Published:Updated:

'கொடநாடு' மரணங்கள்: 7 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 10 தெறிப்புகள்!

'கொடநாடு' மரணங்கள்: 7 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 10 தெறிப்புகள்!
'கொடநாடு' மரணங்கள்: 7 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 10 தெறிப்புகள்!

இந்த இதழ் ஜூனியர் விகடன்: https://bit.ly/2sDEN3K

'கொடநாடு' மரணங்கள்: 7 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 10 தெறிப்புகள்!

''தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படி ஒரு வில்லங்கம் உருவாகும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நினைத்தே பார்த்திருக்கமாட்டார். பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், கொடநாடு விவகாரம் தொடர்பாக ஆவணப்படம் வெளியிட்டதும், அவர் மீது தமிழகக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மறுநாளே டெல்லிக்குப் படையெடுத்த போலீஸார், இந்த விவகாரத்தில் ஏற்கெனவே கைதாகி ஜாமீனில் இருக்கும் ஷயான், மனோஜ் இருவரையும் கைது செய்து சென்னைக்கு அழைத்துவந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, கஸ்டடி எடுத்து விசாரிக்கலாம் என்பதுதான் திட்டம். ஆனால், அவர்கள் இருவரையும் ரிமாண்டு செய்ய மறுத்த நீதிமன்றம், அடுத்தநாள் ஜாமீனில் விடுதலையும் செய்துவிட்டது. இது, எடப்பாடி தரப்புக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!''

'கொடநாடு' மரணங்கள்: 7 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 10 தெறிப்புகள்!

...இதே கொடநாடு விவகாரத்தை வைத்துத் தேர்தல் கூட்டணிக் கணக்குகளை முடித்துக்கொள்ளும் வகையில் எடப்பாடி தரப்புக்கு செக் வைக்கவும் திட்டமிட்டிருக்கிறதாம் பி.ஜே.பி. கொடநாடு விவகாரம் வெளியான பிறகுதான், பி.ஜே.பி - அ.தி.மு.க கூட்டணிப் பேச்சுவார்த்தை வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. அ.தி.மு.க தரப்பில் மறைமுகமாகத் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்துள்ளனர். 'கொடநாடு விவகாரத்தில் தி.மு.க-வின் வாயை அடைக்க வேண்டும். மறுபுறம் எந்தச் சிக்கலும் வந்துவிடாமல் மத்திய அரசு தங்களைக் காப்பாற்ற வேண்டும்' என்கிற நெருக்கடியான நிலையில் எடப்பாடி தரப்பு இருக்கிறது என்கிறார்கள்..."

- விஸ்வரூபம் எடுக்கும் கொடநாடு விவகாரம் குறித்து  'கொடநாடு மரணங்கள் - கூட்டணிக்கு பி.ஜெ.பி செக்' எனும் தலைப்பில் பிரித்து மேய்ந்திருக்கிறார் மிஸ்டர் கழுகு.

'கொடநாடு' மரணங்கள்: 7 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 10 தெறிப்புகள்!

"தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் இந்த மரணங்களுக்குக் காரணம் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?"

"நிச்சயமாக தமிழக முதல்வர் பழனிசாமிதான் காரணம். அவர் ஒரு கொலைகாரர். இதை எங்கு வேண்டுமானலும் சொல்வேன். எப்போதும் சொல்வேன். கொடநாட்டில் உள்ள முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றவே கொள்ளை நாடகம் நடத்தப்பட்டிருக்கிறது. ஆவணங்கள் அவர் கைக்கு வந்ததும், இதில் தொடர்புடையவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி. அரசியலில் இப்போது பழனிசாமி தனித்துவிடப்பட்டிருக்கிறார். ஆனாலும், அவருக்கு ஆதரவாகவே தமிழகத்தில் நிறைய விஷயங்கள் நடக்கின்றன. அரசியலுக்கு வரவிரும்பும் ரஜினிகூட இத்தனை கொலைகளைப் பற்றி வாய்பேசாமல் இருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது. இதுகுறித்து எல்லோரும் பேச வேண்டும். அப்போதுதான் மறைந்துகிடக்கும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்."

- கொடநாடு விவகாரம் கொளுந்துவிட்டு எரிகிறது. இந்த விவகாரத்தை இப்போது  பற்றவைத்திருக்கும் 'தெஹல்கா'வின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், 'தமிழக முதல்வர் எடப்பாடிதான் இந்தக் கொலைகளுக்குப் பின்னணியில் இருக்கிறார்' என்கிற தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். ஷயான், மனோஜ் இருவர் கைதுசெய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் மேத்யூ சாமுவேல், தமிழக போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். இந்தச் சூழலில், "பதவிக்காக எதையும் செய்வார் பழனிசாமி" என்ற தலைப்பில் மேத்யூ சாமுவேலின் பரபரப்பு பேட்டியை வெளியிட்டுள்ளது ஜூ.வி. தவறவிடாதீர்கள்.

