Published:Updated:

எடப்பாடியும் எடப்பாடி நிமித்தமும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 8 தெறிப்புகள்!

எடப்பாடியும் எடப்பாடி நிமித்தமும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 8 தெறிப்புகள்!
எடப்பாடியும் எடப்பாடி நிமித்தமும்: 6 நிமிட வாசிப்பில் ஜூ.வி-யின் 8 தெறிப்புகள்!

இந்த இதழ் ஜூனியர் விகடன்: https://bit.ly/2AWa4Uc

இந்த ஜூனியர் விகடன் இதழை வாங்க... இந்த லிங்க்கை க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2TaeHRm

"அ.தி.மு.க உடையும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது என்கிறார்கள். பி.ஜே.பி-க்கு எதிரான தம்பிதுரையின் ரூட்டில் பலரும் போகக்கூடும். அதேபோல, பன்னீரும் குழப்பமான மனநிலையிலேயே இருப்பதால், அவரின் ஆதரவாளர்களும் என்ன மாதிரியான முடிவுகளை எடுப்பார்கள் என்று தெரியாது. எல்லாவற்றையும் மீறி கூட்டணி அமைத்தால், பி.ஜே.பி தொகுதிகளில் அ.தி.மு.க-வினர் எதிர்த்துக்கூட வேலை பார்ப்பார்கள். இதன் காரணமாக தோல்வி ஏற்பட்டால், அது பி.ஜே.பி-யை வெகுவாகவே பாதிக்கும். மத்தியில் அவர்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட்டால், அதுவே அ.தி.மு.க-வின் தலை மீதான கத்தியாகத் தொங்க ஆரம்பித்துவிடும்!"

- தேர்தல் நெருங்க நெருங்க அ.தி.மு.க தலைமைக்கு நெருக்கடிகளும் ஆரம்பித்திருக்கிறது. இதன் பின்னணியை 'உடைகிறதா அ.தி.மு.க? - தனி ரூட் தம்பிதுரை... குழப்பத்தில் ஓ.பி.எஸ்... இறுக்கத்தில் இ.பி.எஸ்!' எனும் தலைப்பில் விவரிக்கிறார் மிஸ்டர் கழுகு.

"பி.ஜே.பி-யுடன் தேர்தல் கூட்டணி வைக்காமல், தேர்தலுக்குப் பிறகு பி.ஜே.பி-யை ஆதரிக்கலாம் என்பதே கட்சியில் பலரின் கருத்தாக உள்ளது. கடந்த சில நாள்களாக, கூட்டணி குறித்து கட்சியின் சீனியர்களிடம் தனித்தனியாக எடப்பாடி பழனிசாமி கருத்துக் கேட்டார். அப்போது, அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணி வேண்டும் என்று ஓர் அணியும், வேண்டாம் என்று இன்னோர் அணியும் கருத்துத் தெரிவித்தன. அதனால், இந்த விஷயத்தில் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் எடப்பாடி இருக்கிறார். பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரையில், அவர் எந்தவொரு முடிவையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கிறார்..."

இந்த இதழ் ஜூனியர் விகடன்: https://bit.ly/2AWa4Uc

கடந்த ஆண்டு நடந்திருக்கவேண்டிய அ.தி.மு.க-வின் பொதுக்குழு, வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் கூடும் என்று சொல்லப்படுகிறது. அதில், பி.ஜே.பி  உடனான கூட்டணி அறிவிப்பை வெளியிட்டால் எதிர்ப்புகள் எழுந்துவிடக் கூடாது என எடப்பாடி தரப்பு இப்போதே அதற்கான மூவ்களை ஆரம்பித்துவிட்டதாம்.

 வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யுடன் அ.தி.மு.க கைகோக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க முகாமிலிருந்து பி.ஜே.பி-யை நோக்கி அடுத்தடுத்து பாயும் விமர்சன அம்புகள், இந்த இரு கட்சிகளிடையே அனலை மூட்டியுள்ளன. இந்தச் சூழலில் 'பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைத்தால், அ.தி.மு.க-வுக்கு சுகமா... சுமையா?' என்ற சிறப்பு அலசல் மிக முக்கியமானது. 

