Published:Updated:

எதிர்கட்சி தலைவர் ஆகிறார் குமாரசாமி

எதிர்கட்சி தலைவர் ஆகிறார் குமாரசாமி
எதிர்கட்சி தலைவர் ஆகிறார் குமாரசாமி
எதிர்கட்சி தலைவர் ஆகிறார் குமாரசாமி

பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 40 இடங்களை கைப்பற்றிய மதசார்பற்ற ஜனதா தளத்தின் கர்நாடக மாநில தலைவரும், முன்னாள் முதல்வருமான எச்.டி.குமாரசாமி கர்நாடக சட்டமன்றத்தின் எதிர் கட்சி தலைவராக பொறுப்பேற்கிறார்.

நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் 121 இடங்களை பெற்று காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இரண்டாவதாக பாரதிய ஜனதாவும், மத சார்பற்ற ஜனதா தளமும் தலா 40 இடங்களை பெற்று சம பலத்தில் இருக்கின்றன.

இதனால் யார் எதிர்கட்சி தலைவர் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. இந்திய அரசியலமைப்பு சட்ட விதிப்படி மக்களிடம் யார் அதிக வாக்குகளை பெறுகிறார்களோ அவர்களையே எதிர்கட்சி தலைவராக சபாநாயகர் அறிவிப்பார்.

அதன்படி பி.ஜே.பி.யை விட 1 லட்சத்து 33 ஆயிரத்து 770  வாக்குகள் அதிகம் பெற்று இருக்கிற மத சார்பற்ற ஜனதா தளம் எதிர்கட்சி அந்தஸ்து பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் குமாரசாமி எதிர்கட்சி தலைவர் ஆவார் என கர்நாடக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

##~~##
மத சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து குமாரசாமியுடன் 7 ஆண்டுகளுக்கு முன்னர் சண்டைப் போட்டு பிரிந்து போன சித்தராமையா தற்போது முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நேரத்தில் குமாரசாமி எதிர்கட்சி தலைவராகப் போவதால் .சட்டமன்றத்தில் நிச்சயம் காரசாரமாக தான் இருக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
-இரா.வினோத்