Published:Updated:

ராமதாஸுக்கு 144 தடை உத்தரவு போட்ட அரியலூர் கலெக்டர்

ராமதாஸுக்கு 144 தடை உத்தரவு போட்ட அரியலூர் கலெக்டர்
ராமதாஸுக்கு 144 தடை உத்தரவு போட்ட அரியலூர் கலெக்டர்
ராமதாஸுக்கு 144 தடை உத்தரவு போட்ட அரியலூர் கலெக்டர்

அரியலூர்: பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளிலும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து திருச்சி மத்திய சிறையில் இருந்து இன்று காலை விடுதலை ஆனார்.

சிறையில் இருந்து வெளியே வந்த ராமதாஸ், மரக்காணம் கலவரத்தில் பலியான அரியலூர் பா.ம.க. தொண்டர் செல்வராஜின் சொந்த ஊரான வெண்மான் கொண்டான் கிராமத்திற்கு சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூற முடிவெடுத்தார். இதற்காக அவர் அரியலூர் புறப்பட தயாரானார்.

ராமதாஸ் அரியலூருக்குள் நுழைந்தால் மாவட்டத்தில் பதட்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என்பதால், அரியலூர் மாவட்ட கலெக்டர் ரவிக்குமார், ராமதாஸ் அரியலூருக்குள் நுழைய மாவட்டத்தில் 144 தடை உத்தரவினை பிறப்பித்தார். இதனை அறிந்த டாக்டர் ராமதாஸ் அரியலூர் செல்லாமல் தைலாபுரம் புறப்பட்டு சென்றார்.

##~~##
ஏற்கனவே ஒவ்வொரு நாளும் கடையடைப்பு, வீடுகளில் கருப்பு கொடி கட்டுதல், பேருந்துகள் மீது கல்வீச்சு என அடுத்தடுத்த போராட்டங்களை அரியலூர் பா.ம.க.வினர் அரங்கேற்றி வரும் நிலையில், காடு வெட்டி குரு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது, தற்போது ராமதாஸ் அரியலூருக்குள் நுழைய தடை என்பதால் மாவட்டம் எங்கும் பதற்றமாகவே உள்ளது.
சி.ஆனந்தகுமார்