Published:Updated:

திருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக் கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்!

திருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக் கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்!
திருநெல்வேலியில் லெனின் சிலையைத் திறக்கக் கூடாது - இந்து மக்கள் கட்சி கண்டனம்!

திருநெல்வேலியில் சி.பி.எம் கட்சி அலுவலக வளாகத்தில் கம்யூனிச புரட்சியாளர் லெனின் சிலை வருகின்ற 22-ம் தேதி திறக்கப்படவுள்ளது. இதைப் பெரிய விழாவாக சி.பி.எம் தோழர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். 

திருநெல்வேலியில் லெனின் சிலை திறப்பதைத் தடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியினர் மத்திய, மாநில அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக நம்மிடம் பேசிய மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சோலைக் கண்ணன், ``நெல்லையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் அந்நிய நாட்டு புரட்சியாளர் லெனின் சிலையை நிறுவ நினைப்பது வண்மையாகக் கண்டிக்க வேண்டிய செயல். லெனின் பிறந்த நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியினர் நம் நாட்டின் நேதாஜி உட்படப் புரட்சியாளர்களின் சிலையை நிறுவுவார்களா?

லெனின் சிலையை இங்கு நிறுவ நினைப்பதன் மூலம் அந்நிய நாட்டுக்காரர்களை எதிர்த்து, சுதந்திரத்துக்காக உயிரைத் துச்சமாக  நினைத்துப் போராடிய புரட்சியாளர்களை இழிவுப்படுத்துவதாகும். எனவே, நெல்லையில் புரட்சியாளர் என்ற போர்வையில் லெனின் சிலையை நிறுவ நினைப்பதை மத்திய, மாநில அரசுகள் உடனே தடை செய்ய வேண்டும். அந்நிய நாட்டு லெனின் சிலையை இந்நாட்டில் நிறுவ நினைக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென்று இந்து மக்கள் கட்சி சார்பாக மத்திய, மாநில அரசுக்குக் கோரிக்கை வைக்கிறோம்'' என்றார்.