Published:Updated:

`அறிக்கையால் தெளிவுபடுத்திவிட்டார் அஜித்!'- திருமுருகன் காந்தி

`அறிக்கையால் தெளிவுபடுத்திவிட்டார் அஜித்!'- திருமுருகன் காந்தி
`அறிக்கையால் தெளிவுபடுத்திவிட்டார் அஜித்!'- திருமுருகன் காந்தி

``கஜா புயல் பாதிப்பை பார்வையிடாத மோடி தற்போது தேர்தல் பிரசாரம் செய்வதற்காக மதுரை வருகிறார்'' என மே 17 இயக்கத்தின் ஒருங்ணைப்பாளர் திருமுருகன் காந்தி சாடியுள்ளார்.

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள இராமசுப்பு அரங்கில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வந்த திருமுருகன்  காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், ``கஜா புயலால் நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அப்போது மக்களை சந்திக்க வராத பிரதமர் மோடி, தற்போது அரசு விழாவை பயன்படுத்தி, தேர்தல் பிரசாரம் செய்ய வரும் 27-ம் தேதி மதுரை வருகிறார். அவருக்கு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக கறுப்புக்கொடி காட்டப்படும். பல்வேறு இயக்க தோழர்களும் மோடிக்கு எதிர்ப்பை தெரிவிப்பார்கள். மோடிக்கு எதிரான அலை என்பது தமிழகத்தில் இயல்பான ஒன்று. அதனால் இதில் இளைஞர்கள் அதிகளவில் கூடுவார்கள்.

தேர்தலில் வெற்றி பெறவே, உயர் சாதியினருக்கு 10 விழுக்காடு  இட ஒதுக்கீட்டை மோடி அரசு அமல்படுத்த நினைக்கிறது. அதற்கும் எதிர்ப்பு தெரிவித்துதான் கறுப்புக்கொடி காட்டுகிறோம். சென்னை லயோலாக் கல்லூரியில் இந்துத்துவாக்கு எதிராக ஓவியங்கள் வைக்கப்பட்டதாக, அதன் காரணமாக கல்லூரியைமூட வேண்டும் என்று நினைக்கின்றனர். அதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாற்றம் செய்யப்பட உள்ள மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில், பெரியாரின்  சிலை நிறுவப்பட வேண்டும். அரசுக்குச் சொந்தமான இடத்தில் துணை முதல்வர் ஆரிய பண்பாட்டினை வளர்க்கும் விதமாக செயல்பட்டுள்ளார். அதை வன்மையாக கண்டிக்கிறோம். அஜித் அறிக்கையால், பா.ஜ.வு-க்கு அவரது ஆதரவு இல்லை என்பதை தெளிவுபடுத்திவிட்டார். பா.ஜ.வு-க்கு யாரும் ஆதரவில்லை. அவருக்கு ஆதரவு தரும் கட்சிகள் பிற்காலத்தில் மக்களால் முழுமையாக ஒதுக்கப்படுவார்கள்'' என்றார்.