Published:Updated:

மோடிக்கு கறுப்புக்கொடி! - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்

மோடிக்கு கறுப்புக்கொடி! - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்
பிரீமியம் ஸ்டோரி
மோடிக்கு கறுப்புக்கொடி! - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்

மோடிக்கு கறுப்புக்கொடி! - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்

மோடிக்கு கறுப்புக்கொடி! - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்

மோடிக்கு கறுப்புக்கொடி! - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்

Published:Updated:
மோடிக்கு கறுப்புக்கொடி! - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்
பிரீமியம் ஸ்டோரி
மோடிக்கு கறுப்புக்கொடி! - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்

பிரதமர் மோடியின் மதுரை வருகை தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பி.ஜே.பி தலைவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், நரேந்திர மோடியின் வருகையை எதிர்த்துக் கறுப்புக்கொடிப் போராட்டம் நடத்துவதற்கு ம.தி.மு.க., மே பதினேழு இயக்கம், பெரியார் உணர்வாளர் கூட்டமைப்பு உள்ளிட்ட இயக்கங்கள் தயாராகிவருகின்றன.

சென்னைக்கு அருகே உள்ள திருவிடந்தையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாதுகாப்புத் தளவாடக் கண்காட்சியைத் திறந்துவைக்க பிரதமர் மோடி வந்தார். அப்போது, அவருக்கு எதிராக நடத்தப்பட்ட கறுப்புக்கொடிப் போராட்டம், டுவிட்டரில் உலக அளவில் ட்ரெண்டு ஆனது. இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவது உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக ஜனவரி 27-ம் தேதி பிரதமர் மோடி மதுரைக்கு வரவிருக்கிறார். அவருக்கு இந்த முறையும் கறுப்புக்கொடி காட்டப்போவதாக சில இயக்கங்கள் அறிவித்துள்ளன. இதற்கு, பி.ஜே.பி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

“எய்ம்ஸ் போன்ற நல்ல திட்டங்களை விரும்பாத நபர்கள் மட்டுமே கறுப்புக்கொடி பற்றி பேசுவார்கள். கறுப்புக்கொடி காண்பித்தால், எங்களிடம் காவிக்கொடி இருக்கிறது. யாருக்காவது தைரியம் இருந்தால், மோடி தமிழகத்துக்கு வரும்போது கறுப்புக்கொடி காட்டட்டும்” என்று சவால் விட்டுள்ளார், பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா. மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனோ, “தமிழகத்தைப் பின்னோக்கி இழுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் பிரதமர் வருகையின்போது கறுப்புக்கொடி காட்டுவார்கள்” என்று காட்டமாகக் கூறியுள்ளார்.

மோடிக்கு கறுப்புக்கொடி! - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்

இது குறித்து நம்மிடம் பேசிய மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, ‘‘மதுரைக்கு பிரதமர் மோடி வருவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக, மத்திய அரசு கொண்டுவந்துள்ள முற்பட்ட வகுப்பினருக்குப் பொருளாதார அடிப்படையில் 10 சதவிகித இடஒதுக்கீடு. இது கடும் கண்டனத்துக்குரியது. இடஒதுக்கீடு என்பது சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களின் முன்னேற்றத்துக்காகக் கொண்டுவரப்பட்டது. அது ஒன்றும் வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல. வறுமையை ஒழிப்பதற்குப் பல்வேறு செயல்திட்டங்கள் இங்கு நடைமுறையில் உள்ளன. அதற்கு புதியத் திட்டங்களையும் இந்திய அரசு நினைத்தால் செயல்படுத்த முடியும். மாறாக, முற்பட்ட சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு என்பதுச் சமூக நீதிக்குச் சவக்குழி வெட்டுகிற நடவடிக்கையே தவிர, வேறொன்றும் அல்ல.

இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தபோது, முதல் எதிர்ப்புக் குரல் தமிழ்நாட்டில் பெரியாரிடமிருந்து எழுந்தது. வேறு எந்த மாநிலத்துக்கும் அப்போது அதன் அவசியம் புரியவில்லை. தமிழ்நாட்டின் எதிர்ப்புக் குரலே இந்தியா முழுவதும் உழைக்கும் மக்களுக்கு இடஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்தது. இன்றைக்கு மீண்டும் அந்த நிலை வந்திருக்கிறது. இப்போதும் இந்தியாவின் பிற மாநில மக்களுக்குச் சமூக நீதி என்றால் என்ன என்று தெரியாத நிலையே இருக்கிறது. தமிழ்நாடுதான் இதற்கான வலுவான எதிர்ப்புக் குரலைப் பதிவுசெய்ய இயலும். எனவே, வரும் 27-ம் தேதி தமிழகம் வரும் மோடிக்கு எதிராகக் கறுப்புக் கொடி போராட்டம் நடத்தவுள்ளோம். அரசியல் சாசனத்துக்கு எதிரான மோடி அரசின் இந்த எதேச்சதிகாரப் போக்கைக் கண்டித்து இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கிறோம்” என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மோடிக்கு கறுப்புக்கொடி! - போராட்டத்துக்குத் தயாராகும் இயக்கங்கள்

ம.தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா நம்மிடம், “டெல்டா மாவட்டங் களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற மக்களுக்கு எதிரான திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது. உலகம் முழுவதும் சுற்றிவரும் பிரதமர் மோடி, கஜா புயலின் கொடூரத் தாக்குதலில் தங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து தவிக்கும் டெல்டா மாவட்ட மக்களை இன்றுவரை சந்திக்கவில்லை. அந்த மக்களுக்கு ஆறுதலாக ஒரு வார்த்தையைக்கூட அவர் உதிர்க்கவில்லை. அப்படிப்பட்டவர் எந்த முகத்தைக் கொண்டு இப்போது தமிழகத்துக்கு வருகிறார்? எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவது நல்ல விஷயம், அதற்கு ஏன் கறுப்புக்கொடி காட்டுகிறீர்கள் என்று சிலர் கேட்கிறார்கள். ஆனால், அவர் மதுரையில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிவைக்கப்போகிறார் என்று கடந்த வாரம் சென்னைக்கு வந்திருக்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜே கூறியுள்ளார். எனவே, வெறும் தேர்தல் ஆதாயத்துக்காகத்தான் மோடி வருகிறார் என்பதை அவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். மோடிக்கு எதிராக எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கறுப்புக்கொடி போராட்டம் நிச்சயம் நடத்தப்படும். ” என்றார் உறுதியாக.

- இ.லோகேஷ்வரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism