Published:Updated:

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: ஜி.கே.வாசன்

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: ஜி.கே.வாசன்
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: ஜி.கே.வாசன்
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது: ஜி.கே.வாசன்

சென்னை: காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடந்தால், அதில் இந்தியா பங்கேற்க கூடாது என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,"காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இலங்கையில் நடத்தினால் அதில் இந்தியா பங்கேற்க கூடாது என்று வலியுறுத்துவோம்.

கூடங்குளம் அணு மின்நிலையத்தில் மின் உற்பத்தியை தொடங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விரைவில் மின் உற்பத்தியை தொடங்கும். அங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தின் மூலம் ஓரளவு மின் தட்டுப்பாடு நீங்கும்.

மத்திய அரசு எந்த பிரச்னையையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயாராக உள்ளது.நாடாளுமன்றத்திற்கு வெளியே விசாரணையை சந்திக்கவும் தயாராக உள்ளது. ஆனால் எதிர்கட்சிகள் இதை ஏற்றுக் கொள்ளாமல் நாடாளுமன்றத்தை முடக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். கர்நாடகத்தில் நிலையான உறுதியான ஆட்சியை தேர்வு செய்து உள்ளார்கள். நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த வெற்றி எதிரொலிக்கும்.

##~~##
மத்திய நிவாரணக்குழு தமிழகத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட்டு சென்றுள்ளது. தமிழக விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்" என்றார்.