Published:Updated:

`கொல்கத்தா கூட்டத்தில் ராகுலை முன்மொழியாதது ஏன்?’ - ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி!

`கொல்கத்தா கூட்டத்தில் ராகுலை முன்மொழியாதது ஏன்?’ - ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி!
`கொல்கத்தா கூட்டத்தில் ராகுலை முன்மொழியாதது ஏன்?’ - ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி!

மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணையும் நிகழ்ச்சி இன்று திருப்பூரில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை செளந்திரராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

`கொல்கத்தா கூட்டத்தில் ராகுலை முன்மொழியாதது ஏன்?’ - ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி!

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, "நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடியை பிப்ரவரி 10 - ம் தேதி திருப்பூர் அழைத்து வர அனுமதி கேட்டிருக்கிறோம். அப்படி அனுமதி கிடைக்கும்பட்சத்தில், திருப்பூரில் மிகப்பெரிய அளவில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். பா.ஜ.க மட்டுமே உண்மையான மதசார்பின்மை கட்சி. நரேந்திர மோடி மீண்டும் நாட்டின் பிரதமரானால் பொருளாதாரம் மேலும் வலுப்பெறும். அ.தி.மு.கவின் தம்பிதுரை பல்வேறு விவகாரங்களில் மாற்றுக் கருத்தை தெரிவித்து வந்தாலும் அமைச்சர் ஜெயக்குமார் தெளிவாகவே பேசி வருகிறார்.

தம்பிதுரையின் கருத்து அ.தி.மு.கவின் கருத்து கிடையாது. இன்றைய தினம் சென்னை லயோலா கல்லூரியில் ஓவியக் கண்காட்சி என்ற பெயரில் குறிப்பிட்ட மதத்தை மட்டும் அவமதிக்கும் வகையில் ஓவியங்களை காட்சிக்கு வைத்திருப்பதற்கு மதசார்பின்மை பேசுபவர்களும், நடுநிலையாளர்களும், ஸ்டாலின் உட்பட அனைவருமே பதில் சொல்லியாக வேண்டும். சென்னையில் நடைபெற்ற கூட்டத்தின்போது ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்த ஸ்டாலின், ஏன் கொல்கத்தாவில் நடைபெற்ற கூட்டத்தின்போது அவரை பிரதமர் வேட்பாளராக முன் மொழியவில்லை?’ என்று கேள்வி எழுப்பினார்.