Published:Updated:

காடுவெட்டி குரு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது!

காடுவெட்டி குரு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது!
காடுவெட்டி குரு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது!
காடுவெட்டி குரு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது!

சென்னை:  பாமக எம்.எல். ஏ. காடுவெட்டி குரு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரத்தில் போலீஸ் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார். அன்று மாலை 6.30 மணி அளவில் ஜெயங்கொண்டம் தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ. காடுவெட்டி குருவும் திடீரென்று கைது செய்யப்பட்டார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள செங்கல்பட்டு கோர்ட் மாஜிஸ்திரேட்ட வீட்டில், அவரது முன்னிலையில் காடுவெட்டி குரு ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் ஒரு வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் மாமல்லபுரம் தாழம்பூரில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக, போலீஸ் எஸ்.பி.யின் பரிந்துரையை ஏற்று அவரை  தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் இன்று உத்தரவிட்டார்.

அந்த உத்தரவு புழல் சிறையில் உள்ள குருவிடம் இன்று மாலை அளிக்கப்பட்டது. ஏற்கனவே பா.ம.க. தொண்டர்கள் இரண்டு பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் குருவும் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.