Published:Updated:

ராமதாஸ் ஜாமீனில் விடுவிப்பு; ஜெயலலிதா, திருமா மீது சாடல்! ( படங்கள் )

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று காலை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். முன்னதாக, அவருக்கு வள்ளியூர் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.

வன்முறைச் சம்பவங்கள் மற்றும் காவல்துறையின் கைது நடவடிக்கை தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதாவையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனையும் ராமதாஸ் கடுமையாக சாடினார்.

மரக்காணம் கலவரம் தொடர்பாக விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த வழக்கில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி உள்பட ஏராளமானோரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் கூடங்குளம் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கு, ரஜினி ரசிகர்கள் தாக்கப்பட்ட வழக்கு உள்பட 5 வழக்குகளில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள  ராமதாஸுக்கு ஏற்கனவே நான்கு வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து நேற்று மற்றொரு வழக்கிலும் நெல்லை மாவட்டம் வள்ளியூர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து அவர் இன்று காலை திருச்சி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

படம்: ப்ரீத்தி கார்த்திக்