Published:Updated:

ராமதாஸுக்கு அனைத்து வழக்குகளிலும் ஜாமீன்: நாளை விடுதலை ஆகிறார்

ராமதாஸுக்கு அனைத்து வழக்குகளிலும் ஜாமீன்: நாளை விடுதலை ஆகிறார்
ராமதாஸுக்கு அனைத்து வழக்குகளிலும் ஜாமீன்: நாளை விடுதலை ஆகிறார்
ராமதாஸுக்கு அனைத்து வழக்குகளிலும் ஜாமீன்: நாளை விடுதலை ஆகிறார்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வள்ளியூர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியதை தொடர்ந்து, அவர் நாளை விடுதலையாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மரக்காணம் கலவரம் தொடர்பாக விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த வழக்கில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி உள்பட ஏராளமானோரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கு, ரஜினி ரசிகர்கள் தாக்கப்பட்ட வழக்கு உள்பட 5 வழக்குகளில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள  ராமதாஸுக்கு ஏற்கனவே நான்கு வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது.

##~~##
இந்நிலையில் இன்று மற்றொரு வழக்கிலும் நெல்லை மாவட்டம் வள்ளியூர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இதற்கான நீதிமன்ற உத்தரவு இன்று இரவு அல்லது நாளை காலைக்குள் திருச்சி மத்திய சிறையில் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அப்படி ஒப்படைக்கப்பட்டால், அவர் நாளை சிறையிலிருந்து விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராமதாஸ் மகன் அன்புமணி ராமதாஸ், நேற்று மாலை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட நிலையில் ராமதாஸ் நாளை விடுதலை ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.