Published:Updated:

"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி

"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி
"இனி எந்தத் தேர்தலிலும் போட்டி இல்லை" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கிரண் பேடி

`இனி எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்' என கிரண் பேடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநராகப் பதவி வகித்து வரும் கிரண்பேடி, வரும் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிடப் போகிறார் என்றும், ஆந்திர மாநிலத்தின் ஆளுநராக அவர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவிக்கொண்டிருந்தது. அதுகுறித்து, ஆதிதிராவிட நலத்துறையில் இன்று ஆய்வு மேற்கொண்ட கிரண்பேடியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், "ஆந்திர மாநிலத்தின் ஆளுநராக நான் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கடந்த ஓராண்டாகச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இது வதந்தியாக இருக்கலாம். அப்படியான வதந்திகள் பரவுவதில் எந்தத் தவறும் இல்லை. பாராளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல, இனி எந்தவொரு தேர்தலிலும் நான் போட்டியிட மாட்டேன். நான், எப்போதும் ஒரு நிர்வாகியாக மட்டுமே செயல்பட விரும்புகிறேன். நான் அரசியல்வாதியில்லை. தேர்தலில் யாருடனும் மோத விரும்பவில்லை" என்றார்.

இதன்மூலம், புதுச்சேரி அரசியலில் வலம் வந்துகொண்டிருந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் கிரண் பேடி.