'கொடநாடு' மரணங்கள்: 7 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 10 தெறிப்புகள்!

"2017 ஏப்ரல் 28-ம் தேதி, சேலம் - ஆத்தூர் நெடுஞ்சாலையில் தென்னங்குடிபாளையம் மலர் மெட்ரிக் பள்ளி அருகே இரவு 8.30 மணி அளவில் சாலை விபத்தில் என் தம்பி மரணமடைந்ததாகத் தகவல் கொடுத்தனர். அப்போது கோவையில் இருந்த நான், ஐந்து மணி நேரத்துக்குள் விபத்து நடந்த இடத்துக்குச் சென்றுவிட்டேன். விபத்து நடந்ததற்கான எந்த அறிகுறியும் அங்கு இல்லை. தம்பியின் பைக்கும், விபத்து ஏற்படுத்திய காரும் அங்கு இல்லை. ஆத்தூர் காவல் நிலையத்துக்குக் கொண்டுபோய்விட்டார்கள். விபத்து நடந்த மூன்றாவது நாளில் ஆத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு இடமாற்றம் செய்யப்பட்டார். எடப்பாடியில் அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த சுரேஷ்குமார் தினமும் நான்கைந்து மணி நேரம் என் தம்பியிடம் போனில் பேசியிருக்கிறார். பழனிசாமிக்கு வேண்டப்பட்டவர்கள் மட்டுமே எடப்பாடியில் இன்ஸ்பெக்டராக இருக்க முடியும். அப்படியிருக்கும்போது, என் தம்பிக்கும் எடப்பாடி இன்ஸ்பெக்டருக்கும் என்ன தொடர்பு..?"

- ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் கார் ஓட்டுனராக இருந்த கனகராஜின் மரணம் பூதாகரமாகியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் எடப்பாடி தொகுதியில் விவசாயம் செய்து வருகிறார் கனகராஜின் அண்ணன் தனபால். அவரது பேட்டி 'சி.பி.ஐ விசாரித்தால் பழனிசாமி சிக்குவார்! - குமுறும் கனகராஜின் அண்ணன்' எனும் தலைப்பில் வெளியாகியுள்ளது. அவர் சொல்லும் தகவல்கள் பகீர் ரகம்.

'கொடநாடு' மரணங்கள்: 7 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 10 தெறிப்புகள்!

இந்த இதழ் ஜூனியர் விகடன்: https://bit.ly/2sDEN3K

அவள் பெயர் நீத்து. மழலை மாறாத குழந்தை. தாய், தந்தை, தாத்தா, பாட்டி என்று உறவுகள் சூழக் கழிந்தன அவளது நாள்கள். நீத்துவின் தாய்  வினுப்பிரியா. கணவர் ஷயான்தான் வினுவுக்கு எல்லாம். இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். கொடநாடு விவகாரம் தொடர்புடை யதாகக் கூறப்படும் விபத்து, ஒரு பாவமும் அறியாத வினுப்பிரியா மற்றும் குழந்தை நீத்துவின் உயிர்களைப் பறித்துவிட்டது. இவர்களின் மரணங்களிலும் மர்மங்கள் விலகவில்லை. கோவை மதுக்கரை மார்க்கெட் அருகே இருக்கிறது வினுப்பிரியாவின் பெற்றோர் வீடு. அவர்களிடம் பேசியபோது, "கொடநாடு எஸ்டேட் சி.சி.டி.வி கேமராவில், ஷயான் கார் ஓட்டுவது பதிவாகியிருப்பதாகக் கூறி விசாரணை நடத்தினர். அப்போதுதான், எங்களுக்கு அந்த விபரீதமே தெரிந்தது. இவ்வளவு பெரிய பிரச்னையில் சிக்கியுள்ளார். மகள், குழந்தையை வேறு கூட்டிச் சென்றுள்ளாரே என்று நினைத்து இரவெல்லாம் நாங்கள் தூங்கவே இல்லை. எது நடக்கக் கூடாது என்று நினைத்தோமோ மறுநாள் காலை, அது நடந்துவிட்டது" என்றனர்.

