@எஸ்.பிரேமானந்த், திண்டிவனம்.
‘கனா’ படம் பார்த்தீர்களா?

ஒடுக்கப்படும் பெண்கள் மற்றும் விவசாயிகள்தான் படத்தின் பேசுபொருள். வேதனைகளை மட்டும் சொல்லி நகர்த்தாமல், பெருமைகளையும் பேசுகிறது படம். அழுத்தமான மற்றும் ஆழமான வசனங்கள், காட்சிகளால் அத்தனையையும் நம் மனதில் பதியம்போடுகிறது படம். தயாரிப்பாளராகக் களம் இறங்கிய முதல் படத்திலேயே கனமான ‘கனா’வைக் கையில் எடுத்ததற்காக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ராயல் சல்யூட்.

@பரங்கிப்பேட்டை ஹம்துன் அப்பாஸ், சிங்கப்பூர்.
ஆரா மீன், அயிரை மீன் இவற்றில் கழுகார் விரும்புவது எந்த மீன். ‘சுத்த சைவம்’ என்கிற மழுப்பலான பதில் வேண்டாம்.

‘வீரசைவம்’!

@ராஜ்குமார் வெங்கட்ராமன்.
எடப்பாடி பழனிசாமியுடன் கருணாஸ் ராசியாகிவிட்டாரே, இனி கூவத்தூர் ரகசியம் வெளியே வராதுதானே?

கூவத்தைவிட கேவலமான அந்த ரகசியங்கள், வந்தால்தான் என்ன, வராவிட்டால்தான் என்ன.

வி.கருணாநிதி, திருமக்கோட்டை.
தமிழக அரசின் 1,000 ரூபாய் பொங்கல் பரிசை உடனடியாக வழங்காமல், ரேஷன் கடைகளில் டோக்கன்களாக தருகிறார்களே நியாயமா?

‘டோக்கன் அட்வான்ஸ்’ என்பதை மறைமுகமாகப் புரியவைக்கிறார்கள். சில அதிர்ஷ்டக்கார கார்டுதாரர்கள் ரூ.1,000 பெற்றுக்கொண்டார்கள். நீதிமன்ற ஆணையால் அந்த புண்ணியம் பலருக்குத் தடுக்கப்பட்டுள்ளது.

@ப.த.தங்கவேலு, பண்ருட்டி,
அ.தி.மு.க-வின் தம்பிதுரை மட்டும் பி.ஜே.பி மற்றும் மத்திய அரசை மிகக் கடுமையாக விமர்சிக்கிறார். அந்தக் கட்சியுடன் கூட்டணி இல்லை என்றும் சீறுகிறாரே?

பி.ஜே.பி தயவில்தான் தனக்கு நாடாளுமன்றத் துணை சபாநாயகர் பதவி கிடைத்துள்ளது என்றாலும், தொடர்ந்து அக்கட்சியை எதிர்க்கிறார் தம்பிதுரை. இதற்காக, கோபப்பட்டு அந்தப் பதவியைப் பறிக்க
பி.ஜே.பி முற்படவும் இல்லை. இதை அப்படியே தஞ்சாவூர் கோயில் கல்வெட்டில் பதித்து வைத்தால், வருங்காலச் சந்ததிகளுக்கு ‘துணிச்சல்’ மற்றும் ‘பெருந்தன்மை’ ஆகியவற்றுக்கு உதாரணமாகக் காட்டலாம்

மல்லிகா குரு, மேற்கு மாம்பலம், சென்னை.
டி.டி.வி.தினகரன் தனக்கு எத்தனை சோதனைகள் வந்தாலும் துணிவுடன் எதிர்கொள்கிறார், சிரித்த முகத்துடன் பேசுகிறார். அது, அவருக்கு ப்ளஸ்தானே?

ஆனால், அது இயற்கையானதாகத் தெரியவில்லை. அதற்கும் கொஞ்சம் பயிற்சி எடுத்துவிட்டார் என்றால், நிச்சயமாக ப்ளஸ்தான்.

@முத்துக்கிருஷ்ணன், தராபடவேடு, வேலூர்.
ஊழல் குற்றவாளியான ஜெயலலிதாவின் படத்தை அரசாங்கத் தரப்பில் தொடர்ந்து பயன்படுத்துவது நியாயமா?

நியாயவான்கள் ஆட்சியில் இருந்தால், உங்களின் கேள்விக்கு நியாயமான பதில் கிடைக்கும். ஆனால், நியாய மன்றங்களும்கூட இதுதொடர்பாக உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்காமல் கடந்துபோய்க் கொண்டிருப்பது நெருடலாக உள்ளது!

@அலெக்ஸாண்டர் அந்தோணிசாமி.
இயேசு கிறிஸ்து தன் சீடர்களாக ஆண்களை மட்டுமே தேர்ந்தெடுத்ததால்தான் பெண்கள், ஆண்களுக்கு இணையானவர்கள் அல்ல என்கிற ஏற்றத்தாழ்வு உருவாகியிருக்கும் என்று நினைக்கிறேன்... சரியா?

யூ டூ அலெக்ஸாண்டர்!

@ஞானப்பிரகாஷ்.
தற்போதைய தமிழக எம்.எல்.ஏ-க்களில், இதுவரையிலான பதவிக் காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டிருப்பவர் யார்?