கொல்கத்தா மேடையில் ஒன்றாகக் கைகோத்து நின்று போஸ் கொடுத்துவிட்டது மூலமாக மட்டுமே... 1989 போல, இந்த 2019-ம் வெற்றியைத் தந்துவிடும் என்று நம்பிவிட முடியாது. கையை இறுக்கமாக, மனப்பூர்வமாகப் பற்றியிருந்தால் மட்டுமே பி.ஜே.பி-க்கு எதிரான வாக்குகளை ஒன்றுதிரட்டமுடியும். இல்லையென்றால், வெற்றுச் சடங்காகவே முடியும்.

இதைத்தான், கொல்கத்தாவின் மேடையிலேயே முன்னாள் பிரதமரான தேவகவுடா வெளிப்படையாகச் சொன்னார். "கூட்டணி என்று வந்தால், தொகுதிப் பங்கீடு தொடங்கிப் பல்வேறு பிரச்னைகள் வரும். அதனால், குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுத்துக்கொண்டு தேர்தலைச் சந்திப்போம்" என்று ஒரு யோசனையை அவர் முன்வைத்தார். ஆனால், இதை யாரும் காதுகொடுத்துக் கேட்டதாகத் தெரியவில்லை...

 ஜனவரி 19 அன்று, கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி கூட்டிய 'ஒருங்கிணைந்த இந்தியா' என்கிற மாநாடு, இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறது. இது தொடர்பான அரசியல் கட்டுரையே, '1989-2019... கொல்கத்தாவில் திரும்பிய வரலாறு!'

அ.தி.மு.க அரசில் 'சக்தி' வாய்ந்த அமைச்சர்களாக வலம் வருபவர்கள், தங்களின் மாவட்டங்கள் மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள தங்களின் துறை சார்ந்த முக்கியப் பதவிகளில், தங்களுக்கு வளைந்துகொடுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளையே பல ஆண்டுகளாக அமரவைத்துள்ளனர். இதனால், தங்களுக்கான பதவி உயர்வு உள்ளிட்ட வாய்ப்புகள் பறிபோவதாக ஐஏஎஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் குமுறல் சத்தம் கேட்கிறது.

மாவட்டத்தின் பிரச்னைகள், வளர்ச்சி, தேவைகள் ஆகியவற்றை அறிந்து, அவற்றுக்கேற்ப திறன்படைத்த ஐஏஎஸ் அதிகாரிகளை மாவட்ட ஆட்சியராக நியமிப்பது என்பது நீண்டகாலமாக நடைமுறையில் இருந்தது. 2012-க்குப் பின்னர், அதில் பெரிய மாற்றம். அந்தந்தத் துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் நினைப்பவர்கள் மட்டுமே, அவர்களின் துறைச் செயலாளராக ஆகமுடியும். அதேபோல, தாங்கள் இட்ட காரியத்தை மாவட்டத்தில் பணிவுடன் நிறைவேற்றுபவர்களை மட்டுமே, ஆட்சியராக வைத்திருப்பது என்பதை எழுதப்படாத சட்டமாகவே அமைச்சர்கள் மாற்றியுள்ளனர்.

 இதன் முழுப் பின்னணியையும், தற்போதைய நிலவரத்தையும் தெளிவாக விவரிக்கிறது, 'கனவாகும் கலெக்டர் பதவி... அனலாய் கொதிக்கும் ஐஏஎஸ்-கள்!' எனும் முக்கிய செய்திக் கட்டுரை.