- எந்தக் குற்றமும் செய்யாத வினுப்பிரியா மற்றும் நீத்துவின் மரணங்களுக்குப் பதில் சொல்வது யார்? என்று கேள்வி எழுப்புகிறது 'என் மகளும் பேத்தியும் செய்த பாவம் என்ன?' எனும் தலைப்பிலான செய்திக் கட்டுரை. 

'கொடநாடு' மரணங்கள்: 7 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 10 தெறிப்புகள்!

கொடநாடு தொடர்பான மர்ம மரணங்களில் ஒன்று அங்கு கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றிய தினேஷின் தற்கொலை. கொடநாடு கொலை சம்பவத்துக்குப் பின்னர், மூன்று மாதங்கள் கழித்து அவர் தற்கொலை செய்துகொண்டார். அவரது தற்கொலைக்கான மர்மங்களுக்கும் இதுவரை விடை கிடைக்கவில்லை. 'மரணமடைவதற்கு முன்பு மொபைல் போனில் நீண்ட நேரம் ஒருவருடன் தினேஷ் பேசிக்கொண்டிருந்தார். அந்த நபர் கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் தினேஷ் தற்கொலை செய்துகொண்டார்' என்றும் சொல்கிறார்கள். இந்த நிலையில்தான், கோத்தகிரி அருகே உள்ள கெங்கரைதான் கிராமத்தில் இருக்கும் தினேஷின் குடும்பத்தினரைச் சந்தித்தபோது, மிகுந்த தயக்கத்துடன் நம்மிடம் பேசினார் தினேஷின் தந்தை போஜன். 

"தினேஷ், எஸ்டேட்டில் ஏழாண்டுகள் வேலை பார்த்தான். காலை 7 மணிக்குச் சென்றால், இரவு 8 மணிக்குதான் வீட்டுக்கு வருவான். அவனுக்குக் கண் பார்வையில் லேசாகக் கோளாறு இருந்தது. அதற்கான சிகிச்சைக்காக கோவைக்குச் சென்றிருந்தபோதுதான் எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடந்தன. நாங்கள் பயந்துபோய் அவனிடம் மொபைலில் பேசினோம். 'உனக்கும் ஏதாவது பிரச்னை இருக்காப்பா?' என்று கேட்டோம். அதற்கு அவன், 'எனக்கும், அதற்கும் சம்பந்தம் இல்லை' என்றான். அதன் பிறகு எப்போதும்போலதான் இருந்தான். மூன்று மாதங்களுக்குப்பின் திடீரென்று தற்கொலை செய்துகொண்டான். குடும்பப் பிரச்னையோ, தனிப்பட்ட பிரச்னைகளோ எதுவும் அவனுக்கு இல்லை. அவன் எதற்காகத் தற்கொலை செய்துகொண்டான் என்று தெரியாமல் ஒவ்வொரு நாளும் நாங்கள் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறோம்" என்று உடைந்துபோன குரலில் பேசினார்.

- 'தினேஷ் தற்கொலை ஏன்? - காரணம் தெரியாமல் கண்ணீர் விடும் குடும்பம்!' எனும் செய்திக் கட்டுரை சொல்லும் தகவல்களும் கவனத்துக்குரியவை.

'கொடநாடு' மரணங்கள்: 7 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 10 தெறிப்புகள்!

விலங்குகளையும் மனிதர்களையும் மருந்து ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்தக்கூடாது என்று உலகெங்கும் குரல் எழுந்துவருகின்றன. இதற்கான மாற்று வழிகள் குறித்தும் ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இப்படியான சூழலில்தான், கோவையில் இருக்கும் ஒரு மருந்து நிறுவனம், அப்பாவி மனிதர்களைச் சோதனை எலிகளாகப் பயன்படுத்துவதாக பகீர் புகார் எழுந்துள்ளது

கோவை மேட்டுப்பாளையும் சாலையில் இருக்கிறது ஸ்பினோஸ் மருந்து ஆராய்ச்சி நிறுவனம். இந்த நிறுவனம் விளிம்பு நிலை மக்களைக் குறிவைத்து மருத்துவப் பரிசோதனையைச் செய்கிறது; இதற்காக மிகப் பெரிய நெட்வொர்க்கே இயங்குகிறது என்று நமக்குத் தகவல் கிடைத்தது. இதுபோன்ற ஆராய்ச்சிகளுக்குச் சென்றவர்கள் மாரடைப்பு, புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கி றார்கள் என்கிற தகவல்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

இப்படியான பாதிப்புக்கு உள்ளானவர்களில் ஒருவர்தான் கிருஷ்ணமூர்த்தி. அவரிடம் பேசினோம். "ஆரம்பத்தில் தயக்கமாக இருந்தாலும் பணத் தேவை காரணமாக வேறு வழியில்லாமல் 2017-ம் ஆண்டு இறுதியில் அங்கு சென்றேன். அடுத்தடுத்து மாத இடைவெளியில் சோதனைகள் செய்தனர். கடந்த ஜூலை மாதம் எனக்குக் கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது. அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்றபோது, 'ஹார்ட் அட்டாக்' என்றவர்கள், 'தாமதித்து வந்திருந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும்' என்றார்கள். அப்போதுதான் எனக்கு விபரீதம் உறைத்தது..."

