“வாஜ்பாய் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கூட்டணி தர்மத்தைப் பின்பற்றுவோம். தமிழகத்தில், பழைய நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நமது கதவுகள் திறந்தே இருக்கும்” என்று பிரதமர் நரேந்திர மோடி ‘வலைவிரித்து’ப் பேசிய வார்த்தைகள்தான், தற்போது தமிழக அரசியல் களத்தில் ஹாட் டாபிக். பி.ஜே.பி-க்கு எதிரான மெகா கூட்டணியை தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னெடுத்துவரும் நிலையில், பி.ஜே.பி அந்தக் கூட்டணியைக் குழப்பியடிக்க அல்லது தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்கு வியூகம் வகுக்கவே இப்படி ஒரு தந்திரமான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்!

தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திரமோடி, வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் ஆலோசனை நடத்திவருகிறார். அந்த வகையில் மூன்றாவது கட்டமாக ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், அரக்கோணம் ஆகிய நாடாளுமன்றத் தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்களிடம் கடந்த 10-ம் தேதி அவர் உரையாடினார். அப்போது அரக்கோணம் தொகுதியில் பணப்பாக்கம் பேரூராட்சித் தலைவர் செல்வராஜ், ‘வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., ரஜினி, கமல் இதில் யாருடன் பி.ஜே.பி கூட்டணி வைக்கும்?” என்று கேட்டார் இந்தக் கேள்விக்குத்தான் மேற்கண்ட பதிலை மோடி அளித்திருக்கிறார்

பிரதமர் மோடி தனது பதிலில், ‘வாஜ்பாய் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கூட்டணி தர்மத்தைக் கடைப் பிடிப்போம்’ என்பதும் ‘பழைய நண்பர்களுக்குக் கதவுகள் திறந்தே இருக்கும்’ என்பதும் தி.மு.க-வைக் குறிவைத்து வீசப்பட்டிருக்கும் வலை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

இதுகுறித்துப் பேசும் அவர்கள், “தமிழகத்தில், படு ‘வீக்’காக இருந்துவரும் பி.ஜே.பி-க்கு வருகிற நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வசதியான குதிரை தேவை. உடைந்துபோன அ.தி.மு.க அணிகளை நம்பிக் களமிறங்குவதில், அவர்களுக்கே நம்பிக்கை இல்லை. ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற அரசியல் புதுமுகங்களை மட்டுமே நம்பித் தேர்தலில் குதிப்பதும் அவர்களுக்கு விஷப் பரீட்சையாகவே முடியும். அதேசமயம், பலம் மிக்க மாநிலக் கட்சியான தி.மு.க-வுடன், பி.ஜே.பி கைகோப்பதும் முடியாத காரியம். ஏனெனில், கொள்கை ரீதியாக எதிர் வரிசையில் நிற்கும் தி.மு.க., பி.ஜே.பி-யை வீழ்த்துவதையே நோக்கமாகக்கொண்டு, மதச்சார்பற்றக் கூட்டணியை உருவாக்கி வருகிறது. எனவே, பி.ஜே.பி கூட்டணியில் தி.மு.க-வைக் கொண்டுவருவது சாத்தியமற்ற ஒன்று. இதையெல்லாம் மோடி தரப்பு நன்றாக உணர்ந்திருக்கிறது. ஆனால், எதிர்க் கட்சிகளைக் குழப்பி, கூட்டணிக்குள் சலசலப்பை உண்டு பண்ணும் தந்திரமாகவே, மோடி இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். தவிர, அரசியலில் சூழல்கள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். வரும் நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் பி.ஜே.பி-க்கு சாதகமாக வந்தாலும்கூட இந்தமுறை வெற்றிபெற்றதுபோல அறுதிப் பெரும்பான்மை பெற முடியாது. இழுபறி ஏற்படலாம் என்றுதான் இதுவரை வந்த கணிப்புகள் சொல்கின்றன. அப்போது தி.மு.க-வின் ஆதரவைக் கேட்க வேண்டிய நிலையும் பி.ஜே.பி-க்கு ஏற்படலாம். எனவே, தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்கு அச்சாரமாகக்கூட, இப்போதே ஸ்டாலினுக்கு மோடி வலை விரிக்கிறார். இதெல்லாம் அவருக்குக் கைவந்த கலைதானே” என்றார்கள் விவரமாக.

தி.மு.க முன்னாள் செய்தித் தொடர்பாளரும் எம்.பி-யுமான டி.கே.எஸ். இளங்கோவன், “தமிழக நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டுவரும் மத்திய பி.ஜே.பி அரசை அகற்றும் முயற்சியில் தி.மு.க முழுமூச்சுடன் செயல்பட்டு வருகிறது. ‘எங்களுடன் கூட்டணியில் சேருங்கள்’ என்று எல்லாக் கட்சிகளையும் அழைப்பது மோடியின் பெருந்தன்மையாக இருக்கலாம். ஆனால், சித்தாந்த ரீதியாக நேரெதிர் கட்சியாக இருந்துவரும் பி.ஜே.பி-யுடன் தி.மு.க கூட்டணி சேருவது சாத்தியம் இல்லாத ஒன்று. நாங்கள் ஏற்கெனவே முன்மொழிந்ததுபோல், ‘ராகுல்காந்திதான் அடுத்த பிரதமர்’ என்பதில் உறுதியாக இருக்கிறோம்’’ என்றார் விளக்கமாக.

தமிழக பி.ஜே.பி-யின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், “கூட்டணியாகத் தேர்தலில் போட்டி யிடுவது மட்டுமல்ல... கூட்டணியாக அரசாள்வதும் மிகவும் முக்கியம். மாநில உரிமைகள், விருப்பங்கள், எதிர்பார்ப்புகளை மதிக்கின்ற கட்சியாக 1998-லேயே பி.ஜே.பி கூட்டணி இருந்துள்ளது. மாநில உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் அதே ஆட்சி இப்போதும் தொடர்கிறது. அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சு அவரது பரந்த நோக்கத்தையே வெளிப்படுத்தியுள்ளது. மற்றபடி, தி.மு.க-வை எப்படி பி.ஜே.பி கூட்டணிக்கு அழைக்க முடியும்? அவர்கள்தான் ஏற்கெனவே அதிகாரபூர்வமாக காங்கிரஸ் கூட்டணிக்குப் போய் விட்டார்களே” என்றார்.

இதற்கிடையே தமிழகத் துக்கு நன்மை செய்யும் கட்சியுடனே கூட்டணி என்று அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. பி.ஜே.பி-யுடன் கூட்டணி கிடையாது என்று ஸ்டாலினும் மீண்டும் உறுதியாகச் சொல்லிவிட்டார்.

- த.கதிரவன்