சசிகலாவும் இளவரசியும் சாதாரண உடைகளில் பைகளுடன் வெளியிலிருந்து சிறைக்குள் வரும் வீடியோ காட்சிகள்குறித்த விசாரணையில், 'இருவரும் பார்வையாளர்களைச் சந்திக்கச் சென்றுவந்தனர்' என்று சிறை ஆவணங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால், சிறைக்குள் இருந்து அவர்கள் சென்ற நேரமும், திரும்பி வந்த நேரமும் ஒத்துப்போகவில்லை. விசாரணையிலிருந்து தப்பிக்க, சிறை ஆவணங்களில் தவறான தகவல்களை அதிகாரிகள் பதிவுசெய்துள்ளதாகவே இதைக் கருத முடியும்" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இதழ் ஜூனியர் விகடன்: https://bit.ly/2AWa4Uc

இந்த விவகாரம்குறித்து ரூபாவிடம் பேசியபோது, 'பார்வையாளர்களை சந்திக்கச் சென்ற நேரமும், மீண்டும் சிறைக்குத் திரும்பும் வீடியோ காட்சிகளின் நேரத்திலும் விதிமீறல் உள்ளதாக வினய்குமார் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அதில் முழுமையான விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான், சசிகலா எங்கே சென்று திரும்பினார் என்ற விவரம் தெரியவரும். இதுகுறித்து கர்நாடக லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இதிலிருந்து சசிகலா தப்பமுடியாது" என்றார் உறுதியாக.

 பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா சிறப்புச் சலுகைகள் பெற்றது உண்மைதான் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், வேறு சிறைக்கு சசிகலா மாற்றப்பட உள்ளார், அவருக்கு இனி பரோல் கிடைக்காது என்பதுபோன்ற தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. அதுகுறித்த உறுதியான விவரங்களைத் தரும் செய்திக் கட்டுரை: "சிறை விதிகள் மீறல் வழக்கு... சசிகலாவால் தப்ப முடியாது!" - டிஐஜி ரூபா அதிரடி.

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம் இப்போது பூதாகரமாக மாறியிருப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர், 'தெஹல்கா' பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான மேத்யூ சாமுவேல். இப்போது, அவர்மீதே புகார் பட்டியல் வாசிக்கப்படுகிறது. 

"அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் ஆகியோரை மிரட்டிப் பணம்பறிப்பதுதான் மேத்யூ சாமுவேலின் வேலை" என்று திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகேயுள்ள காட்டுப்பாக்கத்தில், சமீபத்தில் நடந்த அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆக்ரோஷம் காட்டினார். "பிளாக்மெயில் செய்பவர் மேத்யூ சாமுவேல்" என்று எடப்பாடி கூறிய பிறகு, மேத்யூ சாமுவேல் பற்றிய தேடல் தொடங்கிவிட்டது. 'அவர் அப்படிப்பட்ட ஆளா? இதெல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு எப்படித் தெரியும்?' என்று நாலா புறங்களிலிருந்தும் கேள்விகள் கிளம்பிக்கொண்டிருக்கின்றன. 

இதன் பின்னணியை ஜூ.வி ஆராய ஆரம்பித்தபோது, இந்த விவரங்கள் எல்லாம் முதல்வர் வரை சென்றதே... துப்பறியும் நிபுணரும் உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான வரதராஜன் மூலமாகத்தான் என்பது தெரியவந்தது. அவரிடம் பேசியதுடன், வரதராஜன் அள்ளிவைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக மேத்யூ சாமுவேலிடம் பதில்களைப் பெற்று, பதிவு செய்திருக்கும் முக்கிய செய்திக் கட்டுரை: "பிளாக்மெயில் செய்பவர் !" - புது பூகம்பம் கிளப்பும் வரதராஜன்.

"எஸ்டேட்டில் என்ன நடந்தது?"

