‘முற்பட்ட சமூகத்தினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்குப் பத்து சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின் முடிவை தமிழக அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன. ஆனால், இந்த இடஒதுக்கீட்டுக்கான மசோதாவை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாக்களித்தது. உழைப்பாளிகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இயங்கிவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த முடிவு, தமிழக அரசியல் களத்தில் பரவலான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில்தான், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான டி.கே.ரங்கராஜனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘சமுக நீதியை நிலைநாட்டும் இடஒதுக்கீட்டுத் தத்துவத்தை, பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பிரித்துப்பார்ப்பது சரியா?’’

‘‘இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட போது, தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு உருவாக்கப்பட்டது. அதுவும்கூட பத்து ஆண்டுகளுக்கு மட்டுமே என்ற நிபந்தனையுடனே கொடுக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு, பிற்காலத்தில் வந்தது. அன்றைய காலக்கட்டம் முதலே, ‘முற்பட்ட சமூகத்தில் உள்ள ஏழை மக்களுக்கும் இடஒதுக்கீடு தரப்பட வேண்டும்’ என்பதுதான், இடதுசாரிகளின் கருத்தாக இருந்துவருகிறது. நாங்கள் எப்போதும் இதில் தெளிவாக இருக்கிறோம். எனவே, இந்த முடிவைத் திடீரென நாங்கள் எடுக்கவில்லை.’’

‘‘இடதுசாரிகளின் கருத்து என்கிறீர்கள்... இந்த மசோதாவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவிக்கவில்லையே?’’

‘‘அதை அவர்களிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். ‘இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாம்’ என்பது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவு. ‘ஆதரவாக வாக்களிக்கலாம்’ என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவு. ஆக, எங்கள் கட்சி என்ன முடிவு எடுத்திருக்கிறதோ... அதைத்தான் நான் செய்ய முடியும்.’’

‘‘பத்து சதவிகித இடஒதுக்கீடு குறித்த உங்களின் கருத்தை அழுத்தமாக மறுத்துப் பேசியிருக்கிறாரே தா.பாண்டியன்?’’

‘‘நான் மதிக்கத்தக்க தலைவர்களில் தா.பாண்டியனும் ஒருவர். ஆனால், புதுச்சேரியில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், 37-ம் பக்கத்தில், ‘பொருளாதார ரீதியாகப் பின்தங்கியிருப்பவர்களுக்கும் இடஒதுக்கீடு கொடுக்கலாம்’ என்று இருந்தது. அவர்களது கட்சியின் அடிப்படைத் திட்டமும் இதைத்தான் சொல்கிறது. ஆனால், இப்போது அதையே அவர்கள் மறுக்கிறார்கள் என்றால், அது அவர்களின் சொந்த முடிவு. ‘உங்கள் முடிவையே ஏன் எதிர்க்கிறீர்கள்?’ என்று நான் அவர்களைக் கேட்க முடியாது. ஆக, தா.பாண்டியன் சொல்லியிருப்பது அவரது கட்சியின் கருத்தல்ல என்பதுதான் என் கருத்து!’’

‘‘முற்பட்ட சாதியினரில் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு என்பது, ஏற்கெனவே தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை நீர்த்துப்போகச் செய்யும் முயற்சி என்ற குற்றச்சாட்டு பற்றி?”

‘‘தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களின் முன்னேற்றத்துக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களுக்கான இடஒதுக்கீடு முழுவதுமாக நிறைவேற்றப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல், நிலச்சீர்திருத்தத்தின் மூலம் அவர்களுக்கு நிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும். இதற்காக, இடதுசாரி இயக்கங்கள்தான் நீண்டகாலமாகப் போராடிவருகிறோம். ஜெயலலிதா ஆட்சியின்போது, அரசு ஊழியர்கள் ஒட்டுமொத்தமாகப் பணிநீக்கம் செய்யப்பட்ட போது, அவர்களுக்காக எங்களுடைய இயக்கம்தான் உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடியது. பாதிக்கப்பட்ட அந்த அரசு ஊழியர்களில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் உட்பட அனைவரும் இருந்தார்கள். எனவே, பாதிக்கப்படுவோர் எந்தச் சமூகமாக இருந்தாலும், அவர்களுக்காகப் போராடுவதே உன்னதமான நோக்கமாக இருக்க முடியும். தவிர, ஒவ்வோர் இயக்கத்துக்கும் ஒவ்வொரு கருத்து உண்டு. இதுதான் ஜனநாயகம். இதில், யார் கருத்து சரி என்று இறுதி முடிவை எடுப்பது மக்கள்தான்.’’

‘‘தனியார் துறையிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டுவருகிறது. ஆனால், முற்பட்ட சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு மட்டும் தனியார் துறையிலும் அமல்படுத்தப்படும்படிச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது எந்த வகையில் நியாயம்?’’

‘‘தனியார் துறையில், கல்வியில் மட்டுமே இடஒதுக்கீடு கிடைக்க இதில் வழி செய்யப்பட்டிருக்கிறது. இந்த இடஒதுக்கீட்டைத் தேர்தல் ஆதாயத்துக்காக பி.ஜே.பி அரசு கொண்டுவந்துள்ளது. அந்தச் சதியை அம்பலப்படுத்துவதற்கான வாய்ப்பாகத்தான் எங்களது எதிர்ப்பை முதலில் தெரிவித்துவிட்டு, பின்னர் இந்த மசோதாவை ஆதரித்தோம். ஆக, எதிர்த்து வாக்களித்தவர்களுக்கு என்ன நோக்கம் இருக்கிறதோ, அதே நோக்கம்தான் ஆதரித்து வாக்களித்த எங்களுக்கும் இருக்கிறது.’’

‘‘அப்படியென்றால், கம்யூனிஸ்ட்களும் வாக்கு அரசியலை மையமாக வைத்துத்தான் இயங்குகிறீர்களா?’’

‘‘எங்களைப் பற்றிய ஒவ்வொருவரின் கருத்துக்கும் நாங்கள் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ‘கம்யூனிஸ்ட்கள் நல்லவர்கள், நல்லவர்கள் இல்லை’ என்று பலவிதமான கருத்துகளைப் பலரும் சொல்லிக்கொண்டிருக் கிறார்கள். அது அவரவர் தனிப்பட்ட உரிமை. வரலாறுதான் இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லும்.’’

- த.கதிரவன், படம்: பிரியங்கா