Published:Updated:

காவல்துறைக்கு எதிராக தமிழக ஆளுனரிடம் அன்பு மணி ராமதாஸ் நேரில் புகார்

காவல்துறைக்கு எதிராக தமிழக ஆளுனரிடம் அன்பு மணி ராமதாஸ் நேரில் புகார்
காவல்துறைக்கு எதிராக தமிழக ஆளுனரிடம் அன்பு மணி ராமதாஸ் நேரில் புகார்

சென்னை: பா.ம.க.வினர் மீதான தமிழக காவல்துறை நடவடிக்கைகள் குறித்து ஆளுனர் ரோசய்யாவிடம் பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். 

இன்று மதியம் 12 மணிக்கு கிண்டி ஆளுனர் மாளிகையில் ஆளுநர் ரோசய்யாவை அன்பு மணி ராமதாஸ் சந்தித்தார். அப்போது, பா.ம.க.வினர் மீது தமிழக போலீசின் நடவடிக்கைகள் பாரபட்சமாக உள்ளது என்று புகார் தெரிவித்த அவர், இது தொடர்பாக மனு ஒன்றை அளித்தார்.

 

காவல்துறைக்கு எதிராக தமிழக ஆளுனரிடம் அன்பு மணி ராமதாஸ் நேரில் புகார்

சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, " தமிழகத்தில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் நடத்தவும், பொதுமக்களின் பிரச்னைகளை வெளியில் சொல்லவும் சுதந்திரம் இல்லை. அடக்குமுறை நிலவுகிறது. ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது.

##~~##
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வன்னியர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். அரசின் ஒருதலைபட்சமான போக்கை வன்மையாக கண்டிக்கிறோம். இதை மக்கள் மன்றத்திற்கு கொண்டு செல்வோம்’’ என்றார்.

படம்: வேங்கடராஜ்