Published:Updated:

ஹைடெக் ஆகிறது பெரியார் பேருந்து நிலையம்! - பூமி பூஜை செய்தார் ஓ.பன்னீர்செல்வம்

ஹைடெக் ஆகிறது பெரியார் பேருந்து நிலையம்! - பூமி பூஜை செய்தார் ஓ.பன்னீர்செல்வம்
ஹைடெக் ஆகிறது பெரியார் பேருந்து நிலையம்! - பூமி பூஜை செய்தார் ஓ.பன்னீர்செல்வம்

 மதுரையில், 1020 கோடி ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் இன்று தொடங்கிவைக்கப்பட்டது.

சிறப்பு மிக்க பெரியார் பேருந்து நிலையத்தை ஹைடெக்காக மாற்றுவது உட்பட, பல்வேறு திட்டங்களுக்கான பூமி பூஜையைத் தொடங்கி வைக்க துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகைதந்தார்.

159.70 கோடி ரூபாய் மதிப்பில் 6 தளங்கள் கொண்ட வணிக வளாகத்துடன், ஆயிரக்கணக்கான வாகனங்களை பார்க்கிங் செய்யும் வகையில், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், வைஃபை வசதியுடன்கூடிய பிரமாண்டமான பெரியார் பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வைகை ஆற்றங்கரையோரத்தை  மேம்படுத்த 81.41 கோடி, பழைய சென்ட்ரல் மார்க்கெட் அருகே பல அடுக்குகள் கொண்ட வாகன நிறுத்துமிடம் 40.19 கோடி, புராதனச் சின்னங்களை இணைக்க, புதிய வழித்தடம் அமைக்க 21.70 கோடி, மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி நான்கு சித்திரை வீதிகளையும் மேம்படுத்த 15.24 கோடி, திருமலை நாயக்கர் மகாலைச் சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்த 12 கோடி என ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மொத்தம் 1020 கோடி ரூபாய் செலவிடத் திட்டமிடப்பட்டு, அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை ஓ.பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில், இத்திட்டம் செயல்படுத்தப்படும் தொகுதியின் தி.மு.க  எம்.எல்.ஏ-வான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு முறையான அழைப்பு இல்லை என்று புகார் எழுந்துள்ளது.