Published:Updated:

கர்நாடகா முதல்வராக சித்தராமையா தேர்வு!

கர்நாடகா முதல்வராக சித்தராமையா தேர்வு!
கர்நாடகா முதல்வராக சித்தராமையா தேர்வு!

பெங்களூரு: பெங்களூருவில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல். ஏ.க்கள் கூட்டத்தில் கர்நாடக  முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வருகிற திங்கட்கிழமையன்று அவர் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். சித்தராமையா கர்நாடக சட்டசபைக்கு 5 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

முதல்வர் ரேஸ்

முன்னதாக எட்டு ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடகத்தில் கோட்டையை கைப்பற்றிய காங்கிரசில்  முதல்வர் நாற்காலியை கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. "முதல்வர் வேட்பாளர் யார்?"என அறிவிக்காமலே தேர்தலை சந்தித்த காங்கிரஸ் 121 இடங்களை பிடித்து தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்ற போதே 'ஆட்சி அமைப்பதில் இடியாப்ப சிக்கல் வரும்' என கர்நாடகத்தின் அரசியல் பட்சிகள் அலறின.

கர்நாடகா முதல்வராக சித்தராமையா தேர்வு!


சித்த‌ராமைய்யா, மல்லிகார்ஜூன கார்கே, டி.கே.சிவக்குமார், ஆர்.வி.தேஷ்பாண்டே, பரமேஷ்வர், சாமனூர் சிவசங்கரப்பா, எஸ்.எம்.கிருஷ்ணா, ஜாபர் ஷெரிஃப் ஆகியோரிடையேதான் கடும் போட்டி நிலவியது.  ஆரம்பம் முதலே 'முதல்வர் பதவி எனக்கு தான்' என சொல்லி வந்த கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பரமேஷ்வரை, வெற்றிகரமாக உள்ளடி வேலை பார்த்து சொந்த சட்டமன்ற தொகுதியிலே தோற்கடித்தார் அதே கட்சியை சேர்ந்தவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான‌ சித்தராமைய்யா.

சீனியருக்கா... ஜூனியருக்கா?


கர்நாடகா முதல்வராக சித்தராமையா தேர்வு!

கர்நாடக முதல்வர் ரேஸில் பலர் இருந்தாலும், உண்மையில் போட்டியே ''சித்தராமைய்யாவுக்கும், மல்லிகார்ஜூன கார்கேவுக்குக்கும்தான் நிலவியது. 'குருபா' சமூகத்தை சேர்ந்த சித்தராமைய்யா ஏழு ஆண்டுகளுக்கு முன் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தவர். ஆனால் காங்கிரஸ் தொண்டர்களின் செல்வாக்கை பெற்றவர். எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது பி.ஜே.பி முதல்வர்களின் கண்களில் தொடையை தட்டியே விரலை விட்டு ஆட்டியவர்.

வடகர்நாடகத்தை சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கேவோ பரம்பரை பரம்பரையாக காங்கிரஸில் அனைத்து பொறுப்புகளையும் வகித்தவர். தலித் சமூகத்தை சேர்ந்த கார்கே தற்போது மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். தரம்சிங் முதல்வர் ஆன போதே, மல்லிகார்ஜூன கார்கே தான் முதல்வராகும் வாய்ப்பு வந்தது. ஆனால் சிறு சிக்கலில் வாய்ப்பு கைநழுவி போனது. அதனால் காங்கிரஸ் தொண்டர்களின் செல்வாக்கை பெற்ற கார்கேவை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. இருப்பினும், வேறு கட்சியில் இருந்து வந்தவருக்கு முதல்வர் பதவி வழங்கினால், கட்சியில் காலங்காலமாக இருக்கும் பாரம்பரிய காங்கிரஸ்காரர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும் என்பதால் சித்தராமைய்யாவிற்கு பதவி வழங்க காங்கிரஸ் மேலிடம் தயங்கியது.

கர்நாடகா முதல்வராக சித்தராமையா தேர்வு!

சித்தராமையா தேர்வு

இந்நிலையில் பெங்களூருவிலுள்ள குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பகல் 12 மணிக்கு நடைபெற்றது. இதில் டெல்லியில் இருந்து வந்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் ஏ.கே. அந்தோணி மற்றும் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் மசூதன பாபு உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

அப்போது மொத்தமுள்ள 121 எம்.எல்.ஏ.க்களையும் நான்கு குழுக்களாக பிரித்து, அவர்களது கருத்துக்களை கேட்டறிந்தனர்.பின்னர் ரகசிய வாக்கெடுப்பும் நடைபெற்றது.

இதில் 70 எம்.எல்.ஏ.க்கள் சித்தராமையாவுக்கு ஆதரவு தெரிவித்தததாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் பின்னர் கர்நாடக சட்டசபை காங்கிரஸ் தலைவராக சித்தராமையா ஒருமந

இதனையடுத்து சித்தராமையா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


-இரா.வினோத்

படங்கள்:
வசந்தகுமார்