மதுரை மத்தியத் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ-வான தியாகராஜன் பழனிவேல், சுட்டிக்காட்டக்கூடிய அளவுக்குத் தகுதி பெற்றுள்ளார். முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜனின் மகனான இவர், கைநிறைய சம்பளத்தை அள்ளிக்கொடுத்த அமெரிக்கத் தனியார் வங்கிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, எம்.எல்.ஏ ஆகியிருப்பவர். எதிர்க்கட்சி உறுப்பினர் என்றாலும், சோர்ந்துவிடாமல் மக்கள் பணிகளில் அசத்திக்கொண்டிருக்கிறார். மக்களிடமிருந்து மனுக்களைப் பெறுவதற்காக முக்கியத் தெருக்களில் புகார் பெட்டிகள், நாளிதழ்கள் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சிகளில் தன் மெயில் ஐ.டி, வாட்ஸ்அப் எண்கள், அலுவலகத்தில் பணியாளர்கள் என்று நியமித்துள்ளார். மனுக்களைக் கணினியில் பதிவேற்றி உரிய நடவடிக்கைகளுக்காகப் பரிந்துரை செய்வதுடன், அவை நிறைவேறுவதை உறுதிப்படுத்துவதற்காகப் பணியாளர்களை நியமித்துள்ளார். மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காகத் தொகுதி நிதியைச் செலவிடும் தியாகராஜன், செலவுப் பட்டியலையும் வெளியிடுகிறார். அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவருமே இவரது பரிந்துரைகளைக் கூடுமானவரை உடனடியாக நிறைவேற்றி வைக்கும் அளவுக்கு இவரது அணுகுமுறை இருப்பதுதான் ப்ளஸ்.

@பிட்சல், மதுரை.
எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா போன்ற தலைவர்கள் இல்லாத தமிழகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

தலைவர் இல்லை என்பதற்காக, ஒரு குடும்பம்கூட ஓய்ந்துபோய்விடக்கூடாது. அப்படியிருக்க, தலைவர்கள் மற்றும் அவர்களின் புகழை வைத்துக்கொண்டு, அவர்கள் இல்லா விட்டால் நாட்டுக்கு எதிர்காலமே இல்லை என்பது போலப் பேசுவதே... அபத்தம். தனிநபர் வழிபாட்டிலிருந்து நாம் மொத்தமாக வெளியே வரவேண்டும். நாட்டின் குடிமகன்கள் ஒவ்வொருவருமே தலைவர்கள்தான். தனிப்பட்ட நபர்கள் மட்டுல்ல.

ஜி.கணேசன், நீடாமங்கலம்.
‘மகாபாரத கௌரவர்கள் 100 பேரும் சோதனைக் குழாய் குழந்தைகள்’ என்று ஆந்திரப் பல்கலைக்கழகத் துணைவேந்தரும் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்துவிட்டாரே?

புராணம், இதிகாசம், காப்பியம், பஞ்சாங்கம், செவிவழிச் செய்தி என்று பல வழிகளிலும் பரப்பப்பட்டிருப்பவை, தகவல்களே. அவற்றில் ஒருசில மிகைப்படுத்தப்பட்டிருக்கலாம், ஆளுக்குத் தகுந்தாற்போல மாற்றிக் கூறப்பட்டிருக்கலாம்! ஆனால், ஒட்டுமொத்தமாக அவற்றில் இருக்கும் தகவல்களைப் புறக்கணித்துவிடக்கூடாது. ஒருவேளை அந்தக் காலத்திலேயே சோதனைக் குழாய் குழந்தைகள் இருந்திருக்கலாம். ஆனால், அதையெல்லாம் அறிவியல் ரீதியில் அலசும்வரை ஆபத்து இல்லை. ஆட்டம் காட்டுவதற்காகவும் ஆட்சியைப் பிடிப்பதற்காகவும் அடுத்தடுத்து பதவி உயர்வுகளைப் பெற்று வாழ்க்கையை அனுபவிப்பதற்காகவும் இஷ்டம்போல கிளப்பிவிடுவதுதான் ஆபத்து.

@கார்மாங்குடி எஸ்.வெங்கடேசன்.
தமிழக அரசு, மத்திய அரசுக்குப் பணிந்துதானே ஆட்சி செய்கிறது. அப்புறம் எதற்கு மூச்சுக்கு முந்நூறு தடவை ‘அம்மா அரசு’ என்றே சொல்லிக்கொண்டுள்ளனர்?

அவர்கள் சொல்லும் ‘அம்மா’, ‘பாரத் மாதா’வாக இருக்கக்கூடாதா என்ன!

@பார்த்தசாரதி.
தொலைக்காட்சி விவாத மேடைகளில் ‘நோட்டா’வுக்காக விவாதிக்க யாரும் வருவதில்லையே?

‘ம்க்கும், நோட்டாவுக்கு போட்டு என்ன ஆகப்போகிறது’ என்கிற கேள்விக்குத் தேர்தல் ஆணையமே இதுவரை சரியான பதிலை வரையறுக்கவில்லை. குறிப்பிட்ட சதவிகித வாக்குகளை ‘நோட்டா’ அள்ளியிருந்தால், அந்தத் தொகுதியின் தேர்தல் செல்லாது என்பதுபோன்ற சட்டத்திருத்தங்களைக் கொண்டுவந்தால், தேர்தலின் மீது மக்களுக்கும் ஆர்வம் பிறக்கக்கூடும்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 7
57, அண்ணா சாலை, சென்னை- 600002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!