- ஜீ.வி ஸ்பெஷல் ஸ்டோரியான 'சோதனை எலிகளா மனிதர்கள்? - பகீர் பரிசோதனைகள்... ஒரு திகில் ரிப்போர்ட்' பதறவைக்கிறது. 

'கொடநாடு' மரணங்கள்: 7 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 10 தெறிப்புகள்!

இந்த இதழ் ஜூனியர் விகடன்: https://bit.ly/2sDEN3K

'மக்கள் நமக்கு ஓட்டுப் போடுவார்களா...' என்ற பீதியில் இரண்டரை வருடங்களாக உள்ளாட்சித் தேர்தலை அ.தி.மு.க அரசு நடத்தாமல் இருப்பதால், ஆட்சியாளர்களுக்கு இழப்பு எதுவுமில்லை. ஆனால், ஜனநாயகத்தின் உயிர்நாடியான உள்ளாட்சி அமைப்புகள் இழந்ததோ, ரூ.3,000 கோடிக்கும் அதிகம் என்பதுதான் மிகப்பெரிய அவலம்...

"...உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரிகள் மட்டத்தில் ஊழல் அதிகரித்திருக்கிறது. கிராம சபைக் கூட்டங்களைப் பெயருக்கு நடத்துகிறார்கள். பஞ்சாயத்துக்குள் ஒரு நிறுவனம் அமைய வேண்டுமென்றால், அதற்கான உரிமத்தைப் பஞ்சாயத்திடம் பெற்று, ஒவ்வோர் ஆண்டும் புதுப்பிக்க வேண்டும். இன்று, எந்த நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது, ஏன் நமது கிராமத்துக்குள் அவர்கள் வருகிறார்கள் என்று தெரியாத நிலைதான் உள்ளது. எல்லாவற்றையும் பி.டி.ஓ அலுவலகத்திலேயே பேசி முடித்துவிடுகிறார்கள். இது ஒரு ஜனநாயகப் படுகொலை.."

- 'ஆட்சியாளர்களின் சுயநலத்துக்கு பலிகடாவாகும் உள்ளாட்சி!' குறித்த பின்னணியையும் விளைவுகளையும் அழுத்தமாகப் பதிவு செய்வதுடன் 'தமிழகம் இழந்த ரூ.3,000 கோடி' பற்றியும் விரிவாகச் சொல்லியிருக்கிறது சிறப்புச் செய்திக் கட்டுரை. 

'கொடநாடு' மரணங்கள்: 7 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 10 தெறிப்புகள்!

தமிழக சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி-யான ராஜேந்திரனின் பதவிக்காலம் சில மாதங்களில் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில், அடுத்ததாக அந்தப் பதவிக்கு வரப்போவது யார் என்பது பற்றி தமிழக போலீஸ் துறையில் பரபரப்பாகப் விவாதிக்கப்படுகிறது. அந்தப் பதவியைக் குறிவைத்து, போலீஸ் உயர் அதிகாரிகள் மத்தியில் இப்போதே ரேஸ் தொடங்கிவிட்டது. 

டி.ஜி.பி-யான ராஜேந்திரனின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு, வரும் பிப்ரவரியில் வெளியிடப்படலாம். அப்போது தேர்தல் கமிஷன் 'டி.ஜி.பி - தேர்தல் பணி' என்கிற பெயரில் வேறு யாரையாவது நியமிக்கும். மே மாதம் இறுதியில் தேர்தல் முடிவுகள் வரும் வரையில் இந்தப் பதவியில் இருப்பவர்தான் சகல அதிகாரமும் படைத்தவராக இருப்பார்.

- 'போலீஸ் ரேஸ்! - அடுத்த தமிழக டி.ஜி.பி யார்?' எனும் செய்திக் கட்டுரை, தற்போதைய சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

'கொடநாடு' மரணங்கள்: 7 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 10 தெறிப்புகள்!

