Published:Updated:

`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்!’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்

`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்!’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்
`கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகத்தான் இந்தத் திட்டம்!’ - கொதிக்கும் கேபிள் டி.வி ஆபரேட்டர்கள்

த்திய அரசின் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய், சேனல்களுக்கான புதிய கட்டண முறையை அறிமுகப் படுத்தியுள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள கேபிள் டி.பி ஆபரேட்டர்களும், பொது மக்களும் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறிவந்த நிலையில், மத்திய அரசின் இந்த புதிய கட்டண நிர்ணயத்திற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழக கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் பொதுநலச் சங்க மாநில துணைத் தலைவர் தாமோதரனிடம் பேசினோம். ``தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய், மக்கள் தாங்கள் விரும்பும் சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்திப் பெறலாம் என்ற புதிய விதிமுறையைக் கொண்டுவந்தது. இதன்மூலம் குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கிவந்த பல சேனல்கள் எல்லாம் தங்களின் கட்டணத்தை உயர்த்தியுள்ளன. எங்களின்  கேபிள் சேவைகளால் அதிகம் பயன்பெறுபவர்கள் கிராமப்புற மக்கள்தான். நாங்கள், கிராமங்களில் கேபிள் சேவைகளை 180 ரூபாய்க்கு வழங்கிவருகிறோம். ஆனால், புதிய கட்டண முறை மூலம் தற்போது நாங்கள் வழங்கிவரும் சேனல்களை எல்லாம், குறைந்தது 1000 ரூபாய் செலுத்தினால்தான் பெற முடியும்.

இந்தப் புதிய திட்டத்தின்மூலம் பல ஆண்டுகளாக கேபிள் ஆபரேட்டராக இந்தத் தொழிலில்  ஈடுபட்டுவரும் சாதாரண மக்களை இதிலிருந்து நீக்கிப் பல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லாபம் கொண்டுவர இதன்மூலம் முயல்கிறார்கள். அதேபோல புதிதாகக் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி-யில், கேபிள் டிவிக்கு 18% விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாரமும் பொதுமக்களின் மீதுதான் திணிக்கப்படப் போகிறது, மக்கள்தான்  அதிகம் பாதிக்கப்பட உள்ளனர். அதேபோல, இந்தப் புதிய முறையை உடனடியாக அமல்படுத்தப் போதுமான தொழில்நுட்பங்களும் நம்மிடம் இல்லை. எனவே, இந்தப் புதிய கட்டண முறையைத் தொலைக்காட்சி நிறுவனங்கள், கேபிள் டி.வி  நிறுவனங்கள், கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோரிடம் கருத்துக் கேட்டு, நல்ல முடிவை எடுக்க வேண்டும். இல்லை எனில், நாடு முழுவதும் உள்ள ஆபரேட்டர்களிடம் கலந்து ஆலோசித்து, மீண்டும் வேலை நிறுத்தம் தொடரும்” என்றார்.