Published:Updated:

மத்திய அமைச்சர்கள் பன்சால், அஸ்வனி குமார் ராஜினாமா

மத்திய அமைச்சர்கள் பன்சால், அஸ்வனி குமார் ராஜினாமா
மத்திய அமைச்சர்கள் பன்சால், அஸ்வனி குமார் ராஜினாமா
மத்திய அமைச்சர்கள் பன்சால், அஸ்வனி குமார் ராஜினாமா

புதுடெல்லி: மத்திய அமைச்சர்கள் பவன் குமார் பன்சாலை தொடர்ந்து, சட்டத்துறை அமைச்சர் அஸ்வனி குமாரும் இன்று இரவு ராஜினாமா செய்தார்.

உறவினர் மீதான லஞ்சப் புகாரால் சர்ச்சையில் சிக்கிய ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால் இன்று மாலை தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வற்புறுத்தலின்பேரிலேயே பன்சாலை ராஜினமா செய்யுமாறு பிரதமர் கேட்டுக்கொண்டதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூன் கார்கே? 

பன்சாலுக்குப் பதில் கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜூன் கார்கே, ரயில்வே அமைச்சராக நியமிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பதவியை கைப்பற்றும் போட்டியில் சித்தராமையாவிடம் தோற்றுப்போன விரக்தியில் இருந்த கார்கேவை சமாதானப்படுத்தும் விதமாக, அவருக்கு ரயில்வே அமைச்சர் பதவியை வழங்க காங்கிரஸ் மேலிடம் தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அஸ்வனி குமாரும் ராஜினாமா


##~~##
இதனிடையே நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணை அறிக்கையை பார்வையிட்டு, திருத்தம் செய்ததற்காக உச்ச நீதிமன்றத்தின் கடும் கண்டனம் மற்றும் எதிர்கட்சிகள் பதவி விலக கோரியது போன்ற காரணங்களால் நெருக்கடி அதிகரித்ததை தொடர்ந்து, சட்டத் துறை அமைச்சர் அஸ்வனி குமாரும் இன்று இரவு தமது பதவியை ராஜினாமா செய்தார்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் ரேஸ்கோர்ஸ் இல்லத்திற்கு இன்று இரவு வந்த அஸ்வினி குமார், தமது ராஜினாமா கடிதத்தை அளித்ததாக தெரிகிறது.
அமைச்சரவை மாற்றம்   
இரண்டு அமைச்சர்கள் ராஜினாமாவால் மத்திய அமைச்சரவை அடுத்த வாரம் மாற்றியமைக்கப்பட உள்ளது.