"வன கிராமங்களில் பள்ளிகளைச் சீரமைத்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு போன்ற சில வேலைகளை இன்ஸ்பெக்டர் சாம்சன் செய்துவருகிறார். அதற்காக, சில குழுக்களைத் தன்னுடன் வைத்திருக்கிறார். அதெல்லாம் சரி. ஆனால், அவருடன் செல்வோரும் காப்புக்காடுகளில் அத்துமீறுவதுடன், அங்கெல்லாம் புகைப்படங்கள் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவும் செய்கிறார்கள். இதைப் பார்க்கும் மக்களும் கூட்டம் கூட்டமாக வனப்பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைகின்றனர். சாம்சன் குழுவினர் பேச்சிப்பாறை அணை நீர்பிடிப்புப் பகுதிகளில் உள்ள தீவுகளுக்குப் படகுகளில் சென்று, அங்கு தீயை மூட்டிச் சமையல் செய்கிறார்கள். அங்கு இரவில் தங்கி 'கேம்ப் ஃபயர்' உருவாக்கி, குத்தாட்டம் போடுகிறார்கள். சாம்சனின் பெயரைக் கூறிக்கொண்டு, மலைக் கிராமங்களுக்குப் பெண்களுடன் சிலர் செல்கிறார்கள். இயற்கை ஆர்வலர்கள் என்ற போர்வையில், வனச்சட்ட விதிகளை மீறுவோருக்கு அவர் துணைபோவது தவறு.." 

- வனத்துறைக்கும், காவல்துறைக்கும் ஏற்பட்டிருக்கும் மோதலால் தகித்துக்கிடக்கிறது, மேற்குத் தொடர்ச்சி மலை. கன்னியாகுமரி மாவட்டத்தில் வனத்துறையினர் மீது காவல்துறை வழக்குப் பதிவுசெய்ய, பதிலுக்கு தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி காவல்துறையினர் மீது வனத்துறை வழக்குப் பதிவு செய்ய... இரு தரப்பினருக்குமான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. இதன் பின்னணியை முழுவதுமாக வெளியிட்டிருக்கிறது 'அத்துமீறினாரா போலீஸ் இன்ஸ்பெக்டர்? - வனத்துறை - காவல்துறை மோதல்' எனும் செய்திக் கட்டுரை.

'கொடநாடு' மரணங்கள்: 7 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 10 தெறிப்புகள்!

''சென்னை ஈஞ்சம்பாக்கத்தில், நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்குவோருக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கான அரசு அவசரச் சிகிச்சை மையம் இயங்கிவருகிறது. அங்கு இறப்புகள் அதிகம் நேரிடுவதாக எங்களுக்குத் தகவல் வந்தது. எனவே, அது குறித்து விசாரித்தோம். சென்னையில் இயங்கி வரும் 'GVK EMRI' என்ற நிறுவனம், ஒப்பந்தம் அடிப்படையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமனம் செய்துவருகிறது. அவர்கள்தான் ரேச்சல் ஜெனிபர் என்பவரை அந்த மருத்துவமனையில் வேலைக்குச் சேர்த்துள்ளனர். அவர் செவிலியர் பணிக்கான தகுதி மட்டுமே கொண்டவர். ஆனால், தான் ஒரு மருத்துவர் என்று சொல்லி வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். அதை நாங்கள் ஆதாரங்களுடன் கண்டுபிடித்தோம். அவர் மீது நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தவுடன், 'GVK EMRI' நிறுவனத்தினர் என்னைத் தொடர்புகொண்டு சமாதானம் செய்ய முயன்றனர். ஜெனிபர் தற்போது தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்"

- அலோபதி தொடங்கி அக்குபஞ்சர் மருத்துவம் வரைக்கும் போலி டாக்டர்கள் சர்ச்சைகளே தீராத நிலையில், 'நெடுஞ்சாலை விபத்துக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட தமிழக அரசின் உயிர் காக்கும் அவசர சிகிச்சை மையத்தில் போலி மருத்துவர் பணியாற்றிவருகிறார்' என்று பகீர் தகவலை வெளியிட்டிருக்கிறது சட்டப் பஞ்சாயத்து இயக்கம். இதுகுறித்த 'அரசு அவசர சிகிச்சைப் பிரிவில் போலி டாக்டர்! - பின்னணியில் முன்னாள் அமைச்சரின் மகன்?' எனும் செய்திக் கட்டுரை அதிரவைக்கிறது. 

இந்த ஜூனியர் விகடன் இதழை வாங்க... இந்த லிங்கைக் க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2R1BT2D