசு மேற்கொண்ட உடன்படிக்கைகள் அரசியலமைப்புக்கு எதிரானவை. எனவே, இந்த உடன்படிக்கைகளை செல்லாது என அறிவிப்பதுடன், கச்சத்தீவை இந்தியாவுடன் மீண்டும் இணைக்க உத்தரவிட வேண்டும்.
##~~## |
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கச்சத் தீவை மீட்க கோரி அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.