மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலகட்டத்தைப் பற்றிப் பேசும் ‘தி ஆக்சிடென்டல் ப்ரைம் மினிஸ்டர்’ படத்தை, தீவிரமாக எதிர்க்கிறது காங்கிரஸ். அந்த வகையில், 2019-ன் முதல் பப்ளிசிட்டி மைலேஜ் காங்கிரஸ் கட்சிக்குத்தான். சரி, மற்ற கட்சிகள் என்னவெல்லாம் செய்து மைலேஜ் தேற்றலாம்?

அதென்னமோ பி.ஜே.பி-யை வம்புக்கு இழுப்பது தமிழக இயக்குநர்களுக்கு ஜாலி டைம்பாஸ் போல. ‘பேட்ட’ படத்திலும் கலாசாரக் காவலர்கள், ஆன்டி இந்தியன் என ஏகப்பட்ட விஷயங்களை இழுத்து வைத்துக் கலாய்த்திருக்கிறார்கள். பி.ஜே.பி தலைவர்கள் இதைக் கண்டித்து கார்த்திக் சுப்பராஜ், விஜய் சேதுபதி தொடங்கி புரொடக்ஷன் பாய் வரை அனைவருக்கு எதிராகவும் போராடலாம்.

விஸ்வாசம், கூட்டுக் குடும்பத்தின் அவசியத்தைப் பேசும் படம். தமிழகத்தில் மன்னார்குடி வகையறாவில் கூட்டுக்குடும்பம் பெரிய பிரச்னையாக இருப்பது அ.தி.மு.க-வுக்குத்தான். போதாக்குறைக்கு அஜித் வேறு சர்ஃப் எக்ஸல் விளம்பரம்போல பளீர் வெள்ளை காஸ்ட்யூமில் வருகிறார், தினகரனைப் போலவே சிரித்துச் சிரித்துப் பேசுகிறார். இதையெல்லாம் கூறி அ.தி.மு.க-வினர் போராடலாம்.

‘நம் புராணக் கதைகளில் கடவுள்கள் அளவுக்கு, பேய்களுக்கும் முக்கியத்துவம் உண்டு. ஆனால், சமீபகாலமாக பேய்களை அநியாயத்துக்குக் கலாய்க்கிறார்கள். அதுவும் விரைவில் வரவிருக்கும் ‘தில்லுக்கு துட்டு’ படத்தில் சந்தானம் ஓவர்டைம் பார்த்துக் கலாய்த்திருப்பதால், அந்தப் படத்தை எதிர்த்து அர்ஜுன் சம்பத் தலைமையில் களமிறங்கலாம்.

இதுவரை கண்டனம் தெரிவிக்கும் போராட்டங்களைத்தான் பார்த்திருப்போம். உலக வரலாற்றிலேயே கூட்டணியை உறுதி செய்வதற்காகப் போராடும் ஒரே ஆள் டாக்டர் கிருஷ்ணசாமிதான். அவருக்கு, காரணங்கள் எல்லாம் தேவையில்லை. எனவே, எதுவும் சொல்லாமலேயே பி.ஜே.பி அலுவலகம் இருக்கும் தி.நகர் ஏரியா பக்கம் போராடினால் கேட்டது கிடைக்கும்.

‘எம்.ஜி.ஆர் நடித்த படத்தின் டைட்டிலைப் பயன்படுத்த யாருக்கும் தகுதி இல்லை. இதை எம்.ஜி.ஆரின் அரசியல் சிஷ்யைக்கு அண்ணன் மகள் என்ற முறையில் வன்மையாகக் கண்டிக்கிறேன். எனவே, இந்தப் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் ‘குலேபகாவலி’ படத்தை எதிர்த்து என் கட்சி உறுப்பினர்கள் போராடுவார்கள்’ என தீபாம்மா அறிக்கை தட்டலாம். அது ஒண்ணுமில்ல, தூங்கி எழுந்த அசதியில ஒரே ஒரு வருஷம் போராட்டம் லேட்டாயிடுச்சு. பட், தட் இஸ் தீபாம்மா ஸ்டைல்.