“கொடநாடு விவகாரத்தில் தன் மீது குற்றம் இல்லை என்பதை நிரூபிக்க நெருப்பாற்றில் நீந்துவார், கடலில் இறங்குவார் எங்கள் அண்ணன் எடப்பாடி பழனிசாமி” என்று திகில் ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. ‘என்னய்யா என்னை வச்சு கொறளி வித்தைக் காட்டுறீங்களா?’ என சைலன்ட்டாகப் பொருமுகிறாராம் எடப்பாடி. அதென்ன பிரமாதம். மற்ற அமைச்சர்கள் சொல்வதையும் கேட்டுவிடலாம்.

அமைச்சர் ஓ.எஸ் மணியன்
“புயலையே தடுக்கும் சக்தி படைத்தவர் மீது இப்படி ஒரு அபாண்டமா? அதனால், அடுத்த புயலுக்கு எங்கள் அண்ணனின் பெயரை வைக்கத் தீர்மானித்திருக்கிறோம். புயல் அறிவிப்பு வந்த நொடியே அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கடற்கரையில் நின்று கொண்டு பொங்கிவரும் கடல் அலைகளை, தனது இரு கரங்களால் தடுத்து, தமிழகத்தைக் காப்பாற்றுவார்.”

அமைச்சர் செல்லூர் ராஜு
“அண்ணன் மீது தவறு இல்லை என்பதை நிரூபிக்க, வைகை அணை முழுவதையும் ஒரே ஒரு தெர்மாகோலில் ஏறி நின்று வலம் வருவார். உதயசூரியன் உதிப்பதால்தானே தி.மு.க-வினர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகிறார்கள்... அவர்களின் கொட்டத்தை அடக்க மிகப்பெரிய தார்ப்பாய் ஏந்தி, சூரியனையே தமிழகத்தின்மீது படாமல் மறைப்பார் எங்கள் அண்ணன் எடப்பாடி பழனிசாமி.”

அமைச்சர் ஜெயக்குமார்
எங்களைப் போன்ற மாவீரர்கள் மீது குற்றச்சாட்டுகள் வருவது எல்லாம் சகஜம். அதையெல்லாம் நிரூபிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அதனால், வருங்காலத்தில் என்னுடன் மேடையில் தோன்றி எம்.ஜி.ஆர் பாடல்களைப் பாடி தமிழகத்தை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவார் அண்ணன் எடப்பாடி பழனிசாமி.”

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
“இதை ஒரு வனத்துறை அமைச்சராகக் கூறுகிறேன். சாது பொங்கினால் காடு தாங்காது என்பார்கள். சாதுவாக இருக்கும் எங்கள் அண்ணன் எடப்பாடி பழனிசாமி பொங்கினால், அவர் பொங்கித் தீர்க்கத் தமிழகத்தின் மொத்த வனப் பகுதிகளும் அவருக்காகத் திறந்துவிடப்படும்.”

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
“கலியுகம் தொடரத் தோன்றுவார் மாமனிதர். அண்ணன் எடப்பாடி அவர்கள் அப்படியான மாபெரும் புனிதர். இதை வெறுமனே சொல்லவில்லை. தொல்பொருள் ஆராய்ச்சித் துறை கண்டெடுத்த கல்வெட்டுக்களில் இதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. விரைவில் எடப்பாடி பழனிசாமி அண்ணனை வைத்தே அதை வெளியிடுவோம்.”