"என் காரை தூரத்தில் நிறுத்திவிட்டு, மற்ற இரண்டு கார்களில் 11 பேரும் சென்றோம். இரவு 12 மணிக்குள் எஸ்டேட்டை நெருங்கிவிட்டோம். கரன்ட் இருக்காது, சி.சி.டி.வி வேலை செய்யாது என்று கனகராஜ் முன்பே கூறியிருந்தார். முதல் கேட் காவலாளி, லாரியில் படுத்திருந்தார். அவரை கட்டிப்போட்டுவிட்டுச் சென்றோம். இரண்டாவது கேட் காவலாளிதான் ஓம் பகதூர். ஒரு மரத்தில் கட்டிவைத்து, கத்தக்கூடாது என்பதற்காக அவரது வாயில் துணியைத் திணித்துவைத்தோம். அங்கே, ஜன்னல்களுக்கு கம்பிகள் இல்லை. எனவே, கண்ணாடிக் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றோம். ஜெயலலிதாவின் அறை, சசிகலாவின் அறை என ஒவ்வோர் அறையாக டார்ச் வெளிச்சத்தில் தேடினோம். ஜெயலலிதா அறையில் இருந்த சில ஆவணங்களை எடுத்து தன் பையில் கனகராஜ் வைத்தார். அதை நானும் ஜம்ஷித்தும் பார்த்தோம். சசிகலாவின் அறையிலும் சில ஆவணங்களை அவர் எடுத்தார். சுமார் இரண்டு மணி நேரம் பங்களாவுக்குள் இருந்தோம். கூட இருந்தவர்கள் எடுத்த பொருள்களை நாங்கள் பார்க்கவில்லை. பணத்தை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டனர் என  வெளியே இருந்தவர்களிடம் பொய் சொல்லிவிட்டு, நானும் கனகராஜும் கோவைக்குக் கிளம்பினோம். மற்றவர்கள் கூடலூர் சென்றார்கள்."

இந்த இதழ் ஜூனியர் விகடன்: https://bit.ly/2AWa4Uc

- கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய , 'முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு உள்ளது என்று கனகராஜ் சொன்னதால்தான் இதையெல்லாம் செய்தேன்' என்று வாய்திறந்த அன்று உருவான அதிர்வலைகள் இன்று வரை ஓயவில்லை. இந்த விஷயம்தான் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக சுழன்றுகொண்டே இருக்கிறது. எடப்பாடியே, பொங்கி எழுந்து திட்டித்தீர்க்கும் அளவுக்கு விஷயம் சீரியஸாகிக்கொண்டுள்ளது. இந்நிலையில், ஜூ.வி முன்வைத்த கேள்விகளுக்குத் தயங்காமல் பதில்களைத் தந்தார் ஷயான். "எங்கள் வாயை மூட எதையும் செய்வார் எடப்பாடி!" எனும் அந்தப் பேட்டி மிகவும் கவனிக்கத்தக்கது. 

"ஷயான் கூலிப்படையைச் சேர்ந்தவன். அவன் கொள்ளையடிப்பதற்காக கொடநாடு பங்களா போகிறான். எப்படி பங்களாவுக்குள் போனான் என்பதை, எல்லா ஊடகங்களிலும் சொல்லிவிட்டான். ஜெயலலிதா மறைந்த பிறகு, கொடநாடு பங்களா யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் அந்த பங்களா இருக்கும்போது, அங்கு என்னைப் பற்றி ஏதாவது ஆதாரம் இருந்திருந்தால், சசிகலா குடும்பத்தினர் என்னை விட்டு வைப்பார்களா? ஒரு ஆதாரமாவது கிடைத்திருந்தால் போதும், என்ன பாடுபடுத்தி இருப்பார்கள்? ஒரு பெரிய ஆதாரம் பங்களாவில் இருந்ததாம். அதை நான் எடுக்கச் சொன்னேனாம். எவ்வளவுபெரிய கட்டுக் கதையை தி.மு.க-வினர் அவிழ்த்துவிடுகிறார்கள்..."

 காட்டுப்பாக்கத்தில் நடந்த எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பொங்கித் தீர்த்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. எம்.ஜி.ஆர் புகழ் பாடவேண்டிய அந்தப் பொதுக்கூட்டம், 'கொலைப்பழி விளக்க'ப் பொதுக்கூட்டமாகவே நடந்துமுடிந்தது. அவரது உள்ளக் குமுறலை அப்படியே தருகிறது 'எத்தனையோ வழக்குகளைப் பார்த்தவன்... தவிடுபொடியாக்குவேன்!' எனும் செய்திக் கட்டுரை. 

இந்த ஜூனியர் விகடன் இதழை வாங்க... இந்த லிங்க்கை க்ளிக் பண்ணுங்க: https://bit.ly/2TaeHRm