Published:Updated:

`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்!

`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்!
`பதவிக்காக ஓ.பி.எஸூம் ஈ.பி.எஸூம் கொலையும் செய்வார்கள்’ - புகழேந்தி பாய்ச்சல்!

"புதிதாக கட்டிய மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி தராததால் மத்திய அரசை தம்பிதுரை எதிர்கிறார் என அ.ம.மு.கவைச்சேர்ந்த கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் அ.ம.மு.க சார்பில் இன்று பொதுக்கூட்டம் நடை பெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக திண்டுக்கல் வந்த அ.ம.மு.க கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், "நீதிமன்ற உத்தரவை மீறி  பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைச்சாலையில் சசிகலாவுக்கு ஏ-கிளாஸ் வசதிகள் செய்து கொடுக்கின்றனர் என பழி சுமத்தப்படுகிறது. டி.ஐ.ஜி ரூபா சசிகலா பெயரை வைத்து அரசியல் செய்து வருகிறார். சிறைச்சாலையில் பால் கூட கிடைக்காமல் பல இன்னல்களை அனுபவித்து வருகிறார் சசிகலா. தமிழகத்தில் நடப்பது ஜெயலலிதா ஆட்சி இல்லை. மோடி ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. ரிமோட் கண்ட்ரோல் மூலம் மோடி ஆட்சி செய்து வருகிறார்.

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை புதிதாக கட்டப்பட்ட மருத்துவ கல்லூரிக்கு மத்திய அரசு அனுமதி வழங்காத  காரணத்தால், மத்திய அரசுக்கு எதிராக பேசி வருகிறார். பா.ஜ.க அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி அரசு செயல்பட்டால் மூன்று மணி நேரம் கூட அவர் ஆட்சியில் இருக்க முடியாது. அவர் கொலை வழக்கில் உள்ளே சென்றுவிடுவார். கொடநாடு விவகாரத்தில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கும் தொடர்பு உள்ளது. திராவிட ஆட்சியில் கொலை குற்றம் சாட்டப்பட்டவர்கள் இதுவரை முதல்வராக இருந்தது கிடையாது. ஆனால் தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருப்பது வேதனைக்குரியது.

கொடநாடு விவகாரத்தில் நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்றால் உடனடியாக முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும். இந்த வழக்கில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல் விசாரணை அதிகாரியாக  நியமிக்க வேண்டும். அப்போதுதான் பல உண்மைகள் வெளியே வரும். எந்த தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க அ.ம.மு.க தயாராக உள்ளது. ஆனால் தி.மு.க தேர்தலை சந்திக்க பயப்படுகிறது.

தமிழகத்தில் நடைபெற உள்ள தேர்தலில் பா.ஜ.க - அதிமுக கூட்டணி அமைக்கும். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்துவிட்டு, கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொண்டார். கருணாநிதி எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தெளிவாக எடுப்பார். ஆனால் ஸ்டாலினுக்கு தெளிவான முடிவு எடுப்பதில் தடுமாற்றம் உள்ளது. பதவிக்காக ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் கொலையும் செய்வார்கள்" என்றார்.