Published:Updated:

பூவாக பூத்து குலுங்கும் போத்தீஸ்!

பூவாக பூத்து குலுங்கும் போத்தீஸ்!
பூவாக பூத்து குலுங்கும் போத்தீஸ்!

பொதுவாக ஜவளி கடைகளில் நாம் விரும்பிய ஆடைகளை வாங்கி வந்தால் ஒரு குறிப்பிட்ட சதவீதம் தள்ளுபடி தருவார்கள் அல்லது இலவசமாக ஒப்புக்கு ஏதோ ஒரு பொருளை கொடுப்பார்கள். ஆனால் போத்தீஸில் ஆடை வாங்குபவர்களுக்கு இலவசமாக செடிகளை கொடுக்கிறார்கள். 2010 ஆம் ஆண்டு முதல் "போத்தீஸ் பசுமை கொண்டாட்டம்" என்ற தீமில் நான்கு ஆண்டுகளாக இதனை கொடுத்து வருகிறார்கள். 

பூவாக பூத்து குலுங்கும் போத்தீஸ்!


 
2010 ஆம் ஆண்டு  பூச்செடிகளை வாங்கிப்போன வடபழனியை சேர்ந்த பானுபிரியா பேசும்போது, "நாங்க  முதல்ல வீட்டில் உள்ள எங்க எல்லோருக்கும் துணி வாங்கலாம்னு போத்தீஸ் போனோம். ஆடை வாங்கிட்டு வெளியே வரும் பொழுது கிஃப்ட்டாக பூச்செடிகளை கொடுத்தாங்க. எங்க வீட்டில் ரொம்ப நாட்களாக எல்லோருக்குமே பூச்செடி வளர்க்க ஆசை.

போத்தீஸ் பூச்செடிகள் கொடுத்ததால் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். வந்த உடனே வீட்டில் நட்டு வைத்தோம். ரெண்டு மாசத்துலயே ரோஜா பூ பூக்க தொடங்கியது. அதுவும் ஹைப்ரிடு வெரைட்டி என்பதால் ஜோராக பூ பூத்தது. அடுத்து எங்க அக்கா கல்யாணம் வந்தது. அப்பொழுதும் போத்தீஸில்தான் ஆடைகள் வாங்கினோம்.  அப்பொழுது 3 வகையான பூச்செடிகள் 10 கொடுத்தாங்க. எல்லாத்தையும் கொண்டு வந்து நட்டு வைத்தோம். இப்ப 3 வருடமாக என் வீட்டில் பூக்கும் ரோஜா பூவைத்தான் நான் தலைக்குச்சூடி இருக்கிறேன்" என அழகாக சொல்லி போட்டோவிற்கு போஸ் கொடுக்கிறார்.

பூவாக பூத்து குலுங்கும் போத்தீஸ்!
பூவாக பூத்து குலுங்கும் போத்தீஸ்!


 
டி.நகர் அபிதா "என்னடா இது புதுசா ஆடைகள் வாங்கினா மரக்கன்றுகளை கொடுக்கறாங்களேன்னு ஆச்சரியமாக இருந்துச்சு. வாங்கி வந்து நட்டு வைச்சோம். மரக்கன்றுகள் தரும் பொழுது அவுங்க கொடுக்கும் ஸ்லிப்லயே நடவு செய்யும் முறை எல்லாமே இருந்தது. அதனால் எங்களுக்கு ரொம்ப ஈஸியாகிடுச்சு. கன்றுகளை நடுவதற்கு முன் தேவைக்கு ஏற்ப குழிகளை வெட்டிக் கொண்டோம். கன்றுகளை நடும் சமயம், மையப்பகுதியில் வேருடன் ஒட்டியுள்ள மண் உதிராமல் பையின் அடிபாகத்தில் கிழித்து ஊன்றி விட்டோம். பிறகு ஒரு குச்சியை எடுத்து கன்றுக்கு பக்கத்தில் வைத்துவிட்டோம். அப்பொழுது நட்டு வைத்த மா, மாதுளை மரக்கன்றுகள் இப்ப பழங்கள் கொடுக்கவே ஆரம்பிச்சுடுச்சு. இன்னும் பல காலம் எங்கள் வீட்டில் போத்தீஸால்  இயற்கை வாசம் வீசும் என்பதில் எந்த ஐயமும் இல்லை" என குதுகலமாக சிரிக்கிறார். 

பூவாக பூத்து குலுங்கும் போத்தீஸ்!


 
போத்தீஸின் எம்.டி எஸ்.ரமேஷ் "போத்தீஸ் என்றாலே பச்சை நிறம் பசுமை என்பது அனைவருக்கும்

பூவாக பூத்து குலுங்கும் போத்தீஸ்!

நினைவுக்கு வரும். ஏதாவது புதுமையாக வித்தியாசமாக செய்ய வேண்டும். ஆனால் அது வாடிக்கையாளர்களுக்கும் பயன் உள்ள வகையில் அமைய வேண்டும் என சிந்தித்த பொழுது தான் இந்த ஐடியா தோன்றி 'போத்தீஸ் பசுமை கொண்டாட்டம்' தொடங்கப்பட்டது.

இப்பொழுது இந்த திட்டம் நான்காம் ஆண்டை எட்டி இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மே முதல் வாரத்தில் தொடங்கப்பட்டு ரெண்டு மாதங்கள் மரக்கன்றுகளை தருகிறோம். முதலாம் ஆண்டில் தொடங்கும் பொழுது 6 லட்சம் மரக்கன்றுகளுடன் தொடங்கினோம், இப்பொழுது இந்த ஆண்டு 12 லட்சம் மரக்கன்றுகளை தர திட்டமிட்டு இருக்கிறோம். இந்த ஆண்டு பழ மரங்கன்றுகளான மா, சப்போட்டா, பெருநெல்லி, கொய்யா, தென்னை, எலுமிச்சை, பலா, வாழை தந்து கொண்டு இருக்கிறோம்.

அதே போல மலர் செடிகள் ரோஜா, மல்லிகை, செம்பருத்தி, நந்தியாவட்டை, செண்பகம், பாரிஜாதம், பவல மல்லி, விருட்சி பூ தந்து கொண்டு இருக்கிறோம். இது நம் சுற்றி இருக்கும் இடங்கள் முழுக்க பசுமையாக இருக்க வேண்டும். ஆடை வாங்கி போகிறவர்கள் வெறும் கையோடு போக கூடாது. வடிக்கையாளர்களுக்கு ஏதாவது தர வேண்டும், ஆனால் அவர்களுக்கு காலம் கடந்தும் உபயோகமாக இருக்க வேண்டும். மரக்கன்றுகளை நாங்கள் கொடுக்கும் பொழுதே எத்தனை அடி குழி தோண்டி நட வேண்டும், எப்படி பராமரிக்க வேண்டும், எந்த பூச்சி மருந்தை அடிக்க வேண்டும். போன்ற தகவல்களை தருகிறோம்.

இது தவிர தோட்டக்கலை ஆலோசனை தரும் எண்களையும் உடன் கொடுக்கிறோம். வாடிக்கையாளர்களுக்கு எளிமையாக இருக்க வேண்டும் என்பதால் தான் இந்தனையும் செய்து கொடுக்கிறோம். இப்பொழுது நான்கு ஆண்டுக்கு முன்பு நாங்கள் கொடுத்த மரக்கன்றுகளை வாங்கிப் போனவர்கள் வீட்டில் இன்று மரங்களாக மாறி இருப்பதை கேட்கும் பொழுதே சந்தேஷமாக இருக்கிறது" என்கிறார்.
 
படங்கள் : செ.நாகராஜன்.