
கோவை: பெங்களூரில் பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் அருகே கடந்த 17 ஆம் தேதி நடந்த வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் கோவையை சேர்ந்த மேலும் ஒருவர் கேரளாவில் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பாரதிய ஜனதா அலுவலகத்திற்கு அருகில் கடந்த 17 ஆம் தேதி சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 16 பேர் காயமடைந்ததனர். இத்தாக்குதல் குறித்து தமிழக போலீசாரின் உதவியுடன் கர்நாடக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வெடிகுண்டு தாக்குதல் தமிழகத்தில் திட்டமிடப்பட்டது என்றும், குண்டுவெடிப்பை நிகழ்த்துவதற்கான உபகரணங்கள் தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும் போலீசார் கண்டுபிடித்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் இந்த வழக்கில் கோவையை சேர்ந்த சுலைமான் என்பவரை பெங்களூரூ போலீசார் கைது செய்தனர்.
##~~## |
